#conspiracy; அல்லக்கைகள் செய்யும் “சதி”. திருமாவளவன் உயிருக்கு ஆபத்து?

April 27, 2026

By இரா. தேவேந்திரன்.

 #vck special story;

திருமாவளவன் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் 2019 காலகட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையிலும், 2016 ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் தன்னை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது தொலைபேசி வாயிலாகவும் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.Madras High Court - Wikipediaதமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிற விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் அரசியல் பண்பட்ட நிலையில் ஒரு மன இறுக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் கூட்டணி வைத்துள்ளார் தாங்கள் கேட்ட தொகுதிகளும் தரவில்லை. தாங்கள் கேட்ட சீட்டு எண்ணிக்கையும் தரவில்லை.

இதில் சற்று மன உளைச்சலில் இருக்கும் திருமாவளவனுக்கு வலது, இடது என இருக்கும் சில அல்லக்கைகள் அவரின் மனநிலையைப் புரிந்து கொண்டு போட்டுக் கொடுத்து சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்கிறார்கள் திருமாவின் நம்பிக்கை கூறிய சில நண்பர்களும், தொழிலதிபர்களும்.

Challenging the Status Quo: Thirumavalavan on Regional Power

இந்தியாவில் பாசிச மதவாத கட்சி பிஜேபி எந்த நிலையிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்பதில் ஆணித்தரமாக இருப்பவர் விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன். ஆனால் அவருக்கு பல கோடி ரூபாய் விலைபேசியும் மத்திய அமைச்சர் பதவி தருகிறோம் என்று சொல்லியும் கூட விரும்பாத அவர் சமூக நலன் காக்க தன் உயிரை பணயம் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிற திருமாவளவனை அவருடன் இருக்கும் சிலர் நான் தலைவரை சம்மதிக்க வைக்கிறேன். நான் சொன்னால் தலைவர் கேட்பார் என பலர் பல இடங்களில் பேசி அவருக்கு ஒரு விலையை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சீட்டு கிடைக்காத சிலர் கட்சி தாவும் எண்ணத்தில் இருக்கிறார்கள் எனவும், கட்சி மாறுவது பற்றி வெளிப்படையாகவே பேசுகிறார்கள் எனவும் சொல்கிறார்கள் விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ள சில முன்னணி தலைவர்கள்.எனவே தமிழக அரசு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும். அவர் எம்.பியாக இருப்பதால் மத்திய உள்துறை  அவருக்கு  z +  பாதுகாப்பு தர வேண்டும். மேலும் எந்த கட்சி தலைவர்கள் மற்றும்  கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சந்திக்க வந்தாலும் அவர்களை கடுமையான சோதனை செய்ததற்குப் பிறகு திருமாவளவனை  சந்திக்க வேண்டும் என்கிற புதிய கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். திருமாவளவனின் நலம் விரும்பிகள் உலக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பின்பற்றியாக வேண்டும்.  ரஷ்ய அதிபர், கியூபா அதிபர் போன்ற தலைவர்களை கொள்ள பல சதிகள் செய்ததை  மறக்க முடியாது.Tamil Nadu govt should conduct thorough inquiry": VCK Chief Thirumavalavan on Dalit man death in police custodyஆனால் திருமாவளவனை அன்பு என்கிற பெயரில் பாசம் என்கிற பெயரில் சிலர் நெருக்கமாக தங்கள் வீட்டிற்கு சாப்பிட அழைப்பது அல்லது தங்கள் வீட்டில் சமைத்ததை கொண்டு அவரை சாப்பிட சொல்லி வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்கின்றனர்.

மேலும் அவர் தற்போது சைவப் பிரியராக மாறி உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சைவ உணவுகளையே சாப்பிடுகிறார் அந்த உணவுகளிலும் கூட கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர். மரம் வெட்டி சமூகத்தில் உள்ள சிலர் அவருக்கு எதிராக கூட மாறக்கூடும் ஏன் அவர் நம்பிக்கை நட்சத்திரமாக கருதுகிற ஒரு சிலர் கூட அவருக்கு எதிராக மாறலாம்.

பல முக்கிய கட்சிகளுக்கு கைக்கூலிகளாக மாறலாம் ஸ்லீப்பர் செல்லாக கூட மாறலாம் என்கின்றனர். திருமாவின் நலத்தை எதிர்பார்க்கும் சில நண்பர்கள்.

எனவே விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது எந்த உணவுகளையும் அதாவது தண்ணீர், தேநீர், மோர் போன்ற எந்த உணவுகளையும் அவர் எடுத்துக் கொள்ளக் கூடாது. சில நம்பிக்கையான அரசியல் தலைவர்கள் வீடுகளாக இருந்தாலும் கூட அவர் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் திருமாவின் நலத்தை விரும்புபவர்கள்.VCK will stick to ideology-driven DMK alliance, says Thirumavalavan | Chennai News - The Times of Indiaசில நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள் அவரை பாதுகாக்க ஒரு நல்ல துணை வேண்டும் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு வயதோ வரம்பு வித்தியாசம் இல்லை. தங்களைப் பார்த்துக் கொள்வதற்கு 60பது வயதோ 65 வயதானாலும் கூட ஒரு நல்ல பெண்கள் அல்லது ஒரு துணைவர் இருந்தால் அவரின் உயிரை  அல்லது அவரது உடல் நலத்தை பத்திரமாக பாதுகாக்கலாம் என்கின்றனர் சில மூத்த நிர்வாகிகளும் சில ஐஏஎஸ் அதிகாரிகளும்.Challenging the Status Quo: Thirumavalavan on Regional Powerஅதுபோல ஆடை அணிவதிலும் காலணி அணிவதிலும் கண்ணாடி அணிவதிலும் கூட திருமாவளவன் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர். கடல் கடந்து வாழும் சில தமிழர்கள்.

எனவே விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் எந்தவிதமான எதிர்ப்புகள் வந்தாலும் விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு துணையை அவர் உடனடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் அப்போதுதான் சமூகத்திற்கும் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நீதிக்காக அவர்களின் கல்விக்காக அவர்களின் சுதந்திர விடுதலைக்காக போராடுகிற ஒரு தலைவர் நிச்சயம் வேண்டும் எனவே அவர் தன்னை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள ஒரு துணையை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சில திருமாவின் நம்பிக்கை நலம் விரும்பிகள்.

ஏற்கனவே திருமாவளவன் உடன் நெருக்கமாக பழகி வந்த சில பத்திரிகையாளர்கள் பல உதவிகளைப் பெற்றுக் கொண்டு சில துரோகிகளிடம் தஞ்சம் புகுந்து அவருக்கு எதிராக தவறான பல விமர்சனங்களை முன்வைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். இவர்களால் கூட அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்கின்றனர் விடுதலை சிறுத்தைகளின் மூத்த நிர்வாகிகள்.

Conspiracy Mentality Tends to Be Pronounced on the Political Fringes | Lab Managerஅவரது அக்காவின் மரணத்திற்கு பிறகு அவரது உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள அல்லது அவரை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள நல்ல நம்பிக்கைக்குரிய நபர்கள் யாரும் இல்லை எனவே எந்த வித விமர்சனத்தையும் கண்டு கொள்ளாமல் அவர் ஒரு துணையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த உலகமெல்லாம் வாழும் தமிழர்களின் விருப்பமாக உள்ளது.

இந்த செய்தி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தரப்பிலோ அல்லது கட்சியின் தலைவர் திருமாவளவன் தரப்பிலோ அவர்களது விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

Share:

இரா. தேவேந்திரன்.

April 27, 2026

Leave a Comment