#TASMAC news exclusive story, #DMK party news , #Udaya Nidhi Stalin news #Visakan IAS news
சென்னை தாம்பரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை, கூடுதல் விலைக்கு கட்டிங் மது..! திமுக முன்னாள் பெண் அமைச்சரின் பெயரில் MLA பாஸ் தனது காரில் வைத்து கொண்டு வலம் வரும் பார்களின் உரிமையாளர். தவெக அமைச்சருடன் புகைப்படம் எடுத்துள்ள பார்களின் உரிமையாளர் முருகன் என்ற செய்தி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பிரஸ்கிளப்பின் பொதுச்செயலாளர் விமலேஸ்வரன் என்பவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
சென்னை அடுத்த தாம்பரம், சேலையூர், சானடோரியம், குரோம்பேட்டை, பொழிச்சலூர் மற்றும் படப்பை உள்ளிட்ட பல இடங்களில் மதுபான பார்களை நடத்தி வருபவர் குரோம்பேட்டையை சேர்ந்த நா.முருகன்.
இவர் மதுபான பாரில் சட்டவிரோத மதுவிற்பனை, மேலும் பாரில் விதிமுறைகளை மீறி உள்ளேயே சமைப்பது,மது வகைகளை பதுக்கியும் இரவு நேரங்களில் விற்பனை செய்வதுமான விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார்.
பார் உரிமையாளர் முருகன், மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ்.
இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தமிழரசியின் சட்டமன்ற உறுப்பினருக்கான கார் பாஸை தனக்கு சொந்தமான INNOVA காரில் வைத்துக் கொண்டு அமைச்சரிடம் நெருக்கம் எனக் கூறி கடந்த ஆட்சி காலத்தில் அதிகாரிகளை சரிகட்டி வந்துள்ளார்.
திமுக கம்பெனியை போல தனது குடும்பத்தினர் தன்னுடைய ரத்த சொந்தங்கள் வாழ வேண்டும் என்பதற்காக எவர் காலிலும் விழுந்து தனது வருமானத்தை பெருக்கிக் கொள்ள எந்த செயல்களையும் செய்ய தயாராக இருப்பார்கள் திமுகவினர் அதுபோன்றே பார்முருகனும் மது விலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் உடன் ஒரு நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை ஊர் முழுக்க பரப்பி அதிகாரிகளிடம் காட்டி நான் இந்த அரசாங்கத்திலும் இருப்பேன் என்பதை தம்மட்டமடித்துக் கொள்ளவே பாலமுருகன் அமைச்சர் விக்னேசை சந்தித்திருக்கிறார் என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர் இது போன்ற 420 களை தவெக வை சேர்ந்த எந்த அமைச்சர்களும் பலிகடா ஆகக்கூடாது அதேபோல அமைச்சர் விக்னேஷ் சம்பந்தப்பட்ட பார் உரிமையாளரின் அனைத்து டாஸ்மார்க் பார்களின் உரிமங்களை ரத்து செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் விஜயின் ஆதரவாளர்கள்.
விசாகன் ஐஏஎஸ்.
இதை நம்பி திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தில் இருந்த முக்கிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும் இவருக்காக பல டாஸ்மாக் கடைகளை திறந்து அதில் பார் நடத்திக் கொள்வதற்கு அந்த அதிகாரியும் துணையாக செயல்பட்டுள்ளார்.


தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும் எம்எல்ஏ பாஸை காரில் வைத்துக் கொண்டு தான் வலம் வருகின்றார்.
மேலும் தவெக ஆட்சி அமைந்ததும் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் உடன் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு பழைய பாணியில் ஊருக்குள் புருடா விட்டுக் கொண்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது.
பழைய செல்வாக்கு, தவெக அமைச்சருடன் புகைப்படம். என ஊரை ஏமாற்றிக் கொண்டு தனது மது கூடங்களில் மது வகைகளை “கட்டிங்” (பாட்டிலை திறந்து 90ml கட்டிங்) விற்கின்றார் டாஸ்மாக் கடை திறந்து இருக்கும் நேரத்தில்சில குறிப்பிட்ட பீர் வகைகளை கடைகளில் விற்காமல் மதுகூடத்தில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிரார்.
முன்னாள் அமைச்சர் தமிழ்ச்செல்வி.
இதனை யாரும் கண்டும் காணாமல் இருக்க பத்திரிகையாளர்கள், காவல்துறை, டாஸ்மாக் அதிகாரிகள் என அனைத்து தரப்பிற்கும் சன்மானம் வழங்குவதாக கூறப்படுகிறது.


விசாகன் ஐஏஎஸ், பார் உரிமையாளர் முருகன்.
பார் உரிமத்தில் தின்பண்டம் விற்க மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில் எப்படி சமையல் எரிவாயு வைத்து சைடிஸ் செய்து விற்பனை செய்கிறார்.? அப்பட்டமாக விதிமீறலில் ஈடுபடுவது ஆய்வு செய்தால் வெட்ட வெளிச்சமாகும். இதில் இருந்து தப்பிக்க அமைச்சரின் பெயரை களங்கப்படுத்தவே அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
விதிமீறலில் ஈடுபடும் பார்களுக்கு சீல் வைத்து, பார்கள் உரிமத்தை ரத்து செய்து சடடவிரோத மது விற்பனையில் ஈடுபடும் முருகன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
2014 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் விசாகன் வெற்றி பெற்றார். இவரது சொந்த ஊர் பரமகுடி அடுத்த குமாரகுறிச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகவும் மதுரை மாநகராட்சி கமிஷனராகவும் கடந்த திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக டாஸ்மாக் எம்.டி ஆகவும் பணியாற்றியுள்ளார். இவரது உறவினர்தான் பார் நடத்தும் முருகன் தாம்பரம் மெப்ஸ் அருகில் முதலில் ஒரு டாஸ்மாக் கடை மட்டுமே இருந்தது. தனது உறவினர் முருகனுக்காக குரோம்பேட்டை , பல்லாவரம், பொழிச்சலூர், படப்பை இன்னும் பல பகுதிகளில் டாஸ்மாக் கடையை திறக்க சொல்லி விசாகன் ஐஏஎஸ் உத்தரவிட்டார் என்கிறார்கள் அதிகாரிகள்.
விசாகன் ஐஏஎஸ் உறவினர் பார் உரிமையாளர் முருகன்.
அது மட்டும் அல்லாமல் விசாகனுக்கு பார் உரிமையாளர் முருகன்தான் பினாமி என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் விசாகன் முருகனுக்கு டாஸ்மாக் கடை வைக்க உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழக வெற்றி கழக அரசு முதலமைச்சர் விஜய் அவர்கள் விசாகனுக்கு ஒரு விசாரணை கமிஷன் வைத்து அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
மேலும் அவரது உறவினருக்கும் உள்ள மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் பினாமிகள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அவருக்கு சரியான பாடத்தை புகட்டி அவரை கைது செய்ய வேண்டும் அவருக்கு நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.
இவர் மூலம் கடந்த ஆட்சியில் செந்தில் பாலாஜி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் சாராய கொள்முதல் தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் திமுகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள். அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்களே விஜய் இதை நிச்சயம் களையெடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
எனவே விசாகனுக்கு ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி நேர்மையான நீதிபதி ஒருவரை நியமித்து உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். நேர்மையின் சிகரமாக விளங்குகிற தமிழகத்தின் உளவுத்துறை தலைவர் அஸ்ரா கார்க் அவர்கள் மூலம் விசாரணை நடத்தி உண்மை என்ன என்பதை இந்த நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விஜய் தெரிவிக்க வேண்டும் என்கின்றனர். திமுகவுக்கு ஓட்டு போட்டு ரோட்டில் வீடு இல்லாமல் டாஸ்மாக் கடையில் குடிகாரர்களாக சுற்றித் திரியும் பொதுமக்கள்.
பார் உரிமையாளர் முருகன்.
இந்த செய்தி குறித்து ஐஏஎஸ் அதிகாரி விசாகன் அவர் தனது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
Chennai reporters.com எங்கள் இணையதளத்திலிருந்து யாரும் எந்த தனி நபரும் மற்றும் எந்த ஒரு செய்தி நிறுவனமும் செய்திகளை மறுபிரதி எடுக்கவோ அல்லது எங்கள் இணையதளத்தில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் கணடன்டுகளை எடுத்து பயன்படுத்தவோ கூடாது அப்படி பயன்படுத்தினால் சட்டப்படி அது குற்றமாகும். என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.