வேலூர் கே.வி.குப்பம் அருகே இளம்பெண் கொலையா !! தற்கொலையா?

December 24, 2021

By இரா. தேவேந்திரன்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கனேரி பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் இவரின் மகன் கௌதம் (21) என்பவருக்கும் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணியப்பன் என்பவரின் மகள் கலைவாணி (20) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே தற்போது கலைவாணி தனது கணவர் வீடான வேப்பங்கனேரியிவ் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் கலைவாணி நேற்று முன்தினம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கண்ட அவரது குடும்பத்தினர் கே.வி.குப்பம் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கலைவாணிஉடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்துபெண்ணின் தந்தை கண்ணியப்பன் கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி 6 மாதங்களே ஆகியுள்ளதால் குடியாத்தம் ஆர்.டி.ஓ தனஞ்செழியன் விசாரணை செய்து வருகின்றார்.

கலைவாணியின் பெற்றோர் தன் மகளை அடித்து கொலை செய்து விட்டதாகவும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக போலீசாரிடம் நடந்த விசாரணையில் கூறியதாக தெரியவருகிறது.

திட்டமிட்டு தனது மகளை மணமகன் வீட்டார் கொலை செய்து விட்டனர் என்கிற குற்றச்சாட்டை வைத்துள்ளனர். கலைவாணியின் பெற்றோர்.பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் வரதட்சனை கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

Share:

இரா. தேவேந்திரன்.

December 24, 2021

Leave a Comment