டாஸ்மாக் வழக்கு விசாரணையில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளருடன் நள்ளிரவில் உதயநிதி துபாய் சென்றது ஏன் என வருமான வரித்து துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்ற ஐக்கிய எமிரேட்ஸ் விமானத்தில் அதிகாலை 12 40 மணிக்கு பிசினஸ் கிளாஸில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் உதயநிதி இரண்டு பேரும் அருகில் அமர்ந்து கொண்டு திடீர் பயணம் மேற்கொண்டனர்.
இருக்கை நம்பர் 02-E, 02-F திடீரென யாருக்கும் தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் துபாய் சென்ற திடீர் பயணம் குறித்து தமிழக உளவுத்துறை போலீசாரும் EDயும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பிஜேபி கட்சியைச் சார்ந்த பிரசாத் அவரது எக்ஸ் தளத்தில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார். இந்த பயணம் குறித்து உதயநிதி தரப்பில் எந்த செய்திகளும் வெளியிடப்படவில்லை.
மேலும் இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர்களை கேட்டாலும் தங்களுக்கு இந்த செய்தி குறித்து எந்த தகவலும் இல்லை என்கின்றனர். ஆகாஷ் பாஸ்கரனுடன் உதயநிதி பிசினஸ் வகுப்பில் திடீர் பயணம் மேற்கொண்டது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ஆகாஷ் பாஸ்கரன் உடன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அருகருகே ஒரே விமானத்தில் துபாய் பயணம் செய்துள்ளார் இது குறித்து ஒருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தகவலை தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு மே மாதம் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறைக்கு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, டாஸ்மாக் நிறுவனத்துக்கும் தமக்கும் எந்த வித தொடர்பும் இல்லாத நிலையில் தமது இல்லத்தில் சோதனை நடத்தியது தவறு என வாதிட்டார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி அமலாக்கத் துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதற்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, ஆவணங்கள் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப பெறப்பட உள்ளதாகவும், வேண்டுமானால் உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிதாக நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் கூறினார்.
இதனையடுத்து, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் தனது தரப்பு வாதங்களை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முன்வைக்கலாம் என உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைகளை நீக்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அந்த வழக்கு நடந்த காலகட்டத்தில் ஆகாஷ் பாஸ்கரனும் உதயநிதி ஸ்டாலினும் சந்திக்கவில்லை என்றும் செல்போனில் கூட பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் திடீரென இரண்டு பேரும் நள்ளிரவில் ஒரே விமானத்தில் ஒருவர் அருகில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு பயணம் மேற்கொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வேறொரு வியாபாரம் தொடர்பாக தங்களது முதலீடுகளை வேறொரு நிறுவனத்திற்கு மாற்ற முயற்சி செய்திருப்பதாகவும் அது தொடர்பான ஆவணங்களில் ஆகாஷ் பாஸ்கரன் உதயநிதிக்கு வேண்டப்பட்ட வினாமிக்கு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என்பதால் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே விமானத்தில் சென்றுள்ளதாக தெரிவித்தனர் மேலும் அது தொடர்பாக தாங்கள் விசாரணையை ரகசியமாக தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தி குறித்து தமிழகத்தில் உள்ள எந்த ஊடகங்களும் திமுகவுக்கு ஜால்ரா அடித்து மாத மாதம் ஐந்து ஆண்டுகளாக கட்டிங் வாங்கிக் கொண்டிருந்த youtube சேனல்களும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாயை வாடகைக்கு வாங்கி வியாபாரமாக்கும் சவுக்கு சங்கர் கூட இது பற்றி பேசவில்லை என்பது ஏன் என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.