#general election ; 2026ஆம் ஆண்டு பொது தேர்தல் தமிழக மக்கள் அனைவரும் கட்டாயமாக ஓட்டு போடுங்க.

April 23, 2026

By இரா. தேவேந்திரன்.

#TN ELECTION 2026 ;

உங்கள் வாக்கு உங்கள் உரிமை ஜனநாயகம் காக்க ஓட்டு போடுங்க…

தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் முடிவடைந்தது.  அதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது கட்சியினருடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இரண்டு தினங்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டது.

அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

 

Archana Patnaik, IAS.

எனவே பொதுமக்கள் கோடை வெயிலை மனதில் வைத்து காலை 7:00 மணி முதல் 10 மணிக்குள் சீக்கிரமாக சென்று வாக்களித்து விட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.  எனவே காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6:00 மணி வரும் மணி வரை நடைபெறும்.  எனவே தனிமனித உரிமையை காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் அனைவரும் தங்களது வாக்குகளை யாருக்கு பதிவு செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அதை பதிவு செய்யும் வகையில் வாக்களிக்கவும் . யாரும் ஓட்டு போடாமல்  இருக்ககூடாது. தங்கள் பகுதியில் உள்ள வாக்கு மையத்திற்கு  நேரடியாக சென்று வாக்களிக்க வேண்டும் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

அதேபோல தனியார் நிறுவனங்களிலும் ஒரு நாள் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.  எனவே இந்த ஆண்டு 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.  அதனை தொடர்ந்து பொதுமக்கள் தானாக முன்வந்து இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள், நடுத்தர வயது மிக்கவர்கள் அனைவரும் சீக்கிரமாக சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நாமும் அதைத்தான் வலியுறுத்துகிறோம்.

நீங்கள் அளிக்கும் வாக்கு தான் வருங்கால ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் வகையில் அமையும் எனவே வாக்குகளை வீணாக்காமல்  பதிவு செய்யுங்கள். கண்டிப்பாக ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

அனைவரும் ரெடியா இருக்கீங்களா ஓட்டு போட சீக்கிரம் போங்க உங்க ஊர் பூத்துக்கு…

மக்கள் நலனில் எங்கள் அக்கறை.
சமூக அவலங்களை தோலுரிக்கும் இணையதளம்.சென்னை ரிப்போர்ட்டர்ஸ்.காம்
www.chennaireporters.com

Share:

இரா. தேவேந்திரன்.

April 23, 2026

Leave a Comment