chennireporters.com

#died of cancer ; புற்று நோயால் இறந்த அம்மாவை இழந்து வாடும் 5 வயது குழந்தை.

வாணியம்பாடி அருகே புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்தது குறித்து  பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது.  இளம் பெண்ணிற்கு  ஆபரேஷன் செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் 197/76. சுண்ணாம்பு பள்ளம், நிம்மியம்பட்டு (கிராமம் அஞ்சல்) வாணியம்பாடி தாலுக்காவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் கூலி வேலை செய்து வருகிறார். பாண்டுரங்கன் அவரது மனைவி வள்ளி மற்றும் குழந்தைகள்.

அவரது மனைவி வள்ளிக்கு உடல் நலம் சரியில்லாமல்  வாணியம்பாடி, காதர்பேட்டை மசூதி எதிரே உள்ள சிராஜ் சர்ஜிகல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது மனைவி வள்ளி இறந்து போனார் என்று   பாண்டுரங்கன் திருப்பத்தூர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  அவர் கொடுத்த புகார் பின் வருமாறு…நான் 15 வருடங்களுக்கு முன்பு வள்ளி/34 என்ற பென்னை திருமணம் செய்தேன்.. எங்களுக்கு கமலேஷ்/11 வயது, அபிஷேக்/5 வயது. என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர், எனது மனைவி வள்ளிக்கு, கடந்த சில மாதங்களாகவே இடுப்பு பகுதியில் அதிகப்படியான வலி இருப்பதாக கூறியதால், எனது மனைவி வள்ளியை, வாணியம்பாடி, காதர்பேட்டை, மசூதி எதிரே உள்ள சிராஜ் சர்ஜிகல் மருத்துவமனைக்கு சென்று டாக்டர் நதீம் அகமது இடம் மருத்துவ சிகிச்சை பெற 02-06-2026 அன்று அழைத்துச் சென்றேன்.டாக்டர் நதீம் அகமது.கேன்சர் நோயால் இறந்து போன வள்ளி.

எனது மனைவி வள்ளியை பரிசோதனை செய்த டாக்டர் நதீம் அகமது ,”எனது மனைவி வள்ளியின் சிறுநீரக(கிட்னி) பகுதியில் கட்டி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றும், அதற்காக 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும், மூன்று நாள் மருத்துவமனையில் தங்கி அறுவை சிகிச்சை செய்து முடித்து வீடு திரும்பலாம் என்று கூறினார்.

டாக்டர் நதீம் அகமதின் அறிவுறுத்தலின் பேரில், எனது மனைவி வள்ளியை அறுவை சிகிச்சைக்காக கடந்த 09-06-2026அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் மருத்துவமனையில் சேர்த்தேன். என் மனைவிக்கு டாக்டர் நதீம் அகமது அடுத்த நாள் 10-06-2026 புதன்கிழமை மாலை 4 மணி அளவில் அறுவை சிகிச்சை செய்யப் போவதாக கூறினார்.

அதன்படி புதன்கிழமை மாலை 4 மணி அளவில் எனது மனைவி வள்ளியை, அறுவை சிகிச்சை ஆடை அணிவித்து, அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை நடக்கும் என்று கூறிய நிலையில், வெகு நேரம் ஆகியும் மருத்துவமனை தரப்பிலிருந்து எதுவும் கூறவில்லை, இந்த நிலையில் இரவு 8:30 மணி அளவில் எனது மனைவி வள்ளியை வார்டுக்கு ஸ்ட்ரெச்சரில் அழைத்து வந்தனர். டாக்டர் நதீம் அகமது.மருத்துவமனை தரப்பிலோ மருத்துவர்களோ அறுவை சிகிச்சை பற்றி எதுவும் எங்களிடம் கூறவில்லை, இந்த நிலையில் எனது மனைவி வள்ளிக்கு அறுவை சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மயக்க மயக்க மருந்தால், மயக்க நிலையில் இருந்த எனது மனைவி வள்ளி பல மணி நேரம் கடந்தும் அவருக்கு மயக்கம் தெரியவில்லை. தொடர்ந்து மூன்று நாள் என் மனைவி வள்ளிக்கு மயக்கம் தெரியாததால், இது பற்றி டாக்டர் நதீம் அகமதிடம் நான் கேட்டதற்கு, டாக்டர் நதீம் அகமது” உங்கள் மனைவிக்கு அறுவை சிகிச்சைக்காக கொடுத்த மயக்க மருந்து, போதாததால் இரண்டாவது முறை மயக்க மருந்து கொடுத்ததால், அதிகப்படியான மயக்க நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அவர் விரைவில் சுயநினைவுக்கு திரும்பவார் என்று கூறினார்.

அதற்கு நான் டாக்டரிடம், நன்றாக இருந்த எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை என்ற பெயரில், அதிகப்படியான மயக்க மருந்து கொடுத்ததால் அவர் மயக்கம் தெரியாமல், சுயநினைவுக்கு திரும்பாமல் இருக்கிறாரே என்று மருத்துவமனையில் கதறி அழுத்தேன் .!  அதற்கு டாக்டர் நதீம் அகமதும் உடன் சிலர் என்னை தனி அறைக்கு அழைத்து சென்று, இங்க கத்தி கூச்சல் போட்டால் மருத்துவமனையின் பெயர் கெட்டுவிடும் என்றும் உடனடியாக சென்னை ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பவேண்டும் என்று சொன்னார். இந்த விவரத்தை எனது உறவினர்களும் தெரிவித்தேன். உடனே மருத்துவமனைக்கு வந்த எனது உறவினர்கள் மருத்துவமனையில் கேள்வி கேட்டனர்,16-06-2026 தேதி அன்றுஉடனே டாக்டர் நதீம்அகமது ஆம்பூரில் உள்ள ALPA SCAN CENTER சென்று எனது மனைவி வள்ளிக்கு ஸ்கேன் எடுக்க கூறினார்.சுயநினைவு இல்லாத எனது மனைவியை அழைத்துக்கொண்டு டாக்டர் நதீம் அகமது கூறிய வாடகை ஆம்புலன்ஸ் மூலம் எனது மனைவியை ஆம்பூருக்கு அழைத்துச் சென்று, ஸ்கேன் எடுத்துக்கொண்டு மீண்டும் வாணியம்பாடி சிராஜ் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர் நதீம் அகமது” எனது மனைவி வள்ளிக்கு மூளைக்கு செல்லும் நரம்பிற்கு ரத்தம் செல்லவில்லை என்றும், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினார்,

pheochromocytoma is a rare tumor that forms in the center of an adrenal gland and releases excess stress hormones Symptoms High blood pressure Severe headaches Heavy sweating Fast or irregular heartbeat.

பின்னர் சிறிது நேரம் கழித்து, அவர் அங்கு சிகிச்சை சரியாக இருக்காது, அதனால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சுயநினைவு இல்லாத நிலையில் எனது மனைவி வள்ளியை 17-06-2026 தேதி அன்று மணி அளவில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அங்கு பரிசோதித்த அரசு டாக்டர்கள் என் மனைவி வள்ளியின் மருத்துவ பரிசோதனைகளை பார்த்த ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் எனது மனைவி பிழைப்பது கடினம் என்று கூறினார்கள், இந்த நிலையில் எனது மனைவி 2026 ஜூன் 18ஆம் தேதி அதிகாலை 4:40 மணி அளவில் கடைசிவரை சுயநினைவு திரும்பாமல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சிராஜ் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக எனது மனைவி நல்ல நிலையில் நடந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் தவறான சிகிச்சையால் எனது மனைவி வள்ளி உயிரிழந்ததால் எனது இரு மகன்களும் அம்மாவை பிரிந்து மீள முடியாது துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்,

நானும் கூலி வேலை செய்வதால் என் மகன்களை கவனிப்பதா கூலி வேலைக்கு செல்வது என்று நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரமே இழந்து நிற்கிறேன், ஆகவே என் மனைவிக்கு அதிகம் மயக்க மருந்து கொடுத்து, தவறான சிகிச்சையால் கடைசி வரை எனது மனைவி சுயநினைவு திரும்பாமல் உயிரிழந்ததற்கு காரணமான வாணியம்பாடி, காதர்பேட்டையில் உள்ள சிராஜ் மருத்துவமனை மீதும், அந்த மருத்துவமனையின் மருத்துவர் நதீம் அகமது மீதும், அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மற்றும் மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்கள் மீதும், தீவிர விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். கமலேஷ் 11 வயது, அபிஷேக் 5 வயது ஆகிய இரண்டு குழந்தைகள் அம்மா வள்ளி இல்லாமல் அந்த குழந்தைகள் அழுத வண்ணம் உள்ளனர். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள்  விசாரனை நடத்தி தாயை இழந்து வாடும் குழந்தைகளுக்கு நீதி வழங்கி இழப்பீடும் வழங்கவேண்டும் என்று அந்த குடும்பத்தினர் வேண்டுகோள் வைக்கின்றனர்.

இதுகுறித்து சுராஜ் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் நதீம் அஹமது அவர்களை தொடர்பு கொண்டு நாம் கேட்டோம்.

அப்போது அவர் சார் அவர்கள் சொல்வது முற்றிலும் தவறான தகவல் இறந்து போன வள்ளிக்கு மிக மோசமான கேன்சர் நோய் இருந்தது அதுதான் இடுப்புக்கு கீழே மிகப்பெரிய கட்டியாக இருந்தது இந்த தகவலை அவரது கணவருக்கு தெளிவாக சொல்லிவிட்டேன். அதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னேன் அவர் அதற்கு உடன்பட்டுதான் கையொப்பமிட்டு நாங்கள் அறுவை சிகிச்சை செய்தோம். அப்போது கூட என் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ததால் என் பெயரை போட்டார்கள் ஆனால் சென்னையை சேர்ந்த டாக்டர் அருள்ராஜ் என்பவர் தான் அறுவை சிகிச்சை செய்தார்.  மேலும் நான் போலி டாக்டர் அல்ல ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் படித்தேன் மிகச் சிறப்பான மருத்துவராக எங்கள் பகுதியில் நான் பெயரெடுத்து வருகிறேன். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராகவும் பணியாற்றி வருகிறேன்.ஒரு இளம் பெண்ணை கொன்று அந்த குழந்தைகள் சோகத்தில் இருப்பதை விரும்புகிற சமூகத்தில் நான் பிறக்கவில்லை என்று கனத்த குரலுடன் பேசத் தொடங்கினார் அது மட்டும் அல்லாமல் அவருக்கு கேன்சர் இருந்ததற்கான ஆதாரங்களும் அந்த கட்டியை அறுவை செய்து ஆய்வுக்கு அனுப்பி வந்த தகவல் தொடர்பான அறிக்கையும் எங்களிடம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஸ்டோக் ஏற்பட்டது. அதனாலேயே அவர் இழக்க நேரிட்டது நாங்கள் செய்த அறுவை சிகிச்சை நாள் இல்லை என்பதை நான் அறிவேன் அனைத்து அறிக்கைகளும் இருக்கிறது.

அறுவை சிகிச்சைக்கு தேவையான 60,000 கட்டனத்தில் 26000 ம் ரூபாய் மட்டும் தான் கொடுத்தார்கள். அறுவை சிகிச்சை செய்ததில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது என்று நம்மிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க.!