திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை பணிகளுக்காக பல்வேறு ஏரி மற்றும் குளம் குட்டைகளில் இருந்து சவுடு மண் செம்மண் மணல் போன்றவை அரசு அனுமதி உடன் எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். அதன் பெயரில் பொதுப்பணித்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட அளவிற்கு ஆழத்திற்கு மண் எடுக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தப் பணிகளை மாவட்ட முழுவதும் செந்தில்நாதன் என்ற மணல் மாபியா தரப்பினர் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மண் எடுத்தாலும் செந்தில்நாதன் குழுவினருக்கு கட்டிங் தராமல் மண்ணெடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளார்.
அதற்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு ஆதரவளித்து வந்தனர். மேலும் மண் கொள்ளையர்களுக்கு அரசு அதிகாரிகளிடம் பேசி சரி கட்டவும் மண் எவ்வளவு லோடு எடுக்கப்படுகிறது என்பதை கண்காணித்து கட்டிங் வாங்கி கொடுக்கும் புரோக்கராகவும் ஒரு நம்பர் ஒன் பத்திரிகையில் பணியாற்றும் செய்தியாளர் அவர் வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வருகிறார் அவர் தான் அதிகாரிகளுக்கு கட்டிங் வாங்கி கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார்.
இவர் முன்னாள் திமுக எம்எல்ஏக்களுக்கு நெருக்கமானவராகவும் இருந்து கல்லா கட்டி வருகிறார். இந்த நிலையில் சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதற்காக மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்த ஏரிகளில் விதிகளை மீறி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் 30 அடியில் இருந்து 50 அடி வரை ஆழத்திற்கு இட்டாட்சி, ஜேசிபி போன்ற இயந்திரங்களை வைத்து மண் கொள்ளையடித்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து கண்டனம் தெரிவித்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் காட்டி வந்தனர். விடையூர் திருப்பாச்சூர், பட்டறை பெரும்புதூர், புன்னப்பாக்கம், வியாசபுரம், தண்டலம் பெரியபாளையம் என மாவட்டத்தின் பல பகுதிகளில் செம்மண், மணல், கிரவல் என அதிகாரிகள் துணையுடன் சில மணல் மாஃபியாக்கள் இரவு நேரம் பாராமல் மண் கொள்ளை அடித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட கனிமவளத்துறை இயக்குனர் லட்சுமி பிரியா.
இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது , இந்த நிலையில் திமுக படுதோல்வி அடைந்து தமிழக வெற்றி கழகம் ஆட்சி பிடித்ததற்குப் பிறகு அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றுவதைப் போல நடிக்கிறார்களே தவிர அதே தொழிலதிபதிகளிடம் லஞ்சம் என்கிற பெயரில் தங்களது பிச்சை கேட்கும் தொழிலை இன்னும் மாற்றிக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் அடுத்த புண்ணப்பாக்கம் கிராமத்தில் அரசு பேருந்தை பொதுமக்கள் மரித்து சாலை மறியல் செய்தனர். அதன் பிறகு கூட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கனிமவளத்துறை அதிகாரி லட்சுமி பிரியா பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர்கள் மற்றும் திருவள்ளூர் எம்எல்ஏ மண் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விட்டால் அதிகாரிகளின் நிலை மோசமாகிவிடும் என்று சொன்னதின் பேரில் உடனடியாக அந்தக் குவாரியை நிறுத்தினர்.
பலமுறை கனிமவளத்துறை இயக்குனர் லட்சுமி பிரியாவிற்கு புகார் கொடுத்தும் அவர் கண்டு கொள்ளவில்லை யார் புகார் சொல்லுகிறார்களோ அவரது நம்பரை மணல் கொள்ளையர்களிடம் கொடுத்து புகார் அளித்தவர்களை மிரட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
இது குறித்து நாம் நேற்று கனிமவளத்துறை அதிகாரி லட்சுமி பிரியாவிடம் பேசினோம். அவர் எதுவாக இருந்தாலும் நேரில் வந்து பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். இதுகுறித்து நாம் லட்சுமி பிரியாவை பற்றி விசாரித்தோம். லட்சுமி பிரியா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பல லட்ச ரூபாய் மதிப்பில் பல ஏக்கர் விவசாய நிலம் வாங்கி இருப்பதாகவும் முக்கிய இடங்களில் பல கிரவுண்டு இடங்களை வீட்டுமனைகள் வாங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். அது தவிற கிழக்கு கடற்கரை சாலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா கட்டி வருவதாகவும் அதற்கு இந்த மணல் கொள்ளையர்களே மணல் சப்பளை செய்துள்ளனர் என்று சொல்லுகிறார்கள் அவரது துறை அதிகாரிகள். மேலும் லட்சுமி பிரியா திருவள்ளூர் மாவட்டத்தில் நீண்ட வருடங்களாக கனிமவளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
உடனடியாக லட்சுமி பிரியாவை கைது செய்து அவர் சம்பாதித்த சொத்துக்களை அரசு முடக்க வேண்டும் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழக கட்சியினர். லட்சுமி பிரியாவின் சொத்துக்கள் அவரது கணவர் மகன் உறவினர்கள் அம்மா அப்பா மாமனார் மாமியார் உள்ளிட்ட அனைவரின் வங்கி கணக்குகளையும் சோதனை செய்து லட்சுமி பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்து அவரது சொத்துக்களை தமிழக வெற்றிக்கழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டில் உள்ள மொத்த கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு பயம் ஏற்படும் என்கின்றனர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர்.
ஜனநாயகன் படத்தில் சாட்டையை சுழற்றி எதிரிகளை வெளுத்து வாங்கும் காட்சியில் வருவதைப்போல விஜய் இந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
புதிய செய்தி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்த மாலை முரசு பத்திரிகையில் பணியாற்றும் செய்தியாளர் வினோத்குமார் அவர் திருத்தணி அருகே உள்ள தரணி வராகபுரம் என்ற கிராமத்தில் உள்ள ஏரியில் அரசு அளவை மீறி முறைகேடாக செங்கல் சூளைக்கு மண் அள்ளப்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது வினோத்குமாரை வீடியோ எடுக்க விடாமல் முருகம்பட்டு முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி அவருடைய செல்போனை பிடுங்கி உடைத்து அவரை அடித்து தாக்கியிருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர் வினோத்குமார் டி1 திருத்தணி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் புகார் அளித்திருக்கிறார்.
திருத்தணி மாலை முரசு செய்தியாளர் வினோத்குமார்.
ஆனால் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அவரது புகாரை வாங்காமல் அலைக்கழித்ததுடன் முருகம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமியின் மனைவியிடம் ஒரு பொய் புகாரை பெற்று அவர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார் ஏறக்குறைய 7 மணி நேரத்திற்கு மேலாக சம்மந்தப்பட்ட செய்தியாளர் வினோத்குமாரை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை லஞ்சம் என்கிற பெயரில் காக்கி சட்டை போட்டுக் கொண்டு பிச்சை எடுக்கும் காவல் அதிகாரிகளை மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் இது போன்ற அட்டூழியங்கள் நடக்காமல் இருக்கும் என்கின்றனர் திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள். இதற்கும் காரணம் லட்சுமி பிரியா தான் என்கிறார்கள் விவரம் அறிந்த மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள்.