#will chief minister joseph vijay uproot and throw away ; அருண் என்னும் தேவையில்லாத ஆணியை பிடுங்கி எறிவாரா? முதலமைச்சர் ஜோசப் விஜய்.

May 28, 2026

By இரா. தேவேந்திரன்.

#Exclusive story, #Police story, #Special story, #Big story

தமிழக காவல் துறை வரலாற்றில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி பற்றி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்ததில்லை. பிறகு ஏன் அருன் ஐபிஎஸ் அவர்களை மட்டும் இந்த அளவிற்கு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு;

சாதி வெறிபிடித்த ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு தற்போதைய பதவி கிடைத்ததற்கு காரணமாக திருமாவளவன் இருந்துள்ளார் அவர்தான் ஆதவ் அர்ஜுனா மூலம் முதல்வர் விஜய்க்கு சொல்லி இந்த பொறுப்பை வாங்கி கொடுத்தார் என்கிறார்கள் சில உளவுத்துறை அதிகாரிகள்.  என்ன நடந்தது! ஏன் அவர் தற்போது விவாத பொருளாகி இருக்கிறார் என்பது இந்த செய்தியில் குறித்து  இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.முதலமைச்சர் விஜய் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - இது எவ்வாறு நடத்தப்படும்? - BBC News தமிழ்28 ஆண்டு கால பணியில் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரி அருண் நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளார்.

அவருக்கு எந்தப் பதவியும் வழங்கக் கூடாது என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் தங்களது ஆதங்கத்தையும் தங்களது கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அருண் மிகச் சிறந்த அதிகாரி மிக நேர்மையானவர் சத்திய கீர்த்தி என்று சொல்லும் சில சாதி வெறி பிடித்த பத்திரிகையாளர்களுக்கு நாம் எழுப்பும் கேள்விகள்.முதல்வரின் நேரடி தேர்வு; யார் இந்த அருண் ஐ.பி.எஸ்?

கேள்வி; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவரை எதன் அடிப்படையில் அருண் என்கவுண்டர் செய்தார். அவரை என்கவுண்டர் செய்வதற்கு உத்தரவு போட்டது யார்? என்ன காரணம்?

கேள்வி; அந்த என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் புது இரும்பு தகடுகளை வைத்து திட்டமிட்டு சினிமா பாணியில் செட்டப் செய்து என்கவுண்டர் நடத்தியதற்கான காரணம் என்ன? அவ்வளவு சீக்கிரம் கொலை செய்ய ஆர்வம் காட்டியது ஏன்? தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகையாளர்கள் பொதுமக்கள் முட்டாள்கள் என்று அருண் நினைத்தது ஏன்?

கேள்வி; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?  சிபிஐ விசாரணை நடத்த முந்தைய திமுக அரசு ஆர்வம் காட்டாதது ஏன்?

கேள்வி; ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் அவர் வீட்டிற்கு சென்றார்? அவரை ஆறுதல் சொல்ல வற்புறுத்தியது யார்? 

கேள்வி; போதைப் பொருள் வழக்கில் நடிகர்களிடம் தன் கீழ் சிறப்பு பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் அருள்மணி பல்வேறு நடிகர்களிடம் பல கோடி ரூபாய் அருண் பெயர் சொல்லி லஞ்சமாக பெற்றது தொடர்பாக அவர் மீது அருண் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ?

கேள்வி; இன்ஸ்பெக்டர் அருள்மணியை வருமான வரித்துறையினர் விசாரித்து அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது அருணுக்கு தெரியாதா ? அப்படி தெரியாது என்று சொன்னால் திறமையான அதிகாரி நான் இல்லை என்பதை அருண் ஏற்றுக்கொள்வாரா?

கேள்வி: நீங்கள் கமிஷனராக இருந்த பொழுது உங்கள் ஸ்பெஷல் டீமில் இருந்த இன்ஸ்பெக்டர் அருள்மணி நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டரி டம் நீங்கள் சொன்னதாக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கினாரே அந்த கதை தெரியுமா?

கேள்வி; சாதி வெறி தன்னுள் அணையாத தீயாய் இருக்கிறது பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் பல்வேறு வியாபார நிறுவனங்களில் தங்கள் சமூகத்தை சார்ந்தவர்க்கு அருண் நான் முன்னுரிமை தரவில்லை என்று அவர் காக்கி சட்டை  மீது சத்தியம் செய்து சொல்ல முடியுமா ?

கேள்வி; இவர் பெயர் சொல்லி மூத்த பத்திரிகையாளர்களாக இருக்கும் ஒரு சிலர் பல ஆதாயங்களை அடைந்தார்கள் அப்படி ஏதும்  இல்லை என்பதை வெளிப்படையாக பேச அருண் தயாரா?

கேள்வி; கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை நடத்தி மக்கள் மனதில் நல்ல  நம்பிக்கையை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடுவோம் என்று அதிகாரத் திமிர் பிடித்த திமுக நடத்திய ஆணவ அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் இரண்டு ஆண்டுகளில் கட்சி தொடங்கி ஆட்சி பிடித்த ஜோசப் விஜய்யின் வெற்றியை தீர்மானித்த தமிழக மக்கள் சமூக வலைதளங்களில் திமுகவின் திருட்டுத்தனத்தையும்  செய்த அட்டுழையங்களையும் பொதுவெளியில் வெளிப்படையாக பேசி வரும் மிஸ்டர் பொது ஜனங்களின் தீர்ப்பை திமுக ஏற்றுக் கொண்டது.

அதுபோல தன்னை விமர்சிப்பவர்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டிய கடமை உணர்வு மிக்க அதிகாரி வயது முதிர்ச்சியின்மை காரணமாக பேசுவது எந்த வகையில் நியாயம் என்பதை அவருக்கு யாரும் புரிய வைக்கவில்லையா? அல்லது அவர் நல்ல அறிவுரை வழங்கும் நபர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ளவில்லையா என தோன்றுகிறது.After 25 years, VCK still struggles for seats': Thirumavalavan voices concern over limited electoral spaceகேள்வி; ஏறக்குறைய 20 ஆண்டு காலமாக தேர்தல் நடக்காத சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்து தேர்தல் நடத்த காரணமாக இருந்தவர்களை ஓரம் தள்ளி அதிகாரம் மிக்க உங்களின் உத்தரவால் நூற்றுக்கணக்கான போலீசார் காக்கி சட்டையுடன் காவல் காத்தது எந்த வகையில் நியாயம்?  எதற்கு அவ்வளவு போலீசார் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குகிற பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நடக்கும் தேர்தலில் என்ன கலவரம் நடந்து விடப்போகிறது.

உங்களிடம் எவ்வளவு போலீசார் வேண்டும் என்று கேட்ட முட்டாள் யார்? உளவுத்துறையை வைத்து ஒழுங்காக விசாரிக்க தெரியாத உங்களுக்கு உண்மை என்னவென்று உணர தெரியாதா? ஏன் அவ்வளவு காவலர்களை நிறுத்தினீர்கள் அங்கு என்ன கலவரம் நடந்து விட்டது.

கேள்வி; சவுக்கு சங்கர் என்பர் ஒரு ஃபிராடு என்பதை ஊர் உலகம் அறியும். இருப்பினும் உங்களைப் பற்றியும் உங்கள் மனைவி பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு நீங்கள் சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுத்தது உண்டா அல்லது அவர் சுட்டிக் காட்டுகிற விஷயங்கள் அனைத்தும் பொய் என்று எந்த வகையிலும் நீங்களோ உங்கள் மனைவியோ பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவிக்காமல் போனதற்கு என்ன காரணம்?

கேள்வி;  உங்கள் தந்தையின் காலத்திலேயே நீங்கள் பெரிய கோடீஸ்வரர் சென்னையில் பல்வேறு பங்களாக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு விவசாய நிலங்கள் சொகுசு பங்களாக்கள் இருக்கிறது என்று மார்தட்டி சொல்லும் போலீஸ் அதிகாரி அருண், தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் தன் மனைவியின் குடும்ப உறுப்பினர்கள் தனது நண்பர்கள் என பல்வேறு தரப்பினர் உடைய சொத்துக்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெள்ளை அறிக்கையாக  காட்ட தயாரா?Savukku Shankar - YouTube

கேள்வி; சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்து  நீங்கள் நடவடிக்கை எடுத்ததை நீதிமன்றம் விமர்சித்தது. அது உங்களுக்கு தவறு என்று தோன்றவில்லையா? நீதிமன்றத்தை எதிர்த்து உங்களால் வழக்கு தொடர உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?  தற்போது அதிகாரம் மிக்க பதவியில் நீங்கள் அமர யாரையெல்லாம் சந்தித்து பேசினீர்கள் யாரிடம் சிபாரிசு பெற்றீர்கள் என்பதை வெளிப்படையாக பொது வெளியில் பேச தயாரா? அல்லது நீங்கள் எப்படி இந்த பதவியை பெற்றீர்கள் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள தைரியம் இருக்கிறதா?

கேள்வி; என்னதான் உயர் போலிஸ் அதிகாரியாக  இருந்தாலும் 60 வயது வரை தான் நீங்கள் அதிகாரமிக்கவர்களாக இருப்பீர்கள் அதன் பிறகு உங்களை தெருவில் இருக்கும் நபர்கள் கூட மதிக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

கேள்வி; அதுபோல எத்தனை போலீஸ் அதிகாரிகள் தாங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது போட்ட ஆட்டத்தை மறந்து தற்போது கண்டு கொள்வதற்கு கூட ஆளில்லாமல் தனிமரமாய் நிற்பதை நீங்கள் அறிவீர்களா? அப்படி அந்த பல போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்கிற பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம் அதற்கு நீங்கள் எதிர் கருத்து தெரிவிக்க தயாராக இருக்கிறீர்களா?Post by Aadhav Arjuna on X: 2/3

கேள்வி; தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் நிலைமையே இன்றைக்கு அவல நிலையாக இருக்கிறது. என்பதை நீங்கள் அறிவீர்களா? 50 ஆண்டுகாலம் அதிகாரமிக்க பதவியில் இருந்த அந்த கட்சியின் நிலைமை என்ன என்பதை நீங்கள் உணர்வீர்களா? அவர்களுக்கே அந்த நிலைமை என்றால் உங்களின் நிலைமை என்னவென்று யோசித்ததுண்டா?  நாம் என்ன செய்கிறோம் அது என்ன எதிர்விணையை உருவாக்கும் இதனால் பொதுவெளியிலும் எதிர்க்கட்சியினர் மத்தியிலும் நீதிமன்றத்தின் பார்வையிலும் நம் மீது என்ன விதமான பார்வை எண்ணம் அவர்களுக்கு தோன்றும் என்பதை ஒரு கனம்  நீங்கள் யோசித்தது உண்டா?

கேள்வி; சுயநினைவோடு தான் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 28 ஆண்டுகாலம் என் மீது எந்தவித தவறும் இல்லை எந்த புகாரும் வரவில்லை என்று சொல்லும் உங்களை பற்றி  பல  புகார்களை சொன்ன சவுக்கு சங்கர் முட்டாளா? இல்லை அவர் பைத்தியமா?

கேள்வி; உங்களுக்கும் சவுக்கு சங்கருக்கும் எதாவது சொத்து தகராறா அல்லது பங்காளி பிரச்சனையா என்பதை நீங்கள் பொதுவெளியில் விவாதிக்க தயாரா?K Selvaperunthagai on TN Congress, DMK Alliance, and Actor Vijay's Political Entry | Chennai News - The Times of Indiaகேள்வி;  தமிழ்நாட்டில் மிக நேர்த்தியாக மிகச் சிறப்பாக திறமை வாய்ந்த பத்திரிகையாளர்கள் இருக்கும் மத்தியில் எல்லாம் தெரிந்ததை போல வாயைத் திறந்தாலே பொய்களை அவிழ்த்து விடும் ஒருவர் எதிரில் இருப்பவரின் முகத்தில் பேசுகிற பொழுது எச்சிலை தெரித்து பேசுகிற ஒருவர் தான் மிகப்பெரிய அறிவாளி என்று சொல்லி உங்களுக்கு ஆதரவாக வீடியோ போடுவதை விரும்புகிற நீங்கள் உங்களுடைய சிந்தனை உங்களுடைய எண்ணம் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொண்டதில்லையா?

கேள்வி; ஆட்களை வைத்தும் மனிதர்களின் நிறத்தையும் மனிதர்களின் நடவடிக்கைகளையும் கண்டு ஏளனமாய் எடை போடுவதை நீங்கள் எப்போது நிறுத்திக் கொள்வீர்கள்?

கேள்வி; ஜெயலலிதா சொல்லுகிற செயல்களை ஒரு நொடி கணத்தில் செய்து முடித்த முத்துக்கருப்பனின் நிலை என்ன இரண்டு முதலமைச்சர்களின் இதயங்களிலும் இடம் பிடித்திருந்த ஜாங்கிட்டின் நிலை என்ன காக்கி சட்டை அணிந்து கொண்டு கஞ்சா விற்பவர்களிடமும் பான்பராக் விற்பவர்களிடம் பணம் வாங்கி அசிங்கப்பட்டு நிற்கின்ற போலீஸ் அதிகாரிகள் எத்தனை பேர் என்பதை நீங்கள் அறிவீர்களா? Witness in the Corridors Bureaucracy News: A. Arun IPS has been given full additional charge of ADG Enforcement Bureau CID, Tamil Nadu Police.கேள்வி;  தயவுசெய்து பொறுமையுடன் தன்னை விமர்சிப்பவர்களையும் தன்னிடம் கேள்வி கேட்பவர்களை நசுக்கி விடலாம் ஒடுக்கி விடலாம் தன் கையில் துப்பாக்கி இருக்கிறது என்பதை நினைத்து எடுத்து சுட்டு விடலாம் என்று நினைப்பதெல்லாம் கற்பனையில் கூட எட்டாத கதை . நீங்கள் யார் என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

கேள்வி; உங்களிடம் அதிகாரம் இருந்தது என்பதனால் உதயநிதி ஸ்டாலின் உங்களுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார் என்ற காரணத்தினால் அவரது மைத்துனர் சபரீசன் உங்களுக்கு நண்பராக இருந்த காரணத்தினால் நீங்கள் எத்தனை அதிகாரத்திற்கு மீறிய செயல்களை செய்தீர்கள் என்பதை பத்திரிகையாளர் மன்றத்தில் விவாதிக்க தயாராக இருக்கீங்களா ? இப்படி விடை தெரியாத பல கேள்விகள் இருக்கிறது . இதற்கெல்லாம் அருண் பதில் சொல்வாரா? இல்லை அவரது வாடகை வாய்கள் பதில் சொல்லுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 

இந்த செய்தி குறித்து ஐபிஎஸ் அதிகாரி அருண் மற்றும் அமைச்சர் ஆதாவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதையும் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

Share:

இரா. தேவேந்திரன்.

May 28, 2026

Leave a Comment