#International award for Indian physicist Ashoke Sen; பல்வேறு சாதனைகளுக்கு கிடைத்த கவுரவம்; இந்திய இயற்பியலாளர் அசோக் சென்னுக்கு சர்வதேச விருது.

October 25, 2026

By ச. ஜெனித்

மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் பிறந்தவர் இயற்பியலாளர் அசோக் சென், 70. தற்போது கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச கோட்பாட்டு அறிவியல் மையத்தில் பேராசிரியராக உள்ளார்.

இயற்பியலின் அடிப்படை விதிகள், பொருள் மற்றும் விசைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விளக்க முயலும், ‘ஸ்ட்ரிங் தியரி’ ஆய்வில், இவர் உலக அளவில் முக்கியமான ஆராய்ச்சியாளராக கருதப்படுகிறார்.Ashoke Sen becomes first Indian physicist to win 2026 Oskar Klein Medal | India News - Business Standardக்ட்ரான்’ போன்ற அடிப்படை துகள்களை, வழக்கமான இயற்பியல் ஒரு புள்ளி போன்ற அமைப்பாக கருதிய நிலையில், ஸ்ட்ரிங் கோட்பாடு அவை மிக நுண்ணிய சரம் போன்ற அமைப்புகளாக இருக்கலாம் எனக் கூறுகிறது. சரம் அதிரும் விதத்தைப் பொறுத்து, வெவ்வேறு அடிப்படை துகள்களின் பண்புகள் உருவாகலாம் என்பது கோட்பாட்டின் கருத்து.

இந்த கோட்பாட்டில் செய்த ஆய்வுகளுக்காக அசோக் சென்னுக்கு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2026ம் ஆண்டுக்கான, ‘ஆஸ்கர் க்ளீன்’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இயற்பியலாளர் ஆஸ்கர் க்ளீனின் பெயரில் 1988ல் இந்தப் பதக்கம் நிறுவப்பட்டது.

இயற்பியலாளர் அசோக் சென், 2001ல் பத்மஸ்ரீ, 2012ல் அடிப்படை இயற்பியல் திருப்புமுனை விருது, 2013ல் பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.

Share:

ச. ஜெனித்

October 25, 2026