A case has been registeredSuresh Vedanayagam ; வாட்ஸ் அப்பில் அவதூறு செய்தி பரப்பிய வழக்கில், தினகரன் மூத்த செய்தியாளர் சுரேஷ் வேதநாயகம் மீது வழக்கு பதிவு.

October 22, 2026

By இரா. தேவேந்திரன்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவரும் தினகரன் பத்திரிகையின் தலைமை செய்தியாளருமான சுரேஷ்வேதநாயகம் மற்றும் தாம்பரம் பகுதி தினகரன் ரிப்போட்டர் சரத் என்கிற சரத்குமார் மற்றும் நக்கீரன் பத்திரிகையின் ரிப்போட்டர் தாமோதரன் பிரகாஷ் ஆகிய மூன்று பேர் மீதும் சென்னை வேப்பேரி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினகரன் ரிப்போர்ட்டர் சுரேஷ் வேதநாயகம்.

பாலிமர் டிவி ரிப்போர்ட்டர் கதிரவன் என்பவர் கொடுத்த புகாரில், தான் சென்னை , அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு மற்றும் ஜெம் வீரமணி வழக்குகளை ஆதாரத்தோடு வெளியிட்டு வருவதாகவும், இந்நிலையில் கடந்த 29.09.2026ம் தேதி 1.REPORTER GUILD, 2.KINDNESS WING, 3.காவலர் இரகசிய தகவல், 4.நீர், நிலம், காற்று ஆகிய வாட்ஸ் ஆப் குரூப்புகளில் தான் கோயம்பேடு காவல் ஆய்வாளரிடம் ஐந்து லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று பணம் கேட்டு மிரட்டியதாக, பொய்யான செய்திகளை பரப்பியதாக கொடுத்த புகாரின் பெயரில், தாமோதரன் பிரகாஷ் என்பவரை நேற்று (20.10.2026) விசாரணை செய்து அவரது செல்போனை ஆய்வு செய்த போது சம்பவம் உண்மை என தெரியவந்தது. அதன் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பொய்யான மற்றும் அவதூறு பரப்பும் வகையிலான செய்திகளை பரப்பி, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியும், புகார்தாரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் முயன்றது தொடர்பாக, G-1 வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சுரேஷ் வேதநாயகம் (தினகரன் தலைமை செய்தியாளர்), மற்றும் சரத்குமார் (தினகரன் தாம்பரம் செய்தியாளர்) இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, நேற்று (21.10.2026) இருவரையும் வேப்பேரி காவல் நிலையத்திற்கு காலை 11 மணிக்கு வரவழைக்கப்பட்டு தனித்தனியாக இருவரிடமும் தனித்தனியாக நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.நக்கீரன் பிரகாஷ்.

விசாரணையின் போது, மேற்கண்ட அவதூறு செய்தியை வாட்ஸ்அப் மூலம் அனுப்ப பயன்படுத்தப்பட்ட கைப்பேசியை (செல்ஃபோனை,) சட்ட விதிகளின்படி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசி, (செல்ஃபோனை,) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க அறுவுறுத்தி சட்டப்பிரிவு 35 (3) BNSS ன் படி சம்மன் சார்வு செய்து அனுப்பிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகம் தினகரன் பத்திரிகையில் தலைமை செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவரது ஆதரவாளரும் இவரது நிர்வாகத்தின் சக ஊழியருமான சரத்குமார் என்பவர் தாம்பரம் பகுதி தினகரன் செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

தாம்பரம் பகுதி ரிப்போர்ட்டர் சரத்குமார்.

சுரேஷ் வேதநாயகம் whatsapp-ல் ஒரு பொய்யான தகவலை தனது சக ஊழியரிடம் சரத்துக்கு அனுப்பி சரத் பல whatsapp குழுக்களில் அதை ஷேர் செய்து வெளியிட்டார். அதில் பாலிமர் டிவி செய்தியாளர் கதிரவன் மீது பொய்யான அவதூறுகளை அள்ளி வீசும் விதமாக அந்த செய்தி இருந்தது என்றும் கோயம்பேடு க்ரைம் இன்ஸ்பெக்டரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது. அந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்த வேப்பேரி காவல் நிலைய உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினார்.

அதாவது முதலில் சரத்குமாரை நேரில் அழைத்து நடந்தது என்ன யார் உங்களை அந்த செய்தியை போட சொன்னது எதற்காக வெளியிட்டீர்கள் எதற்காக தவறான தகவலை பொதுமக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பரப்பினீர்கள் என்று கேட்டார். அந்த செய்தியை வெளியிடச் சொன்னது யார் என்று கேட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகத்தின் பெயரை தன் வாக்குமூலத்தில் சரத் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நக்கீரன் பிரகாஷ் விசாரணைக்கு அழைத்த போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அவர் கதிரவன் பற்றி தவறான தகவலை பரப்பியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல சுரேஷ் வேதநாயகத்திற்கு அவர் அடிக்கடி பேசியதும் வாட்ஸ் அப்பில் செய்திகளை பகிர்ந்ததும் போலீசார் கண்டுபிடித்தனர். அதன்பேரில் சுரேஷை விசாரணை அழைத்தனர். காலை 11 மணிக்கு விசாரணைக்கு அழைத்து மாலை 7 மணி வரை உட்கார வைத்து பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராக இருக்கும் சுரேஷ் வேதநாயகம் சக உறுப்பினராக இருக்கும் கதிரவன் மற்றும் சில உறுப்பினர்கள் மீது அவதூறான செய்திகளை தன்னுடன் பணியாற்றும் பத்திரிகையாளர்களிடம் கொடுத்து வாட்ஸ் அப் குழுக்களில் பகிர செய்தது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவருடைய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த திமுக ஆட்சி காலத்தில் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் தினகரன் பத்திரிகையாளர் சுரேஷ் வேதநாயகம். மேலும்  முன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் இவரும் நெருங்கிய நண்பர்கள் என்று போலீஸ் வட்டாரத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது.

இவர் மீது ஜெம் வீரமணி வழக்கில் இவருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. போலீஸ் கமிஷனர் அருணை வைத்து பல காரியங்களை செய்து முடித்தார் என்றும் தனக்கு சாதகமாகவும் தான் ஆதாயம் அடையும் வகையில் பல சம்பவங்களை செய்து கொண்டார் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உள்ள சக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே தற்போது பேசத் தொடங்கி உள்ளனர்.நக்கீரன் பிரகாஷ் மற்றும் சுரேஷ் வேதநாயகம் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் இரண்டு பேரும் போலீஸ் ட் பார்ப்பதால் பல செய்திகளை பூதாகரப்படுத்தியும் அவதூறு பரப்பியும் செய்தி வெளியிட்டார்கள் என்று வெளிப்படையாகவே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் சில அமைச்சர்களும் பேசத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே நக்கீரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நக்கீரன் பிரகாஷ் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மோசமான நோய் இருப்பதாக சமூக வலைதளத்தில் பேசிய வீடியோ வைரலானது. அதற்கு தமிழக முழுவதும் அவருக்கு கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புக் குரல்களும் எழத் தொடங்கின. இந்த வழக்கில் நிச்சயம் நக்கீரன் பிரகாஷ் மீது வழக்கு விசாரணை விரைவில் தொடங்கி அவருக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.

பாலிமர் டிவி கதிரவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேகம் எடுத்திருக்கும் இந்த புகார் குறித்து பத்திரிகையாளர் மன்றத்தின் செயலாளர் அசீப் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கதிரவனிடம் சமரசம் பேசி வருகின்றனர். குறிப்பாக சுரேஷ் வேதநாயகத்தின் மீது கொடுத்த புகாரையாவது வாபஸ் பெற வேண்டும் என்று கதிரவன் காலில் விழாத குறையாக கெஞ்சத் தொடங்கியுள்ளனர் என்கின்றனர் கதிரவன் சார்ந்திருக்கும் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள்.

Share:

இரா. தேவேந்திரன்.

October 22, 2026