#Narendra Modi, #NEET Exam ,#Delhi ,#Jantar mantar, #Student protest,#Big story, #Abuse women students, #BJP party news, #BJP government news
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்தியாவே கொந்தளித்து போய் இருக்கிறது தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மக்கள் வெள்ளம் போல் திரண்டு பாஜக அரசின் குரல் வளையை நெரிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் காட்டுத் தீயாய் பற்றி எரியத் தொடங்கியுள்ளன.
மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை என நாடு எங்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது பல அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அடையாளம் தெரியாத நபர்கள் சுமோட்டோ மூலம் போராட்ட களத்தில் உள்ள மாணவர்களுக்கு உணவுகளை வாரி வழங்கி வருகிறார்கள் அரசு ஊழியர்கள் சிலர் தங்களுடைய பதவி, பதவியை ராஜினாமா செய்து விட்டு போராட்டக் களத்தில் வந்து போராடுகிறார்கள்.


பஞ்சாபை சேர்ந்த சீக்கிய இளைஞர்கள் வாளேந்தி போராட்டத்தில் மாணவர்களுக்கு அரணாய் நின்று இருக்கிறார்கள். தங்களது அறமற்ற ஆண்மையற்ற திறமை இல்லாத பாரதிய ஜனதா அரசு ஈவிஎம் என்கிற கோழைத்தனமான இயந்திரத்தை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆண்டு வருகிற வேலையில் திரும்பிய திசையெங்கும் ஊழல் ராமர் கோயிலில் உண்டியல் ஊழல், குஜராத்தில் போதைப்பொருள் கலாச்சாரம், பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திக்காமல் எப்போதும் வெளிநாட்டு பயணம் பொதுமக்கள் தற்போது தங்கம் வாங்க வேண்டாம் டீசல் விலை எரிவாயு விலை அதிகரித்திருக்கிறது என்று ஏளனமான பேச்சு.

அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு பட்டுக்கம்பளம் வீசப்பட்டு ஆட்சியை சீரடித்து விடுகிற பாஜகவை விரட்ட வேண்டிய சூழல் தற்போது எழுந்துள்ளது எனவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் ஒன்று திரண்டதால் இந்திய தேசம் இன்றைக்கு எரிந்து கொண்டிருக்கிறது எனவே பாஜக அரசு தானாக முன்வந்து தனது ஆட்சி கலைத்து விட்டு புதிய தேர்தலை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிற போர்க் குரலும் ஒரு பக்கம் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.


பழைய வாக்குச்செட்டி முறையை கொண்டு வர வேண்டும் என்று மதுரையில் நந்தினி வழக்கறிஞர் குடும்பம் நீண்ட நாட்களாக போராடி வருகிறது அதையே சீமான் போன்ற தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலை நாடுகளில் இயந்திர வாக்குச் செலுத்து முறை இதில் இல்லை ஆனால் இந்தியா இயந்திர வாக்கு செலுத்து முறையை தமிழில் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மிஸ்க் நான் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வெற்றி பெற வைத்தேன் ஈவிஎம் மிஷினில் வெற்றியை தீர்மானிக்க முடியும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.
அந்த அடிப்படையில் இந்தியாவில் பழைய வாக்குச் சட்டம் முறையை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனவே இந்தியா முழுவதும் இருக்கிற அரசியல் கட்சிகள் சிறிய கட்சிகள் சமூக அமைப்புகள் எல்லாம் ஒன்று திரண்டு பழைய வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

அப்போதுதான் பாஜகவின் முதுகெலும்பை உடைத்து ஊனமாக்கி மூளையில் உட்கார வைக்க முடியும். ஏழை மக்களுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பின்தங்கியுள்ள மக்களுக்கு இன்னும் எந்த விதமான ஆக்கபூர்வமான வாழ்வாதார மேம்பாடுகள் திட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவரவில்லை நீட் தேர்வு முறையால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்கள் பலிகடாக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் போராடிவரும் மாணவர்களை இரும்பு கரம் கொண்டு பாஜக அரசு ஒடுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. போராட்டம் தான் எளிய மக்களின் ஆயுதம் எனவே இளைஞர்களை ஒடுக்குவதோ அடிப்பதோ காயப்படுத்துவோ கூடாது நீதித்துறை இறங்கி வீதியில் நடந்து வந்து மாணவர்களின் போராட்ட களத்தையும் மாணவர்களின் உக்கிரமான குரலையும் வலி நிறைந்த பேச்சுக்களையும் கேட்க வேண்டும்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மும்பைப் பெண்ணின் துணிகரச் செயலும், மூத்த வழக்கறிஞரின் கேள்வியும்..!மும்பையில் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்! மாணவர்களைக் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனத்தில் அடைத்து பறக்கின்றது போலீஸ்.
பரப்பரப்பான சாலையின் நடுவில் வழியை மறித்துக் கொண்டு நிற்கின்றாள் அந்தப் பெண்! கிறீச்சிட்டு நிற்கின்றது போலீஸ் வண்டி! வண்டியின் மீது ஒற்றைக் கையை வைத்து அழுத்தி மாணவர்களை வெளியே விடு! என்று முழங்குகின்றாள் அந்த வீரஞ்செறிந்த பெண்மணி.
இரண்டே நிமிடங்களுக்குள் போக்குரத்து நெரிசலாகிவிட, இன்னும் சில மாணவர்களும் அந்த மாணவியுடன் சேர்ந்து விட, கடைசியில் மாணவர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள்.
இந்த நிகழ்வு செய்தியாகின்றது! இணையத்தில் வைரலாகின்றது! ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராளிகளில் மற்றுமோர் நாயகி ஆகிறாள் ரிஹ்யா ஆஹிர். அதுதான் அவளது பெயர். அவள் உறுதியாக நின்றாள்! போலீஸ் இறங்கி வந்தார்கள்!’ என்கிற தலைப்பிட்டு படங்களுடன் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின்றன. இந்த நாளிதழ் நறுக்கு ஒன்றை X தளத்தில் பகிர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் எழுப்பிய கேள்வி இன்னும் கனமானது. ஆழமானது.

‘நீதியரசர்கள் இறங்கி வருவது எப்போது?’ என்று கேட்டிருக்கின்றார் இந்திரா ஜெய்சிங் எல்லாப் புகழும் இறைவனுக்கே! போராட்டத்தை சந்திரசேகர் ஆசாத் தொடருகின்றார்! நீட்டுக்கு எதிராகவும், ஜந்தர் மந்தரில் தாக்கப்பட்ட மாணவ-இளைஞர்களுக்கு நீதி வேண்டி.
இந்திய ஜனநாயகத்தில்,தங்கள் கருத்துக்களை அமைதியான முறையில் வெளிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் அரசியலமைப்புச் சார்ந்த உரிமையாகும்.அந்த உரிமைக்கு வன்முறை மூலம் பதிலளிக்கப்படுவது, அநீதி மட்டுமல்ல,ஜனநாயகத்திற்க்கு ஏற்ப்படும் இழுக்கு.ஜனநாயக விழுமியங்களுக்கே விடப்பட்ட சவாலும் ஆகும்.
இந்த வேதனையுடனும், ஜனநாயக விழுமியங்களைக் காக்கும் உறுதியுடனும்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாபாசாஹேப் அவர்களின் சிலைக்குக் கீழே இன்று முதல் போராட்டத்தை துவங்குகிறார். நீதி கிடைக்கும் வரையிலும், ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர் மற்றும் இளைஞர்கள் தாக்கப்பட்ட, சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரையிலும் அமைதியான ஜனநாயகப் போராட்டம் தொடரும்.


நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார்.
அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர். இதில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினோம். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என தெரிவித்தோம்.


டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்து வரும் மாணவர்கள் போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து பெரும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முகம் தெரியாத பலர் zomato மூலம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு உணவுகளை மூன்று வேலையும் வழங்கி வருகிறார்கள். அதே போல மருத்துவம் படித்த டாக்டர்கள் சாலை ஓரத்தில் அத்தியாவசிய மருந்து மாத்திரைகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். பாதிக்கப்படும் மாணவர்களுக்கு சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.

ஏறக்குறைய 75 ஆண்டுகால இந்திய சுதந்திர வரலாற்றில் இது போன்ற ஒரு போராட்டத்தை எந்த அரசும் இதுவரை கண்டதில்லை. இந்தியா முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. ஜந்தர் மந்தர் பகுதியில் இலட்சக்கணக்கான மாணவர்கள் குவிந்த வண்ணம் வருகின்றனர்.
எனவே பாரதிய ஜனதா அரசு மாணவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதை விட மாணவர்களை போராட வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாத்தால் போதுமானது. மத்திய ரிசர்வ் போலீசார் மாணவர்களை தாக்குவதினால் ஏற்படுகிற காயங்கள் பாரதிய ஜனதா அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.