chennireporters.com

இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு.

மேலும் அவருக்கு உதவியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.

அவர், தாக்கல் செய்த மனுவில், “எனக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில், 9 வயது மகள் ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி எனது உடமைகளை இளைஞர் ஒருவர் பறித்துக்கொண்டார்.

இதுகுறித்து பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றேன்.அங்கு எஸ்.ஐ.யாக இருந்த சுந்தரலிங்கம் எனது பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினார்.எனக்கு உதவுவது போல் இளஞ்சிறை என்ற பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தந்தார்.

பின்னர் விசாரணை செய்ய வீட்டுக்கு வந்து, என்னை பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்தார். அடிக்கடி பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.

இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம்

இதில் நான் கர்ப்பமடைந்தேன்அதை சுந்தரலிங்கத்திடம் கூறியபோது, உன் வயிற்றில் உள்ள கருவை கலைக்குமாறு என்னை மிரட்டினார்.இதுபற்றி பளுகல், மார்த்தாண்டம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே தனியார் மருத்துவமனைக்கு என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கருவை கலைத்தார்.இதனால், எனது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

எஸ்.ஐ. சுந்தரலிங்கம் மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.இது குறித்து, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எஸ்.ஐ. சுந்தரலிங்கம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஏட்டு கணேஷ்குமார், நண்பர்கள் விஜின், அபிஷேக், உமேஷ், அனில்குமார், தேவராஜ், மருத்துவர் கார்மல்ராணி ஆகிய எட்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.சுந்தரலிங்கம் தற்போது தேனி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விரைவில் அவரை கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க.!