#The No. 1Lottery ”MASSIVE HIT” ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் சக்கை போடு போடும் 1 நம்பர் லாட்டரி.

November 5, 2026

By செ. தனசேகர்

Dipawali special news# Exclusive news# one number lottery news# Kanchipuram police news# special team news# crime news# Dipawali special news.

தமிழ்நாடு முழுவதும் சட்டத்துக்கு புறம்பான எல்லா தொழில்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. திமுக ஆட்சியில் என்ன நிலை இருந்ததோ அதே நிலை தான் தற்போதும் இருந்து வருகிறது. கஞ்சா விற்பனை போதை மாத்திரை கூடுதல் விலைக்கு மதுபானம் இருப்பது கள்ள சந்தையில் மதுபானம் இருப்பது சூதாட்ட கிளம்புகள் ஒரு நம்பர் லாட்டரிகள் என எல்லா இல்லீகள் பிசினஸ்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கனகம்மாசத்திரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் கனகம்மாசத்திரத்தை ஒட்டியுள்ள மகாராஜபுரம் பகுதியிலும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.

ஒரு நம்பர் லாட்டரி பெயர் போன பூந்தமல்லியை சேர்ந்தவர் பழனி இவர்களது குடும்பத் தொழிலே ஒரு நம்பர் லாட்டரி தானாம். இவர்களுக்கு லாட்டரி வியபாரத்தை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாதாம். இவர்களின் சொத்து மதிப்பு பல கோடியை தாண்டும் என்கிறார்கள்.DGP Mahesh Kumar Aggarwal. IPS

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, வடபழனி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், கனகம்மாசத்திரம் அதனை ஒட்டி உள்ள ஆந்திர மாநிலமான மகாராஜபுரம் போன்ற பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி பிசினஸ் செய்து வருபவர் பூந்தமல்லி பழனி என்பவர் இவர் மீது பூந்தமல்லியில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.

அது மட்டுமில்லாமல் இவர் அந்த பகுதியில் உள்ள உயர் போலிஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவருக்கும் லஞ்சம் மாக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் தினமும் ஹைவே பெட்ரோல், ரோந்து போலீசார், பீட்டு போலீசார் என அனைவருக்கும் நாளொன்றுக்கு 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை மாமுல் கொடுத்து வருகிறாராம்.இந்த நிலையில் பெண் பித்தர் என்றும் காக்கி உடையில் ஒரு களவாணி என்கிற போர்வையில் உலா வந்த ரவிக்குமார் காவல் உதவி ஆணையர் ரவிக்குமார் அவர்கள் தலைமையில் தனது பிசினஸை பெரும்பாலான பகுதிகளில் பூந்தமல்லியில் நடத்தி வந்தாராம் பழனி.

ரவிக்குமார் மாற்றப்பட்டதற்கு பிறகு பல புகார்கள் காவல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட பிறகு ஒரு நம்பர் லாட்டரிக்கு பூந்தமல்லி போலீசார் தடை விதித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்கிற பழமொழிக்கு ஏற்ப ஒரு நம்பர் லாட்டரி மனித உயிர்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் அட்டையை போல வாழ்ந்து வந்த பழனி குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு கப்பம் கட்டி ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளில் தங்களது தொழிலை வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் நடத்தி வருகின்றனராம். 

அதேபோல திருவள்ளூர் மாவட்டம் கனகம்மா சத்திரம் அதனை ஒட்டியுள்ள ஆந்திரா பகுதியான மகாராஜபுரம் பகுதிகளிலும் இந்தத் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.  எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் வடக்கு மண்டல ஐஜி மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உண்மை நிலை என்ன என்பதை ஆய்வு செய்து உயரதிகாரிகளுக்கு அறிக்கையை அளித்து சம்பந்தப்பட்ட  பழனி மற்றும் அவரது குழுவினரை கைது செய்து பொதுமக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்கின்றனர் ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருணாகரன்.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைப் போல போலீசார் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன எங்களது பாக்கெட்டை நிரம்பினால் போதும் என்ற கணக்கில் எல்லாவிதமான அரசுக்கும் சட்டத்திற்கும் புறம்பான எல்லா தொழில்களையும் அனுமதித்து அதன் பேரில் லஞ்சத்தை பெற்று சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதே போல செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் பகுதியிலும் 1 நம்பர் லாட்டரி அமோகமாக வியாபாரம் நடைபெற்று வருகிறது.  கிழக்கு தாம்பரம் ,சேலையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 1 நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கிழக்கு தாம்பரம், காந்தி நகர், பூங்கா, சேலையூர், காமராஜபுரம், பஸ் நிலையம், வேங்கை வாசல், சேலையூர், மாடம்பாக்கம் பல்வேறு பகுதிகளில் லாட்டரி கும்பல் ரகசியமாக திறந்த வெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.

Share:

செ. தனசேகர்

November 5, 2026