chennireporters.com

சைக்கிளை கூட கண்டுபிடிக்க முடியாத காவல்துறை கமிஷனரிடம் புகார் கொடுத்த மாற்றுத்திறனாளி.

மாற்றுத்திறனாளி முருகன்

மனிதாபிமானம் இல்லாத போலீசார் பிச்சைக்காரரை விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலையில் வசித்து வருபவர் முருகன்.

இவர் ஒரு மாற்றுத்திறனாளி .இவருடைய மூன்று சக்கர சைக்கிளை அதே தெருவில் இருக்கும் சகுந்தலா என்பவர் தனது மூன்று சக்கர சைக்கிளை திருடியதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.https://www.chennaireporters.com/news/dmk-deputy-chairmans-husband-complains-to-collector/

இந்த புகாரை அடுத்து ராயப்பேட்டை காவல் நிலைத்தில் இவரை அலட்சியமாக பேசியும் புகார் மீது எந்த வித நடவடிக்கை எடுக்காமலும் அவமானப்படுத்தி விரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் இவர் தனது ஊனமுற்ற மிதிவண்டியில் பிச்சை எடுக்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகி இருந்து வருகிறார்.

இதனால் தமது மிதிவண்டி புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க.!