#TVK & VCK; த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க.வுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்க விஜய் முடிவு.

May 9, 2026

By தேவா ஹேமா

#tn election26 #tvk #vck #special story #big story

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க பத்து இடங்கள் தேவை என்கிற நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளிடம் தனக்கு ஆதரவு அளிக்கும்படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

இருப்பினும் திமுக கூட்டணியில் இவர்கள் அங்கம் வகிப்பதால் உடனடியாக பதில் சொல்லாமல் தங்களது கட்சியின் உயர்நிலைக் கூட்டங்களை நடத்தி அதன் மூலம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்ற நிலையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் வெளிப்படையாக காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்து விட்ட நிலையில் இடதுசாரிகளும் விடுதலை சிறுத்தை கட்சிகளும் இன்னும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை.

காமராஜரின் ஆட்சிக்காலம் - தமிழகத்தின் பொற்காலம்Dr. Bhimrao Ramji Ambedkar and Sangh - VSK Telangana

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தங்களது கட்சியை சேர்ந்த ஒருவருக்கு தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை ஆதவர் அர்ஜுனா ஏற்றுக்கொண்டு தங்களது கட்சித் தலைவர் விஜயிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

அவரும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் கண்டிப்பாக கொடுத்து விடலாம் என உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. காமராஜர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் தலித் சமூகத்தை சார்ந்த ஒருவருக்கு இதுவரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு தூக்கம் போனது.. வெள்ளிக்கிழமை நோ.. சனிக்கிழமை காலையில் முடிவு - திருமா | VCK High-Level Meeting Today: Thirumavalavan to Decide on TVK Government Support with Press Meet ...

இந்த நிலையில் ஏறக்குறைய தலித் சமுகத்தை சார்ந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுத் தொகுதியில் நிற்பதற்கான வாய்ப்பை விஜய் வழங்கியுள்ளார். அதேபோல பெண்களையும் அதிக அளவில் தங்களது கட்சி சார்பில் வேட்பாளர்களாக களம் இறக்கி வெற்றியும் கண்டுள்ளார். எனவே தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொள்கை கோட்பாட்டின் படி தலித் சமுகத்தை சார்ந்தவருக்கு இந்து அறநிலைத்துறை வழங்குவதில் தங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்று தங்களது தரப்பில் திருமாவளவன் அவர்களுக்கு தெரிவித்ததாக தவெக சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அமைய இருக்கும் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ஒருவருக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கே அந்தப் பதவி வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே அவர் நிற்பதாக சொல்லப்பட்ட காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்து விட்டு இவர் களத்தில் நின்று வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பெறக்கூடும் என்கிறார்கள் சிலர்.

ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தமிழக அரசியல் கட்சிகளில் பாராளுமன்றத்தில் வைகோ விற்கு பிறகு திருமாவளவன் தான் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்துப் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதால் அவர் இதற்கு ஏற்றுக் கொள்ளாமல் தங்களது கட்சியினருக்கு அந்த வாய்ப்பை வழங்கி இவர் ஒன்றிய அரசை எதிர்க்கும் வகையில் பாராளுமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் போர்படை தளபதியாக கர்ஜிப்பார் என்கிறார்கள் சில முக்கிய நிர்வாகிகள்.

இன்னும் ஓரிரு நாட்களில் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடும் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதும் தெரிந்துவிடும்.

Share:

தேவா ஹேமா

May 9, 2026

Leave a Comment