சென்னை மாநகர காவல் துறையினரையே அதிச்சியடை வைத்த சம்பவம் காக்கி சட்டைகளின் கண்ணியத்தை அவமானப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக காவல்துறைரையினர் அவமானத்தால் வெட்கி தலைகுணிந்துள்ளனர். சென்னை ராயபுரம் காவல் நிலையப் பெண் ஆய்வாளர் ஷீலா மேரி, காவல்துறையினரையும் அவர்களின் குடும்பங்களையும் குறிவைத்து ₹20 கோடி மதிப்பீட்டில் பொன் நாணய முதலீட்டு மோசடியில் ஈடுபட்டிருந்த விவகாரம், பல மாதங்களாகப் புகார்களாக கிடந்தது.

காவல் நிலையப் பெண் ஆய்வாளர் ஷீலா மேரி.
முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தனது பதவிக் காலத்தில் இச்சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருந்தார். அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்கின்றனர் சில காவல் அதிகாரிகள்.
தலைமை காவல் துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோரின் அதிரடியான நடவடிக்கையால், பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் ₹20 கோடி மோசடி வழக்கில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான காவல்துறையினருக்கு நீதி கிடைத்திருக்கிறது. இது முதலமைச்சர் விஜய் அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சொல்லலாம் என்கின்றனர் தவெகவினர். 
தமிழக காவல் துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால்.
ராயபுரம் காவல் நிலையப் பெண் ஆய்வாளர் ஷீலா மேரி, காவல்துறையினரையும் அவர்களின் குடும்பங்களையும் குறிவைத்து ₹20 கோடி மதிப்பீட்டில் பொன் நாணய முதலீட்டு மோசடியில் ஈடுபட்டிருந்த விவகாரம், பல மாதங்களாகப் புகார்களாகிக் கிடந்தது. முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தனது பதவிக் காலத்தில் இச்சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட மற்றும் ஒழுங்கு பணிகளுக்குத் துணையாக, டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் ஆணையர் அமல்ராஜ் ஆகியோரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.


கடந்த 13ம் தேதி 2026 – சென்னை மாநகரக் காவல்துறை, ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி மீது ₹20 கோடி மதிப்பிலான தங்க நாணய முதலீட்டு மோசடி வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் சம்பவம், முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தனது பதவிக் காலத்தில் இதுபோன்ற புகார்களை முறையாகக் கையாளத் தவறியதாகக் கூறப்படும் சூழலில், புதிய காவல் தலைமையின் வேகமான நடவடிக்கைகள் பெருமைப்படதக்கதாகும்.
பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி மீதான மோசடி வழக்கு;
சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் ஷீலா மேரி, 2023 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் குழு மூலம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குறைந்த விலையில் தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்றும், மாதாந்திர வருமானம் உறுதி செய்யப்படும் என்றும் கூறி, இத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்தது. இத்திட்டத்தைப் பிரபலப்படுத்த, அவர் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில், திட்ட ஊக்குவிப்பாளர் பிரபுமணியுடன் சென்று, தங்க நாணயங்களை விநியோகித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்ப கட்டங்களில் சில முதலீட்டாளர்களுக்குத் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டு, நம்பிக்கையை அதிகரித்த நிலையில், பின்னர் பெரும் தொகையைச் சேகரித்த பிறகு, வாக்குறுதியளிக்கப்பட்ட நாணயங்களையோ, வருமானத்தையோ வழங்கத் தவறியுள்ளனர்.


காவல் நிலையப் பெண் ஆய்வாளர் ஷீலா மேரி .
இச்சூழலில், வங்கி ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பொருளாதாரக் குற்றப் பிரிவு (EOW) போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பிரபுமணி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார், மேலும் ஆய்வாளர் ஷீலா மேரியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ்.
முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ்ஸின் அலட்சியமும் கையாலாகாத்தனமும்.;
ராயபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இந்த ஆய்வாளர் மீது பல மாதங்களாகப் பலதரப்பினரும் புகார் அளித்திருந்தும், அப்போதைய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. {அப்போது கமிஷ்னர் அருனுக்கு காது கேட்கவில்லை கூறப்படுகிறது.} எழுத்து மற்றும் வாய்மொழிப் புகார்கள் குவிந்தும், அவர் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும், இது அவருக்குப் பாதுகாப்பு இருந்ததாகக் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் காலத்திலும் இவர் அதே நிலையில் தொடர்ந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போதைய காவல் தலைமையின் நேர்மையான நடவடிக்கை;
தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஷீலா மேரியின் பங்கு குறித்து துறை ரீதியான விசாரணைக்கும், EOW விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர். இந்த வேகமான நடவடிக்கை, புதிய காவல் தலைமையின் ‘பொறுப்புணர்வு’ மற்றும் ‘புகார்களுக்கு முக்கியத்துவம்’ அளிக்கும் கொள்கையின் வெளிப்பாடாகும்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்.
‘ஒரு காவல் அதிகாரியே, தனது பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது சக ஊழியர்களிடம் மோசடி செய்ய முடியும் என்றால், அங்கு ஒழுக்கக் கேடு வேரூன்றியுள்ளதை உணர முடிகிறது. முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ் இதுபோன்ற ஒரு முக்கியமான புகாரைக் கையாளத் தவறியதும், புதிய காவல் தலைமை விரைந்து நடவடிக்கை எடுத்ததும், காவல் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் காட்டுகிறது. ஆனால், அலட்சியம் காட்டிய முன்னாள் ஆணையரின் பதிவு கேள்விக்குரியதாகவே உள்ளது.’


முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ், ஷீலா மேரி.
1. முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ்ஸின் காலத்தில், ஷீலா மேரி மீதான புகார்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டன? அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இருக்கிறதா?
2. ₹20 கோடி மோசடியில் காவல்துறையினரும், உயர் அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தப் பணம் மீட்கப்படுமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுமா?
3. ஷீலா மேரி இந்த மோசடியில் ஈடுபட்டது, வேறு எந்த உயர் அதிகாரிகளின் அறிவிலும் அல்லது ஆதரவிலும் நடந்ததா? விசாரணை மேல்நோக்கிச் செல்லுமா?
‘தற்போதைய காவல் தலைமையின் விரைவான நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஆனால், இது ஒரு தனி சம்பவமாக மட்டும் முடியாமல், இனி எந்த அதிகாரியும் இத்தகைய மோசடிகளில் ஈடுபட முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் நிரந்தர வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், ‘பாதுகாப்பு’ என்பது ‘அதிகாரத்தின்’ மற்றொரு பெயராக மாறிவிடும்.’
கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர கமிஷனராக அருண் இருந்தபொழுது பல்வேறு புகார்கள் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மீது வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்தது ஏன். இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கமிஷனர் அருணின் மனைவிக்கு நெருக்கமானவர் என்றும் அவருக்கு நிறைய தங்க காசுகள் கொடுத்திருப்பதாகவும் உளவுத்துறையில் உள்ள சில அதிகாரிகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். எனவே ஊழல் செய்த காக்கி சட்டையின் கண்ணியத்திற்கு அவபேரை ஏற்படுத்திய ஷீலா மேரியின் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது உளவுத்துறை அதிகாரிகள் சொல்லி வருகின்றனர். 
முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ்.
அதேபோல அருண் அவர்களின் தனிப்படை பிரிவில் அருள்மணி என்கிற இன்ஸ்பெக்டர் பல சினிமா நடிகர்களிடம் இவர் பெயர் சொல்லி பல லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார் என்றும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டரிடம் நேரில் சென்று ஐயா 50 நகரம் வாங்கி வர சொன்னார் என்று கமிஷனர் அருண் பெயரையும் தவறாக பயன்படுத்தி பணம் வாங்கியுள்ளார். அவர் மீது வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணையும் நடத்தியுள்ளது தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் பெயர் சொல்லி திட்டமிட்டு லஞ்சம் பெற்ற அதிகாரிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரிக்கும் கமிஷனர் அருண் குடும்பத்திற்கும் உள்ள தொடர்புகள் என்ன என்பதையும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தின் மூத்த அமைச்சர்கள்.
FOLLOW NOW
X (Twitter): chennaireporters,com
Facebook: /chennaireporters.com
#ஷீலாமேரி #₹20கோடிமோசடி #அருண்ஐபிஎஸ் #மகேஷ்குமாரகர்வால் #அமல்ராஜ் #ராயபுரம் #EOW #சென்னைபோலீஸ் # chennaireporters.com
#SheelaMary #₹20CroreScam #ArunIPS #MaheshKumarAggarwal #Amalraj #Royapuram #EOW #ChennaiPolice #chennaireporters.com News