திமுகவிற்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இனி தேவையில்லை. அவரால் தான் திமுக தோல்வியடையந்தது தொண்டர்களின் மன நிலை என்ன என்பதை தலைவர் ஸ்டாலின் உணர்ந்து செயல்படவேண்டும் இந்த செய்தி அவருடைய காதுக்கு சென்று சேரவேண்டும் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர் லோகநாதன் என்பவர் தனது முக நூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு தற்போது பத்திரிகையாளர்கள் மத்தியிலும் திமுகவின் முக்கிய நிர்வகிகள் இடத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி பேசுபொருளாகியும் உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததற்கு PEN அமைப்பும் ஒரு காரணம் என்று திமுக தொண்டர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
மூத்த பத்திரிகையாளர் லோகநாதன்.
மாநிலத்தில் நடப்பதை கணிக்கத் தெரியாத அமைப்புக்கு கோடிக்கணக்கில் திமுக தொண்டர்களின் பணம் செலவழிக்கப்பட்டு விட்டதாக அவர்கள் மனம் வெதும்புகிறார்கள்.
கணிக்கும் திறன் இல்லாவிட்டால் அந்த தொழிலை விட்டு PEN நிறுவனம் விலகி இருக்க வேண்டும் என்றும் திமுகவினர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இத்தனைக்கும் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் அப்போதைய முதல்வர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆவார்..
மாமனாருக்கு துணை நிற்க வேண்டிய சபரீசன் எங்கோ சறுக்கி விட்டார் இன்னும் அவரை வைத்து கொண்டு இருக்கலாமா என்ற கேள்வி திமுக வட்டாரத்தில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்.
தலைவரின் மருமகன் என்ற அளவில் சபரீசன் அவர்கள் குடும்பத்தில் இருக்கட்டும் என்றும் கட்சி விவகாரங்களுக்கு எந்த விதத்திலும் அவரது சேவை தேவை இல்லை என்றும் அவர்கள் குமுறுகிறார்கள்.
முரசொலி மாறன்.
கலைஞருக்கு மருமகன் முரசொலி மாறன் ஒரு மனசாட்சியாகவும் அவரின் நிழலாகவும் இருந்து வந்தார் என்றும் ஸ்டாலினுக்கு மருமகன் சபரீசன் பலனற்ற சாட்சியாக இருந்தார் என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.. தாய்மாமனுக்கு துயர் வந்த போதெல்லாம் தாங்கி பிடித்தார் முரசொலி மாறன்.
மு.கருணாநிதி.
ஆனால் சபரீசனோ ஸ்டாலினுக்கு மருமகன் தானே…
தாய்மாமன் மீது மருமகன் வைத்த பச்சையும் பாசத்தையும் மாமனார் மீது மருமகன் வைப்பானா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மு. க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன்.
இன்னமும் அந்த நிறுவனம் திமுகவுக்கு தொடர்ந்து பணியாற்றுவதாக கூறுவது சரியானது அல்ல..

அந்த நிறுவனம் செய்யத் தவறியவற்றை இப்போது திமுக தொண்டர்கள் தாங்களாக முன் வந்து செய்யத் தொடங்கி விட்டார்கள்.
PEN நிறுவனத்தை இப்போதே கழற்றி விட வேண்டும் அந்த நிறுவனம் எந்த காலத்திலும் திமுகவுக்கு தேவையில்லை என்ற தொண்டர்களின் குரல் மு.க. ஸ்டாலினுக்கு எட்டினால் திமுகவிற்கு வரும் காலத்தில் நன்மை கிடைக்கும் என்று தனது முகநூல் பக்கத்தில் பத்திரிகையாளர் லோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.