#Exclusive story, #Special story, #Thiruvallur DRO office news, #shouting for transgender silent all officers, #big story,
திருவள்ளூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் வழக்கம் போல் காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு நாள் நடைபெறும். மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளிக்கலாம். அந்த குறை தீர்க்கும் மனு நாளில் பொதுமக்களுக்கு தேவையான விஷயங்களை மனுவாக கலெக்டரிடம் வழங்கலாம் அதன் அடிப்படையில் கலெக்டர் பொதுமக்களின் குறைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிடுவார்.
டிஆர்ஓ முன்பு பெண் தாசில்தாரை புரட்டி எடுத்த திருநங்கை.
மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று 2026 ஆகஸ்ட் மாதம் 24 ம்தேதி மனு வழங்கும் நேரம் முடிந்துவிட்ட பிறகு மதியம் சுமார் 3.30 மணி அளவில் திருவள்ளூர் பெரிய குப்பம் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் திருநங்கை ஒருவர் DRO அலுவலகத்தில் பொதுமக்கள் இருக்கும் நேரத்தில் யாருடைய அனுமதியும் பெறாமல் சடார் என கதவைத் திறந்து உள்ளே நுழைந்து சார் வணக்கம் எனக்கு ஒரு பெரிய பிரச்சனை என்று சத்தமாக சொன்னார் அதற்கு DRO K.V. ராஜ்குமார் உட்காருங்கம்மா உங்கள் குறையை சொல்லுங்கள் என்று அமைதியாக கேட்டார்.
அப்போது வேறொரு பிரச்சனை தொடர்பாக திருவள்ளூர் தாசில்தாரை அழைத்து DRO K.V. ராஜ்குமார் விசாரித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அந்தத் திருநங்கை நான் இருக்கும் வீட்டிற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை ஏன்? நான் திருநங்கை என்பதனால் எனக்கு மின்சாரத்தை வழங்கக் கூடாதா ஆற்றங்கரை ஓரத்தில் பல நூறு வீடுகளுக்கு மின்சாரம் எப்படி வழங்கப்பட்டது.? அங்கு உள்ள வீடுகள் அனைத்தும் புறம்போக்கு தானே புறம்போக்கு நிலத்திற்கு அன்றைய திமுக அரசு எப்படி அனுமதி அளித்தது எப்படி மின்சாரம் வழ என பட,பட வென கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். என் வீட்டில் 16 ஓட்டுகள் இருக்கின்றன அந்த 16 ஓட்டுக்களும் விஜய்க்கு தான் போட்டோம் பெண்களை மதிப்பதாக சொல்லும் விஜய் அரசு திருநங்கை வீட்டிற்கு ஏன் மின்சாரம் தரவில்லை லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் செயல்படுகிறார்கள். குற்றம் சாட்டினார். இதோ நிற்கிறதே இந்த அம்மா தான் திருவள்ளூர் தாசில்தார் இவரிடம் போய் கேட்டேன் அவர் புறம்போக்கு நிலத்திற்கு பட்டாவும் தர முடியாது மின்சாரமும் தர முடியாது வெளியே போ என்று என்னை மிரட்டி வெளியே அனுப்பினார். ஆனால் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் இருக்கிறது அந்த வீடுகளுக்கு எப்படி வீடு கட்ட அனுமதிக்கப்பட்டது மின்சாரம் எப்படி வழங்கப்பட்டது என்று கடும் கோபத்துடன் மிக சத்தமாக தெரு சண்டையைப் போல கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்.
உடனே DRO K.V. ராஜ்குமார் அம்மா சத்தம் போடாதீங்க நான் விசாரிக்கிறேன் உங்களுடைய குறைகள் என்ன என்பதை நான் உடனடியாக தீர்த்து வைக்கிறேன். பொறுமையாக இருங்கள் என்று சொன்னார். அப்போதும் பொறுமையை இழந்த அந்த திருநங்கை மிகக் கடுமையாக அதிகாரிகளை சாடினார். பணம் வாங்கிக் கொண்டு லஞ்சம் வாங்கிக் கொண்டு திருட்டு நாய்கள் என்றெல்லாம் தாசில்தார் மற்றும் விஏஒ போன்ற அதிகாரிகளை கடுமையான எழுத முடியாத முடியாத வார்த்தைகளில் திட்டி தீர்த்தார்.
உடனே எந்த அதிகாரிகளும் பேசாமல் மௌனமானார்கள் வெட்கி தலை குணிந்து யிட்றார்கள். யாராவது ஒருவர் பேச முற்பட்டால் நீ அமைதியா இரு பொதுமக்கள் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. அரசு அதிகாரிகள் பதில் சொல்லும் இடத்தில் இருக்கிறார்கள் எப்படி லஞ்சம் வாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு மின்சாரம் கொடுத்தீர்கள் வீடு கட்ட அனுமதி கொடுத்தீர்கள் உடனடியாக எல்லாத்தையும் புடுங்கி போடுங்க எல்லாருடைய வீட்டில் உள்ள கரண்ட்டையும் புடுங்குங்க என்று கடும் கோபத்துடன் திருநங்கை பேசினார்.
அப்போது குறிக்கட்ட DRO K.V. ராஜ்குமார் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதையும் ஏற்காத அந்த திருநங்கை அய்யா உன் காலில் கூட விழுகிறேன் நாளை நேரடியாக நீங்களே வந்து நான் இருக்கும் இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றார். அப்போது குறிக்கிட்ட திருவள்ளூர் பெண் தாசில்தார் தெலுங்கில் பேசி வெளியே போங்க என்று பேசியதும் அந்த திருநங்கை அவரும் தெலுங்கில் பேசி தாசில்தாரை புரட்டி எடுத்தார்.
அது மட்டுமா வெளியே போன திருநங்கை மகராசன் நல்லா இருக்கணும் இவருக்கு முன்னாடி இருந்த அதிகாரிங்க எல்லாம் உள்ளே விட மாட்டாங்க உடனே தாசில்தார் பாருன்னு அனுப்பிடுவாங்க. இவர் மட்டும்தான் உள்ள கூப்பிட்டு உட்கார வச்சு பேசுறாரு. என புகழ்ந்து தள்ளி விட்டுப் போனார் அந்த திருநங்கை. அது மட்டும் இல்லை அவரை சந்திக்க வந்த திருநின்றவூர் அருகே உள்ள நத்தம் பேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், திருத்தணி மற்றும் பல்வேறு பகுதி பொதுமக்கள் DRO K.V. ராஜ்குமார் அவர்களை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
காரணம் என்னவென்றால் தங்களை சந்திக்க வரும் ஒவ்வொருவரையும் உட்கார வைத்து குறைந்தபட்சம் 10 நிமிடம் பேசுகிறார். தங்கள் பிரச்சனை என்ன கோரிக்கை என்ன நீங்கள் கொடுத்த புகார் எங்கே அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்ன காரணம் என்று விரிவாக கேட்டு தன்னுடைய டைரியில் எழுதிக் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக அந்த பிரச்சினை தீர்த்து வைக்கும் வேண்டும் உத்தரவிடுகிறார் DRO K.V. ராஜ்குமார்.
சுப்பிரமணி
ஆர்கே பேட்டை அடுத்த பேட்டை கண்டிகை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தன்னுடைய 40 சென்ட் நிலத்திற்காக 41 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் போராடி வருகிறார். யூடியாரில் UDR ரில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய நிலத்தை அதிகாரிகள் அளந்து தர மாட்டேன் என்று ஒத்த காலில் நிற்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் என்னை அலுவலகதின் உள்ளையே நுழைவு விடாமல் விரட்டியடிக்கிறார்கள் என் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது என்று ஒரு அழுக்கு சட்டை ஒரு அழுக்கு வேட்டி அணிந்து வந்த சுப்பிரமணி கண்ணீர் மல்க தன்னுடைய கோரிக்கையை என்ன என்பதை நம்மிடம் கூறினார்.
நான் பல கலெக்டர்கள் பல டி.ஆர்.ஒ வை பார்த்து விட்டேன் ஒருவர் கூட உள்ளே அழைத்துப் பேசுவதில்லை அப்படியே கேட்டால் ஆர்டிஓ வை பாருங்கள் திருத்தணி தாசில்தாரை பாருங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால் நான் வணங்கும் குலதெய்வமே நேரில் பார்த்ததை போல என்னை உள்ளே அழைத்து உட்கார வைத்து 15 நிமிடமாக என்னுடைய பிரச்சனையை கேட்டறிந்து குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து சாப்பிட்டீர்களா என்று கருணையோடு கேட்டு எனது பிரச்சினை உடனடியாக தீர்த்து வைக்க அதிகாரிகளை அழைத்து உடனடியாக அவரது இடத்தை அளந்து தர வேண்டும் யூடியாரில் என்ன தவறு இருக்கிறதோ அதை உடனடியாக சரி செய்து அவருக்கு உரிய பதிலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இன்று நம்மிடம் கண்ணீர் மல்க தெரிவித்த சுப்பிரமணி நீங்க யார் என்று நம்மை கேட்டார்.
நாம் பத்திரிகையாளர் என்று சொன்னதும் ஐயா இதை எழுதுங்க சாமி இதை எழுதுங்க என்று தெலுங்கு கலந்த தமிழில் நம்மிடம் பேசினார் சுப்பிரமணி. பொதுமக்கள் புகழும் DRO வாக K.V. ராஜ்குமார் இருந்து வருகிறார். மக்களின் வலியை உணர்ந்து அதை உள் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் மக்கள் புகழும் அதிகாரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திருவள்ளூர் மாவட்ட DRO K.V. ராஜ்குமார் என்றால் அது மிகையல்ல. நிஜமாகவே போற்றப்படவேண்டிய அதிகாரிதான். அவருக்கு நமது அலுவலகத்தின் சார்பில் நாம் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
