#TVS family; TVS குடும்பத்தில் சொத்து தகராறு. சமூக வலைதளத்தில் வைரலாகும் பதிவு.

October 17, 2026

By இரா. தேவேந்திரன்.

TVS குடும்பத்தின் சொத்து தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி தான் தற்போது இந்தியாவின் ஐலட் செய்தியாக உள்ளது. இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் குழுமத்தில், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பங்குகள் மற்றும் வாரிசுரிமை தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளன. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், அவரது மனைவி மல்லிகா சீனிவாசன், மகள் லட்சுமி வேணு, மகன் சுதர்சன் வேணு ஆகியோருக்கு இடையிலான இந்த விவகாரம், டிவிஎஸ் குழுமத்தின் எதிர்கால உரிமை யாரிடம் இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

குறிப்பாக குடும்ப தொழிலில் மகன் சுதர்சனுக்கு அதிக உரிமை கிடைக்கிறதா, மகள் லட்சுமிக்கும் சமமான பங்கு வழங்கப்படுகிறதா என்பதுதான் இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது. ரூ.1.80 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால உரிமை தொடர்பானது என்பதால் இந்த விவகாரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

TVS குடும்பத்தில் சொத்து பிரச்சினை: மகளுக்கு நிர்வாகத்தை தருவதில் பாகுபாடு? நீதிமன்றம் செல்கிறாரா? | TVS Family Succession Dispute: Lakshmi Venu Alleges Unequal Asset ...

2025 ஏப்ரலில் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிவிப்பு இந்த விவகாரத்தை பெரிதாக்கியது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான 37 வயது சுதர்சன் வேணு, நிறுவனத்தில் Significant Beneficial Owner – SBO என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. எளிமையாகச் சொன்னால், ஒரு நிறுவனத்தில் பங்குகள் யார் பெயரில் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், அந்த பங்குகள் மூலம் யார் பயனடைகிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட உரிமை கொண்டவராக சுதர்சன் அறிவிக்கப்பட்டார்.

TVS குடும்பத்தில் சொத்து சர்ச்சை! ₹1.83 லட்சம் கோடி சாம்ராஜ்யம் — யாருக்கு உரிமை?

அவரது தந்தை வேணு சீனிவாசன் அறங்காவலராக இருக்கும் விஎஸ் அறக்கட்டளை மற்றும் சீனிவாசன் அறக்கட்டளை வழியாக இந்த உரிமை கிடைத்ததாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உரிமை அவருக்கு 2025 ஏப்ரல் 16ம் தேதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகே, சுதர்சனுக்கு உரிமை கிடைத்தது எப்படி, குடும்பத்தில் மற்றவர்களுக்கு என்ன பங்கு இருக்கிறது என்ற கேள்விகள் எழுந்தன.

முன்னதாக 2024 மார்ச் மாதத்தில் வேணு சீனிவாசன் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் யார் எந்த தொழிலில் ஈடுபடலாம், எந்தெந்த தொழில்களில் போட்டியிட கூடாது, டிவிஎஸ் என்ற பெயரையும் வர்த்தக முத்திரைகளையும் எந்த தொழில்களில் பயன்படுத்தலாம் என்பதற்கான விதிகள் இடம் பெற்றிருந்தன.

ரூ.1.80 லட்சம் கோடி டிவிஎஸ் சாம்ராஜ்யம்! மகன் சுதர்சன் vs மகள் லட்சுமி இடையே வாரிசுரிமை மோதல் | What is TVS Family Succession Dispute: Venu Srinivasan's Children and the ₹1.8 ...

அதன்படி சுதர்சன் வேணு குறிப்பிட்ட தொழில்களில் டிவிஎஸ் உள்ளிட்ட சில பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது. டிராக்டர்கள் போன்ற வேளாண் இயந்திர தொழில்களிலும் குறிப்பிட்ட காலத்துக்கு போட்டியிடக் கூடாது. அதேபோல், மல்லிகா சீனிவாசனும் லட்சுமி வேணுவும் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சில தொழில்களில் டிவிஎஸ் தொடர்பான வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், சில வாகன தொழில்களில் போட்டியிட கூடாது என்றும் ஒப்புக்கொண்டனர்.

TVS Empire Family Feud Erupts Over Inheritance
இதுவரை எல்லாமே ஓகே தான். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் குடும்பத்தின் சொத்துகள் மற்றும் நிறுவன பங்குகள் அடுத்த தலைமுறைக்கு எப்படிப் பிரித்து கொடுக்கப்படும் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாகவே இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக என்று இந்த விவகாரத்தை அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத் தொழிலில் தனக்கும் சமமான உரிமை வேண்டும் என்பதே மகள் லட்சுமி வேணுவின் கோரிக்கையாக இருக்கிறது. தற்போது செய்யப்பட்டுள்ள பங்கு பிரிப்பு நியாயமற்றதாக இருப்பதாக அவர் கருதுகிறார். அதேநேரம் கோர்ட் கேஸ் என போகாமல் இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்க்கவே அவரது தரப்பு விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லட்சுமிக்கு அவரது தாயார் மல்லிகா சீனிவாசன் முழுமையாக ஆதரவாக இருக்கிறாராம்.

அதேநேரம் லட்சுமிக்கு எந்த அளவுக்குப் பங்கு வழங்கப்பட்டுள்ளது, சுதர்சனுக்கு எந்த அடிப்படையில் உரிமை கிடைத்துள்ளது என்பதற்கான முழுமையான விவரங்கள் பொதுவெளியில் வெளியான அறிவிப்புகளில் தெளிவாக இல்லை.

Stock to buy long-term - TVS Motor shares: நீண்டகால முதலீட்டிற்கு டிவிஎஸ் மோட்டார் பங்குதான் பெஸ்ட்.. சந்தை நிபுணர்கள் ஓபன் டாக்!

இந்த பிரச்சினையில் அமல்கமேஷன்ஸ் குழுமத்தையும் சேர்த்து பேசுவது குறித்தும் லட்சுமியும் மல்லிகாவும் அதிருப்தி அடைந்துள்ளனர். அமல்கமேஷன்ஸ் குழுமத்தில் மல்லிகாவும் ஒரு பங்குதாரர் மட்டுமே. அப்படியிருக்க அந்த குழுமத்தின் மற்ற குடும்ப பங்குதாரர்களைக் கலந்தாலோசிக்காமல், அதன் சார்பாக அவர் எப்படிப் பேச முடியும் என்ற கேள்வியை இந்த விவகாரத்தை அறிந்த ஒருவர் எழுப்பியுள்ளார். டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான டாஃபேவை மல்லிகா நிர்வகிப்பதால் மட்டுமே.. அந்த நிறுவனத்தின் முழு உரிமையும் அவரிடம் இருக்கிறது என்று அர்த்தமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 டிசம்பரில் டிவிஎஸ் குடும்பத்தின் நான்கு பிரிவுகளுக்கும் இடையே குடும்ப ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. ஒவ்வொரு பிரிவும் எந்த தொழிலை நிர்வகிக்கிறதோ, அந்த தொழிலின் உரிமை பங்குகளும் அதற்கேற்ற வகையில் இருக்க வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கம். மேலும், குடும்ப நிறுவனங்கள் ஒன்றில் மற்றொன்று வைத்திருக்கும் பங்குகளைக் குறைப்பதும் இதன் நோக்கமாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக நிறுவன மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் வேணு சீனிவாசனின் பிரிவுக்கு முக்கியமான வாகன தொழில்களின் கட்டுப்பாடு கிடைத்தது.

Sri Venkateswara TVS Rasipuram | Rasipuram
தற்போது டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், டிவிஎஸ் மோட்டாரில் 50.26% பங்குகளை வைத்துள்ளது. அதாவது டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் வசம் உள்ளன. இந்த குடும்ப ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மற்ற குடும்பத்தினருக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.2,000 கோடியும் இருந்தது. 2022 நிதியாண்டில் சுந்தரம்- கிளேட்டன் நிறுவனம் டிவிஎஸ் மோட்டாரில் தனது பங்கில் சுமார் 7% அளவை குறைத்து ரூ.2,100 கோடியை திரட்டியதாக டிவிஎஸ் ஹோல்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது

சரி இப்போது சுதர்சன் பெயரில் அறிவிப்பு வந்ததால் உரிமை மாறிவிட்டதா? இதுதான் இந்த விவகாரத்தில் முக்கியமான சட்ட கேள்வி. சுதர்சன் வேணு Significant Beneficial Owner என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் மட்டும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உரிமை முழுமையாக அவருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்று கூற முடியாது என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் சட்ட நிபுணர் கார்த்திக் சேஷாத்ரி இது குறித்து கூறுகையில், “இந்த அறிவிப்பு எந்த ஆவணத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.. அது அறக்கட்டளை ஆவணமாகவோ, குடும்ப ஏற்பாடாகவோ அல்லது பங்குகளை மாற்றியதற்கான ஆவணமாகவோ இருக்கலாம். அத்தகைய ஆவணம் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டிய கட்டாயம் இல்லாமலும் இருக்கலாம். நிறுவனங்கள் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்யும் அறிவிப்புகள் சில நேரங்களில் ஒரு தரப்பின் தகவல்களின் அடிப்படையில் மட்டும் வெளியிடப்படலாம். இதுபோன்ற சூழல்களில்தான் குடும்பத்துக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன” என்றார்.

மொத்தத்தில், டிவிஎஸ் குடும்பத்தில் யாருக்கு எந்த தொழிலின் மீது உரிமை இருக்கிறது, அந்த உரிமை எந்த ஆவணத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது, மகள் லட்சுமிக்கும் சமமான பங்கு கிடைக்கிறதா என்பதுதான் இந்தப் பிரச்சினையின் மையம். சுதர்சனின் பெயரில் வெளியான அறிவிப்பு மட்டும் இந்த கேள்விகளுக்கு இறுதியான பதிலை தராது.. அதற்கு பின்னால் உள்ள ஆவணங்களையும் குடும்ப ஒப்பந்தங்களையும் ஆராய வேண்டியுள்ளது.

Share:

இரா. தேவேந்திரன்.

October 17, 2026