இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி தமிழ் இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக திரை வரலாற்றில் ஏறக்குறைய 2000 காலகட்டத்தில் இருந்து கானா பாடல்களை பொதுமக்கள் இடம் கொண்டு சேர்த்த பெருமை தேவாவுக்கு உண்டு.
தேவாவின் இயற்பெயர் தேவனேசன் சொக்கலிங்கம் வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாங்காடு என்ற கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை பெயர் சொக்கலிங்கம் அம்மா பெயர் கிருஷ்ணவேணி. சிறுவயதிலிருந்தே இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
இசையமைப்பாளர் சந்திரபோஸ் உடன் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஜெ.பி கிருஷ்ணா என்பவரிடம் பாரம்பரிய இசையையும் மாஸ்டர் தன்ராஜியிடம் மேற்கத்திய இசையையும் முறையாக கற்றுக் கொண்டார்.
பின்னர் லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக்கல்லூரில் மேற்கத்திய இசையில் ஒரு படிப்பை முடித்தார். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார். 1989 ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகாராசா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதன் பிறகு வெளிவந்த நடிகர் பிரசாந்த் காவேரி நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் பாடல்கள் இவருக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தின. குறிப்பாக சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மாடி என்ற பாடலும் தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது மனசு தவிக்குது என்ற பாடல் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எல்லாம் பிரபலமானார். மேலும் அதே படத்தில் ஜேசுதாஸ் பாடி வெளியான கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே பாடல் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்.
இவரது தம்பிகள் சபேஷ் முரளி இவருக்கு ஸ்ரீகாந்த் தேவா என்ற மகன் உள்ளார். அவரும் இசையமைப்பாளராக உள்ளார். தமிழ் சினிமாவில் கானா பாடல்களை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு இதனால் இவர் கானா மன்னன் என்று போற்றப்பட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா, அஜித் நடித்த ஆசை, காதல் கோட்டை நேருக்கு நேர் நினைத்தேன் வந்தாய் வாலி இளையதளபதி நடித்த குஷி உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் இவருக்கு தேனிசைத் தென்றல் என்ற பட்டத்தை வழங்கினார்.
தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதுகளையும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். தேவாவின் திரை இசை வாழ்க்கையில் அழிக்க முடியாத வரலாற்றாய் அமைந்த படம் பாட்ஷா அந்த படத்தில் வரும் டைட்டில் சாங் இசையமைத்த பெருமை தேவாவுக்கு உண்டு அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த படம் நடித்தாலும் அந்த இசையைத்தான் இதுவரை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது.
தேவா இசையமைத்த எருக்கஞ்செடி ஓரம் இறுக்கி பிடிச்ச மாமா என்ற பாடல் காலத்தால் அழியாத பாடல் ஆகவும் அதே போல ஓடுகிற வண்டி ஓட ஒற்றுமையா ரெண்டு மாடு என்ற பாடலும் தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நினைச்சு என்ற பாடல் காலத்தால் அழியாத பாடலாக இன்றுவரை பட்டி தொட்டிகள் எங்கும் பாடப்பட்டு வருகிறது.
2026 அக்டோபர் மாதம் 17ஆம் தேதி இன்று தனது வீட்டில் இருந்தபோது காலை 8:30 மணியளவில் அவருக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாக வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி உள்ளார் உடனே அவரை தனியார் மருத்துவமனை இல் அவரை அனுமதித்துள்ளனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரது உயிரை மீட்க போராடினர் எனினும் அவர் சிகிச்சை பலனின்றி அங்கேயே மாரடைப்பால் காலமானார்.
தேவா அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இதய அறுவை சிகிச்சை அதாவது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது அவர் திடீர் மறைவு செய்து கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அரசியல் தலைவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்து தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் திரைப்பட நடிகர்கள் பாடகர்கள் இசைத் துறையை சேர்ந்தவர்கள் என அனைவரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அனைத்து இசைக்கலைஞர்களும் அவரது புகழை பேசி நேரில் வந்து அவரை விஜய் தொலைக்காட்சி இசையரங்கத்தில் நேரில் வாழ்த்தினார்கள் என்பதை குறிப்பிடத்தக்கது. அவர்களது குடும்பங்களுக்கும் பிள்ளைகளின் படிப்பிற்கும் தேவா செய்த உதவி இன்றியமையாதது காலத்தால் அழிக்க முடியாத உதவி என்று அவர்கள் சொன்னது அவர் இதயத்தை தொட்டது.
இறைவன் இவ்வளவு சீக்கிரம் தன்னை அவன் நிழலில் இளைப்பாறு அடைத்துக் கொள்வான் என்று அவர் எப்போதும் நினைத்ததில்லை காலம் மிகக் கொடுமையானது என்பதை அவரது மரணம் நினைவுபடுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் ஆடாதடா மனிதா ஆடாதடா கொஞ்சம் மாடிப்புட்டா அடங்கிடுவேன் மனிதா என்ற பாடல் வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை வெளிப்படுத்தி அவரே பாடிய பாடல் அந்தப் பாடல் மனித வாழ்க்கையின் எதார்த்தத்தை வெளிப்படையாக சொன்ன பாடல்.