#actor nana patekar ; பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த காலா பட நடிகர் நானா படேகர் மாரடைப்பால் மரணம்.

October 8, 2026

By தேவா ஹேமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் காலா நிரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகரும் இயக்குனருமான  நானா படேகர் (75)  கோலாலில் மாரடைப்பு காரணமாக தனது வீட்டில் காலமானார்.

நானா படேகர் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் :

பாரதிராஜா இயக்கத்தில் உருவான பொம்மலாட்டம், மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா போன்ற திரைப்படங்களில் பெரிதும் பேசப்பட்ட நடிகர் நானா படேகர் கோவாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். மகாராஷ்டிரா மாநிலம் ராய்கார்ட் மாவட்டத்தில் உள்ள முருத் என்னும் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு நானா படகர் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விஸ்வநாத் படேகர் இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

இவரது மனைவி பெயர் நீலகண்டி படேகர். 1988 ஆம் ஆண்டில் அகதாமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சலாம் பாம்பே படத்தில் நடித்த பிறகு இவர் அங்கார் என்ற படத்தில் மற்றொரு எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார்.  அதனைத் தொடர்ந்து பரிந்தா என்கிற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது கிடைத்தது. சிறந்த துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதையும் பெற்றுள்ளார். 1985 ஆம் ஆண்டில் கிராந்தி பீர் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் மற்றும் திரைக்கதை விருதையும் வென்றார்.  அக்னி சாட்சி அபஹரன் போன்ற படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தன இப்படங்களுக்காக இவர் சிறந்த துணை நடிகர் துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றவர் 2017 இல் நத்தம் ராட் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான மராத்தி பிலிம் பேர் வீருதயம் என்றார்.இர்பான் காணுடன் இணைந்து சிறந்த நடிகர் சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த வில்லன் பிரிவுகளில் பிலிம் பேர் விருதுகளை வென்ற ஒரே நடிகராவார் திரைப்படம் மற்றும் கலைத்துறையில் இவரது அர்ப்பணிப்புக்காக இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்களின் விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

நானா படேகர் 1990 ஆம் ஆண்டு இந்திய பிராந்திய ராணுவத்தில் கௌரவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.  பிறகார் படத்திற்காக மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு அந்த நேரத்தில் கர்னல் பதவியில் இருந்த ராணுவ ஜெனரல் வி கே சி சி உடன் பணியாற்றினார்.  1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது படைகள் மராட்டிய லைட் காலாட்படை பிரிவில் கௌரவ மேஜராகவும் தனது சேவைகளை வழங்கினார்.

நடிகர் நானா படேகர் (75) மாரடைப்பு காரணமாக காலமானார்.

கோவா வீட்டில் விடியற்காலை சுயநினைவற்ற நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கின்றனர். அங்கு அவரைக் காப்பாற்ற 45 நிமிடம் மருத்துவர்கள் கடைசி கட்டமாக போராடியும் பலன் அளிக்கவில்லை.
நானா படேகர் ஹிந்தி திரையுலகில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நெருங்கியிருந்த நிலையில் அவர் விடை பெற்றுக் கொண்டார். பாரதிராஜாவின் பொம்மலாட்டம், ரஜினியின் காலா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

ஒரு பொம்மலாட்டம் நடக்குது அது ரொம்ப புதுமையாக இருக்குது நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே என்ற பாடலுக்கு பொருத்தமானவர் நடிகர் நானா படேகர். இவருடைய மரணத்திற்கு இந்தி மற்றும் தமிழ் நடிகர்கள் என பல நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல பலர் இரங்கள் செய்தி தெரிவித்துள்ளனர்.

Share:

தேவா ஹேமா

October 8, 2026

Leave a Comment