#Special story, #Big story, #Pondicherry government, #CM rangasamy story, #Thirunallaru, #Saneeswaran Temple news.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் வைரல் ஆகி வருகிறது. சிவன் சொத்து குளம் நாசம் என்பார்கள் ஆனால் யாருடைய குலமும் நாசமாகி போனதே இல்லை என்கின்றனர் திருநள்ளாருக்கு வரும் பக்தர்கள்.
திருநள்ளாரில் கோயிலுக்கு சொந்தமான எந்தெந்த பகுதிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது எவ்வளவு நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தம்பி மாரிமுத்து என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு பெரிய பதிவை எழுதி இருக்கிறார். அந்த பதிவை சனி பகவான் பக்தர்களுக்கு நாம் அப்படியே வழங்குகிறோம்.
சிவன் மூன்றாவது கண் திறந்து பார்த்து கொள்ளையர்களை தண்டிக்க வேண்டும் என்பதே சனீஸ்வர பகவான் பக்தர்களின் கோரிக்கை வேண்டுதலாக வைக்கப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சொந்தமான நந்தவனம், தீர்த்தங்கள் நில அபகரிப்பாளர்களால் கொள்ளையடிகப்பட்டுள்ளன.
புதுச்சேரி காமாட்சியம்மன் கோயில் நில விவகாரத்தையும் தூக்கி சாப்பிடக்கூடிய பகாசுர நில அபகரிப்பு திருநள்ளாரில் நடந்திருக்கிறது. இக்கோயிலுக்கு நிர்வாக அதிகாரிகளாக வரும் ஒவ்வொருவரும் இந்த நில அபகரிப்பைக் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு சனி பகவான் எப்போது கூலி கொடுப்பார் என்று தெரியவில்லை.
காரணம், தங்கள் மீது நில அபகரிப்பாளர்கள் அக்கப்போர் போஸ்டர், துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு விடுவார்கள் என்கிற அச்சமே காரணம். நாலைந்து பேராக கோயிலுக்குள் சென்று அடாவடி, தகராறு, கூச்சல் பில்டப் செய்கிற நில அபகரிப்பு கொள்ளை கும்பல், கோயில் நிர்வாகத்தையும் கைப்பற்ற மனோ ரீதியிலான போரினை நடத்திக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு, கோயிலை குட்டிச் சுவராக்கி வரும் இக்கும்பல், கோயில் பூஜை, புனஸ்கரங்கள். மரபான சடங்குகளிலும் குழப்பம், குளறுபடிகளை செய்தும் வருகின்றன. சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வீடுகள், காலணிகள், ஓட்டல்கள், விடுதிகள், கடைகள், வணிக வளாகங்களைக் கட்டி வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக நள தீர்த்தத்திலிருந்து சரவணா தீர்த்தத்துக்கு செல்கிற தண்ணீர் வாய்க்காலை மூடியுள்ளனர். வாய்க்காலை மூடி அதில் தனியார் ஓட்டலைக் கட்டி முடித்துள்ளனர். இந்த ஓட்டல் வந்த பிறகு கோயில் அபிஷேகத்துக்கு தீர்த்தம் எடுக்கிற சரவணா தீர்த்தம் என்ற குளம் மாயமாகியிருக்கிறது.
அதுபோல், சனீஸ்வர பகவான் கோயிலுக்கு நேர் எதிரில் இருக்கும் எம தீர்த்தத்தின் நிலை பக்தர்களின் கண்ணகளில் கண்ணீர் வரவழைக்கிறது. இந்த எமதீர்த்தத்தை பலரும் ஆக்கிரமித்து, திருமண மண்டபம், கடைகளைக் கட்டியுள்ளனர். மேலும், இந்த குளத்தின் மீது ஆக்கிரமிப்பு நீடித்த வண்ணம் இருக்கின்றன.
சனீஸ்வர பகவான் கோயிலுக்கு எதிரில், பிரதான சாலையில் கோயிலுக்கு சொந்தமான நந்தவனம் இருந்தது. இங்கிருந்துதான் சுவாமிக்கு பூஜைக்காக தினமும் பூக்கள் பறித்து செல்வார்களாம். அந்த நந்தவனம் எங்கே என்று கோயில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டால் “நந்தவனமா? எந்தவனம் அது?” என்று கேட்கிறார்.
காரணம் நந்தவனம் இருந்த இடம் பலகோடி ருபாய் மதிப்புள்ள இடம் திருநள்ளாறில் மையப்பகுதியில் உள்ளது. இந்த இடத்தை சுற்றி வளைத்து மிகப் பெரிய வணிக வளாகம், லாட்ஜ் கட்டப்பட்டிருக்கிறது. கோயில் நந்தவனத்தை அழித்துக் கட்டப்பட்ட இந்த வணிக வளாகத்தை மளிகைக் கடைகள், துணிக்கடை, தேநீர் கடை, பூக்கடை, ஓட்டலுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.
முதல்வர் ரங்கசாமிக்கு சனி .
வளாகத்தின் முதல் தளம் லாட்ஜாக வருமானத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கில் வருமானம் தருகிற வணிக வழக்கை வருமானத்தில் இதுவரை கோயிலுக்கு என்று எதையாவது தந்திருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்!
முதல்வர் ரங்கசாமி.
இப்படி சனி பகவான் கோயில் குளங்கள், நிலங்களை கபளீகரம் செய்து வந்த கும்பலின் அடுத்த குறி தருமை ஆதீனத்துக்கு சொந்தமான நிலங்கள்தான். தருமை ஆதீனத்திடம் இந்த இடங்களை “நில அபகரிப்புக் கும்பல்” பிளாட் போட்டு விற்பதற்காக கேட்டுள்ளது. மருத்துவமனை, பள்ளிக்கூடம், உணவுச்சாலை, தர்ம காரியங்களுக்குத்தான் மடத்தது நிலத்தைத் தரலாம் என்று ஆதீனம் தரப்பில் அடித்து விரட்டாத குறையாக கூறியுள்ளனர்.
இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஃபிராடு கும்பல் புதுச்சேரி அரசுக்கும், ஆதீனத்துக்கு இடையே புரிதலற்ற சூழலை உருவாக்கிவிட்டது. தனக்கு வேண்டப்பட்ட நிர்வாக அதிகாரிகளை அரசியல் தலையீடு மூலம் அமர்த்தி, கோயிலுக்கும் -ஆதீனத்துக்கு நடுவே நிர்வாக சீர்குலைப்பையும் உருவாக்கி விட்டு அரசியல் சதுரங்கம் விளையாடி வருகின்றனர்.
இது ஆதீனம் தரப்பிற்கும் அரசுக்கும் பகையாகவே மாறி விட்டது. கொஞ்சம் தாமதம் என்றாலும் ஆதீனத்தின் உரிமை குறித்து முதல்வர் ரங்கசாமி புரிந்து கொண்டிருக்கிறார். ஆதீனமும் அரசுடன் முழுமையாகஅனுசரித்தே செல்ல விரும்புகிறது.
கோயில் உண்டியல், காணிக்கை, அன்னதான நிதி, உண்டியல், அர்ச்சனை கட்டணம், தில தீப வருமானத்தை அரசு கையாள்வதில் ஆதீனத்தைப் பொறுத்தவரை எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம், கோயில் பூஜை, நித்திய நடைமுறை, சடங்கு சம்பிரதாயங்களில் ஆதீனத்தின் பங்களிப்பு முக்கியம். உள்துறை நிர்வாக உரிமை என்பது, ஆதாரங்களுடன் உயிர்மையாய் தொடர்கிற தெய்வீக சேவையாகும்.
இது தருமையின் பல நூற்றாண்டு கால உரிமை. ஆவண ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஆதீனம் பலமுறை இதை நிரூபித்திருக்கிறது.
இதை புதுச்சேரி அரசு நன்கு புரிந்தும் வைத்திருக்கிறது. நில அபகரிப்பு, கோயிலுக்குள் அதிகாரம் கோரி வருபவர்கள் முதல்வருக்கு தவறான தகவல்களைக் கூறி, அவரை மடத்துக்கு எதிரியாகவே சித்தரித்து விட்டனர். மடத்தின் பிரதிநிதிகள், முதல்வர் ஆரோக்கியமான சந்திப்பு நிகழ்ந்தால் பிணக்குகள் களையப்படும். இந்த பரஸ்பர புரிதலான முன்னெடுப்புகளை கட்டளை மடம் செய்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே ஒரு அரசியல்வாதி காரைக்கால்-திருநள்ளாறு சாலை பச்சூரில் ”உண்டு உறைவிடப் பள்ளியை” ஏழை மாணவர்களுக்கு கட்டுவதாக தருமை ஆதீனத்திடம் பல ஏக்கர் நிலத்தைப் பெற்றிருக்கிறார்.
ஆனால், பள்ளிக்கூடத்தைக் கட்டுவதற்கு பதிலாக அந்த நிலத்தை வீட்டு மனைகளாக்கி விட்டார்.
அந்த மனைகள் தேசப்பிதாவின் பெயரில் நகராக்கப்பட்டது. மாணவர்களுக்காக என்று கூறப்பட்டதால், நல்ல மனதுடன் நீதிமன்ற அனுமதி பெற்று தருமை ஆதீனம் இந்த நிலத்தை மேற்படி அரசியல்வாதிக்குத் தந்திருக்கிறது. ஆனால், வீட்டு மனைகளாக விற்கப்பட்ட இந்த மடத்தை மீட்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்யப்படுவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோல் ஏர்போட்டுக்காக என்று மடத்து நிலத்தை வாங்கி, அந்த இடத்தைச் சுற்றி ஏர்போர்ட் சிட்டி என்று நகர்களை உருவாக்கி ஒரு கும்பல் கோடிகளை சுருட்டியது நினைவிருக்கலாம். ஆனால், விமான நிலையத்துக்கு ஒரு செங்கல்லைக்கூட நடவில்லை. இந்த நிலமும் மடத்தை நோக்கி சட்டப்படி திரும்பியிருக்கிறது.
இப்படி மோசடிக்கும்பலிடம் நிலங்களைத் தருவதைவிட மக்களுக்கான நலத்திட்டங்களை மட்டுமே நேரடியாக செயல்படுத்த தருமை ஆதீனம் முடிவெடுத்தது, தருமை ஆதீன குறு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் முறைப்படி அவற்றை தருமை ஆதீன திருநள்ளாறு கிளை மடம் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
பலகோடி மதிப்பில் காரைக்கால் மாவட்ட மக்களுக்காக கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு திட்டங்களை தருமை ஆதீனத்தின் முயற்சியுடன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், மாண்புமிகு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் GNS ராஜசேகரன் மூலம் தொடங்கப்பட்டிருக்கிறது. காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.
