#youtube muthar arrested ; மைசூரில் youtube முத்தார் கைது. தட்டித் தூக்கிய தமிழக போலீஸ்.

June 10, 2026

By இரா. தேவேந்திரன்.

பாஜக பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த யூடியூபர் முக்தார், கர்நாடக மாநிலம் மைசூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஏற்கனவே திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த முக்தாரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அலிசா அப்துல்லா, யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா.

பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகி அலிசா அப்துல்லா. பைக் ரேசரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவில் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த அலிசா அப்துல்லாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

பிரசவத்திற்காக தீவிர அரசியலில் இருந்து கடந்த சில மாதங்களாக ஒதுங்கியிருக்கும் அலிசா அப்துல்லா, அண்மையில், சென்னை காவல் ஆணையநகரத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.அதாவது, யூட்யூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா ஆகிய இருவரும் தன்னைப் பற்றியும் தனக்கு பிறந்த குழந்தைகள் பற்றியும் அவதூறாக பேசுவதாகவும், பெண்கள் பற்றி கண்ணியக்குறைவாக பேசும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி  சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...! - TamilWireதிருச்சி சூர்யா.

இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் திருச்சி சூர்யா சிவாவை கைது செய்தனர். எனினும், இந்த வழக்கில் தொடர்புடைய யூடியூபர் முக்தார் தலைமறைவு ஆனார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஒரு வாரமாக தலைமறைவு ஆகியிருந்த முக்தாரை கைது செய்த போலீசார் சென்னைக்கு அழைத்து வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.Mukhtar: நாடார், காமராஜர் பற்றிய சர்ச்சை கருத்துக்கள்.. மன்னிப்பு கேட்டார் யூடியூபர்  முக்தார் | Mukhtar Apologizes After Controversial Remarks on Kamarajar  Spark Outrage - Tamil ...யூடியூபர் முக்தார்.

முக்தார் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆபாசமாக பேசியது மற்றும் காமராஜர் குறித்து அவதூறாக பேசியது என பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்த போதிலும் கடந்த திமுக ஆட்சியில் கைதாவதில் இருந்து தப்பி வந்த முக்தார், அலிசா அப்துல்லா புகாரில் போலீசார் தட்டி தூக்கியுள்ளனர்.

Share:

இரா. தேவேந்திரன்.

June 10, 2026

Leave a Comment