chennireporters.com

இசையமைப்பாளர் யுவன் வீட்டில் 70 கிலோ போதை மருந்து மனைவி ஒப்புதல் வாக்குமூலம்.

மனைவியுடன் யுவன் சங்கர் ராஜா

எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருந்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஸப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸப்ரூன் நிஸார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

யுவன் மனைவி ஸப்ரூன் நிசா

இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தையும் உள்ளது முதன் முறையாக யு1 ரெக்கார்ட்ஸுக்கு வீடியோ நேர்காணல் ஒன்றை வழங்கி யுள்ளார் அதில் அனைத்து வகையான தனிப்பட்ட கேள்விகளுக்கும் அமைதியாக பதிலளித்தார்.

அப்போது போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டதுஅதற்கு பதிலளித்த இவன் சங்கர் ராஜாவின் மனைவி ஸப்ரூன் நிஸார் தன் கணவர் யுவனை தானே நீங்கள் (ட்ரக்ன்னு) சொல்றீங்க,ஆமாம் வீட்டிலேயே 70 கிலோ போதை மருந்தை வச்சிருக்கேன் என நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

எங்கே போனாலும் என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரன்ஸ், எல்லாத்தையும் கூடவே எடுத்துக்கிட்டு தான் போவேன் என்ற சுவாரசியமாக சிரித்துக்கொண்டே பதில் அளித்தார் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி.

இதையும் படிங்க.!