#Avadi Inspector; புகார் கொடுக்க வந்தவரை மிரட்டிய ஆவடி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன்..

November 8, 2026

By இரா. தேவேந்திரன்.

சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவர் ஆவடி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் பற்றி அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை ஆவடி சரக காவல் உதவி ஆணையர் ஏசி சம்பத்திடம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது;

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி அன்று எனது அண்ணன் மனைவி ரேவதி, அவரது மகள் பிருந்தா மருமகன் தனசேகர் ஆகிய மூவரும் எனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அவர்களை உங்கள் வீட்டிற்கு நீங்கள் போக வேண்டும் என் வீட்டில் இருக்கக் கூடாது என்று நான் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தேன் ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்து என் வீட்டிலேயே இருந்து எனக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர்.சென்னை: ஏ.டி.எம் இயந்திரத்தில் நூதன திருட்டு – வடமாநில சிறுவன் கைது | Uttar Pradesh man arrested in chennai for theft in ATM machineஎனக்கு சொந்தமான இடத்தில் சுற்று சுவர் அமைத்த போது மேற்கண்ட மூவரும் தடுத்து நிறுத்தி என்னிடம் தகராறு செய்து என்னை மிரட்டினார்கள். அது சம்பந்தமாக டி_6 ஆவடி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் புகார் கொடுத்திருந்தேன். அது சம்பந்தமாக 27ஆம் தேதி விசாரணைக்கு வர வேண்டும் என இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் என்னை அழைத்தார். நான் விசாரணைக்கு ஆஜரானேன். உதவி ஆய்வாளர் அவர்கள் இருதரப்பினரையும் விசாரணை செய்து என்னுடைய பத்திர ஆவணங்களை பெற்றுக்கொண்டு சரியாக ஆவணங்கள் சரியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் எதிர் தரப்பினரிடம் எந்த ஆவணமும் இல்லாததால் சமாதானம் செய்ய முயற்சித்தார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். இருவரையும் நீதிமன்றம் அணுகி தீர்த்துக் கொள்ளுங்கள் என சப் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார். அதற்கு நாங்களும் ஒப்புக் கொண்டோம்.

அதன் பெயரில் உதவி ஆய்வாளர் அவர்கள் எங்களையும் எதிர் தரப்பினரையும் ஆய்வாளரை பார்த்துவிட்டு போங்க என்று கூறியதின் பெயரில் இரு தரப்பினரும் ஆய்வாளர் அறைக்குச் சென்று ஆய்வாளர் அவர்களை சந்தித்தோம்.

அப்போது என்னிடம் இன்ஸ்பெக்டர் என்னுடைய சொத்து சம்பந்தமான ஆவணங்களை கேட்டார் நானும் புகார் புகார் கொடுத்தது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் காண்பித்த போது இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் அவர்கள் சம்பந்தமில்லாமல் என்னிடம் கேள்விகளை கேட்டு அசிங்கமாக பேசினார். நான் நீங்கள் கேட்கின்ற கேள்வி சொத்து சம்பந்தம் இல்லை என்றும் அவர் என்னிடம் இருந்த ஆவணம் என் தகப்பனார் என் மகனுக்கு தான பத்திரம் கொடுத்ததை வாங்கி பார்த்து உன் மகனுக்கு எப்படி உங்க அப்பா கொடுப்பார்.  உங்க அப்பனுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு உங்கள் அப்பா ஒரு 420 இது போலியான பத்திரம் என்று என்னை பார்த்து முறைத்து சொன்னார். உடனே என்னுடன் வந்த என் வழக்கறிஞர் நீங்கள் சொல்வது தவறு என்று மறுப்பு தெரிவித்தார்.

அதற்கு எனது தரப்பு வழக்கறிஞரை வெளியே போ என்று ஒருமையில் பேசி அதிகார தோரணையில் மிரட்டினார். எதிரே இருந்த எதிர் தரப்பினரிடம் அவர் அங்கு சுற்றுசுவர் கட்டினால் இடித்து தள்ளுடா இது என்னோட கோட்டை இங்க நான் தான் பாஸ் நான் பார்த்து கொள்கிறேன். அவன் என்ன புடுங்குறான் என்று பார்த்துக் கொள்கிறேன் என்று பேசினார் .

இப்படி சொல்ல முடியாத வார்த்தைகளில் என்னையும் எனது வழக்கறிஞரையும் ஆவடி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் பேசினார் எனவே அய்யா அவர்கள் அவர் விசாரணை செய்ததில் ஒரு தலைப்பட்சமாக உள்ளது. எனவே நான் கொடுத்த புகாரினை மீண்டும் தங்கள் முன்னிலையில் விசாரணை செய்ய வேண்டும். ஆய்வாளர் சந்திரமோகன் அவர்கள் பேசிய வீடியோ பதிவு குரல் பதிவு பார்த்து நீங்கள் விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்னை தரை குறைவாக பேசிய ஆய்வாளர் சந்திரமோகன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என புகாரில் கூறப்பட்டுள்ளது.

சேக்காடு ஆனந்தராஜ். புகார் கொடுத்தவர்.

இதுகுறித்து நாம் சம்பந்தப்பட்ட ஆனந்தராஜ் இடம் விசாரணை செய்தபோது எனது அண்ணன் மருமகன் பூந்தமல்லி எம் எல் ஏ குட்டி என்பவருக்கு மிக நெருக்கமானவர் குட்டி இன்ஸ்பெக்டர்  சந்திரமோகன் இடம் பேசி அவரது தரப்பு ஆதரவாளர்களுக்கு ஆதரவாக வழக்கை முடித்து தரு முடித்து தரும்படி சொன்னார். அதன் அடிப்படையிலேயே என்னையும் எனது வழக்கறிஞரையும் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மிக கேவலமாகவும் மிரட்டியும் பேசி நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கடும் சொற்களால் பேசினார் என தெரிவித்தார். இது தொடர்பாக ஆவடி இன்ஸ்பெக்டர் சந்திரமோகனை நாம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே ஆனந்தராஜ் புகார் தொடர்பாக காவல் உதவி ஆணையர் விசாரணை நடத்தியதற்கு பிறகு உண்மை நிலை என்னவென்று தெரியவரும்.

Share:

இரா. தேவேந்திரன்.

November 8, 2026