chennireporters.com

#writer celebrated in the literature ; கரிசல் காட்டு பூமியில் இலக்கியம் போற்றும் எழுத்தாளன்.

தமிழக எழுத்தாளர்கள் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார் எழுத்தாளர் முருகன்.எழுத்தாளர்  சி.முருகன் IAS .

இவருடைய எழுத்துக்களை தமிழகத்தின் முன்னணி சிறுகதை எழுத்தாளர்கள் மூத்த இலக்கிய விருதாளர்கள் எழுதிய புத்தகங்களை படித்துப் பார்த்து மெய்மறந்து சிலிர்த்துப் போய் நிற்கிறார்கள். இவருடைய எழுத்துக்கள் இவர் கதையில் சொல்லும் சம்பவம் போல் வரலாற்றில் அழிக்க முடியாத கதாபாத்திரங்களாக விளங்கி வருகிறது. காக்கி சட்டை போட்டுக் கொண்டு கையில் துப்பாக்கி வைத்திருந்த காலத்திலேயே திரை மறைவிற்கு பின்னால் பேனாவை எப்போதும் இரவு முழுவதும் வைத்துக் கொண்டு தன்னுடைய இலக்கியப் படைப்புகளை படைத்திருக்கிறார் எழுத்தாளர் முருகன். முரட்டு குணம் கொண்டவர்கள் காக்கி சட்டை காரர்கள் என்பதை உடைத்தெரிந்து இருக்கிறார் எழுத்தாளர் முருகன்.எழுத்தாளர்  சி.முருகன் IAS .

இவரது படைப்புகள் கொண்டாடப்பட வேண்டியவை வரும் தலைமுறை இன்னக்கி பாடமாக அமைய வேண்டிய இலக்கியங்கள் எனவே அரசு இவரது படைப்பிலக்கியங்களை தமிழகம் முழுவதும் நூலகங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் தமிழக எழுத்தாளர்களின் விருப்பமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த கத்தாளம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சி.முருகன், மேற்கு வங்க கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. தற்போது, ‘டீ போர்டு ஆஃப் இந்தியா’-வின் துணைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். மேற்கு வங்க மாநிலத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்றபோது, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் பவானிப்பூர் தொகுதி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கான எஸ்.ஆர்.பணியை மேற்கொண்டவர் சி.முருகன். அதனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும், கடும் விமர்சனங்களுக்கும் அவர் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.எழுத்தாளர்  சி.முருகன் IAS .

அவர் ஐ.ஏ.எஸ் பணிக்குத் தேர்வாவதற்கு முன்பு, தமிழ்நாடு காவல்துறையில் டி.எஸ்.பி-யாகப் பணியாற்றினார். குறிப்பிட்ட சில காலம் ஆவடி டி.எஸ்.பி-யாக அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ் பணிக்கு சென்ற பிறகு, கொரோனா பெருந்தொற்று காலத்தில், அவரது எழுத்தாற்றல் வெளிப்படத் தொடங்கியது. அப்போது, கரிசல் மண் வாசம் வீசும் சிறுகதைகளை எழுதி, ‘பூத்த கரிசல்’ என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

சமீபத்தில் ‘தே’ என்ற தலைப்பிலான அவரது முதல் நாவல் சென்னையில் வெளியிடப்பட்டது. சாதியின் பெயரால் சமூகத்தில் ஒரு பிரிவு மக்களுக்கு, கோயிலில் அனுமதி மறுக்கப்படுவது என்ற பிரச்னையை மையமாக வைத்து தே நாவலை அவர் படைத்திருக்கிறார்.

“தெக்குத் தெருன்னு பேரக் கேட்டதுமே, தேள் கொட்டியவனைப் போல திடுக்கிட்ட கணேசய்யர், “என்னது தெக்குத் தெருக்காரங்களா? நீங்கள்ளலாம் கோயிலுக்குள்ள வரக்கூடாதுன்னு தெரியாதா? வரக் கூடாதா இடத்துக்கு வந்தது மட்டுமில்லாம, திருநீறு வேற வேணுமாக்கும்? உங்கள உள்ள விட்டுவிட்டு, பிரசாதமும் திருநீறும் கொடுத்தேன்னு, ஊர் பெரியவங்களுக்குத் தெரிஞ்சதுன்னா, என் ஜீவனம் அதோ கதிதான். திருநீறும் கெடையாது, ஒன்னும் கெடையாது. மொதல்ல கோயில விட்டு வெளியே போங்க” என்று வெரட்ட ஆரம்பித்தான் கணேசய்யர்.எழுத்தாளர் சி. முருகன் IAS .

கோயிலிலிருந்து தன் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுடன் துரத்தப்படுகிறாள் பொன்னாத்தா. பட்டியல் சமூகம் என்று நினைத்து துரத்தப்படும் அந்தப் பெண், ‘உயர் சாதி’ என்று சொல்லப்படும் ‘இடைநிலை சாதி’யைச் சேர்ந்தவள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, பொன்னாத்தாவும், கணவர் அய்யாவுவும், இரண்டு குழந்தைகளுடன் வேறொரு கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முத்தாண்டி கிழவனிடம் தஞ்சமடைகிறார்கள்.எழுத்தாளர் சி. முருகன் IAS .

தீண்டாமையின் கொடுமையை பட்டியல் சமூகம் அல்லாத மக்களால் உணர முடியாது. ஏனெனில், அவர்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை. ஆனால், பட்டியல் சமூகம் அல்லாத ஒருவர், பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் என்ற அடையாளத்துக்குள் சென்றுவிட்டால் தீண்டாமைக் கொடுமையின் வலியை அவரால் உணர முடியும்.

அதுபோலத்தான், பட்டியல் சாதி அல்லாத ஒரு குடும்பத்தின் மூலமாக, தீண்டாமையின் வலியை பிற சமூகத்தினருக்கு தே நாவல் மூலமாகக் கடத்துகிறார் எழுத்தாளர் சி.முருகன்.சாதிய ஏற்றத் தாழ்வுகள் கொண்ட கிராமத்து வாழ்க்கையை தனது வீர்யமிக்க எழுத்துக்களின் மூலம் நம் உணர்வுக்குள் ஊடுருவச் செய்கிறார் நாவலாசிரியர். விறுவிறுப்பான திரைப்படக் காட்சிகள், இறுக்கையின் நுனிக்கு நம்மைக் கொண்டுவந்துவிடுவதைப்போல, இந்த நாவல் ஆரம்பம் முதல் கடைசிவரை கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.

சி.முருகன் என்ற படைப்பாளிக்குள் சமூக உணர்வு மேலோங்கியிருக்கும்  காரணத்தால், சமூகப்பிரச்னைகளை மையமாக வைத்து சிறப்பான படைப்புகளை அவர் அளித்திருக்கிறார். தற்போது, 1946-ல், கொல்கத்தாவிலும் வங்க தேசத்திலும் நிகழ்ந்த கலவரங்களை அடிப்படையாக வைத்து தனது அடுத்த நாவலை எழுதி முடிக்கும் நிலையில் அவர் இருக்கிறார். ஓர் இஸ்லாமிய இளைஞருக்கும், ஜாமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் தான் நாவலின் கரு என்கிறார் சி.முருகன் ஐஏஎஸ்.  தன் சிறந்த படைப்புகளை மூலம் தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் எழுத்தாளர் சி.முருகன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் எழுத்தாளர்களுக்கிடையில் புதிய வரவாக அமைந்துள்ளார் எழுத்தாளர் மருகன்.

இதையும் படிங்க.!