#friendship day ; நண்பர்கள் தினம் இணையத்தில் வைரலாகும் பதிவு.

June 26, 2026

By ரா. ஹேமதர்சினி

ஜூலை 30-ஆம் தேதி தேசிய நண்பர்கள் தினம் அன்று கொண்டாடப்படுகிறது.  ஆனால் முன்னதாகவே சமூக வலைதளங்களில் நண்பர்கள் தினம் பற்றிய ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 💐💐எதற்காக நண்பர்கள் வேண்டும்… கடவுளின் மாபெரும் பரிசு நண்பர்கள்………💐💐💐 பேச்சுத் துணைக்கு சில நண்பர்கள் வேண்டும், பேசும்போது பேசாமல் இருக்க சில நண்பர்கள் வேண்டும், துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள சில நண்பர்கள் வேண்டும்.

💐 தூங்கும் போதும் காத்திருக்க நல்ல சில நண்பர்கள் வேண்டும், நடைபயிற்சிக்கு துணையாக சில நண்பர்கள் வேண்டும். நல்லது, கெட்டது சொல்ல சில நண்பர்கள் வேண்டும்.💐 பயணங்களின் போது பேசி மகிழ சில நண்பர்கள் வேண்டும், படித்ததில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள சில நண்பர்கள் வேண்டும், அறிவுரை சொல்லசில நண்பர்கள் வேண்டும், அன்பே உருவான சில நண்பர்கள் வேண்டும்.

💐 ஆற்றல் நிறைந்த சில நண்பர்கள் வேண்டும், ஆலயங்களுக்கு செல்ல
சில நண்பர்கள் வேண்டும், அடித்து திருத்த சில நண்பர்கள் வேண்டும், குடும்ப உறவாக சில நண்பர்கள் வேண்டும்.💐 கொடுப்பதற்கு சில நண்பர்கள் வேண்டும், தடுத்து நிறுத்த சில நண்பர்கள் வேண்டும், தட்டிக்கொடுக்க சில நண்பர்கள் வேண்டும், புகழ்ந்து பேச சில நண்பர்கள் வேண்டும். புரட்சிகள் செய்யும் சில நண்பர்கள் வேண்டும்,

💐 பொறுமை மிகுந்த_ சில நண்பர்கள் வேண்டும், பொறுப்பான சில நண்பர்கள் வேண்டும் புறம் பேசாத சில நண்பர்கள் வேண்டும், படைத்தலைவன் போல் சில நண்பர்கள் வேண்டும், படித்ததை சொல்ல சில நண்பர்கள் வேண்டும்.💐 பாசத்தை கொட்ட சில நண்பர்கள் வேண்டும், பக்குவமாய் எடுத்துச் சொல்ல
சில நண்பர்கள் வேண்டும், ஓடி விளையாட சில நண்பர்கள் வேண்டும், உதவி என்றால் ஓடோடி வர சில நண்பர்கள் வேண்டும்.

💐 உயிருக்கு உயிராய பழகிட சில நண்பர்கள் வேண்டும், இவை அனைத்தும்
கலந்த ஒரு நண்பன் எப்போதும் உடன் வேண்டும்.

💐தேசிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்💐.

Share:

ரா. ஹேமதர்சினி

June 26, 2026

Leave a Comment