chennireporters.com

#fake lawyer ambeth alias vallarasu ; இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய போலி வக்கீல் அம்பேத் என்கிற வல்லரசு தலைமறைவு.

இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய போலி வக்கீல் தலைமறைவாகி விட்டார்.  அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

அம்பேத் என்கிற வல்லரசு போலி வக்கீல்.

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்து உள்ளது கூலூர் கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன்.  இவரது மகன் அம்பேத் இவர் ஆந்திராவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்ததாக கூறப்படுகிறது.  ஆனால் முழுமையாக முடித்ததாக தெரியவில்லை சென்னையில் உள்ள பார் கவுன்சிலும் இதுவரை பதிவு செய்ததாக தெரியவில்லை.  இந்த நிலையில் ராமன்சேரி கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

அம்பேத் என்கிற வல்லரசு போலி வக்கீல்.

பின்னாளில் அம்பேத் என்கிற வல்லரசு போலி வக்கீல் அந்தப் பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.  இந்த நிலையில் அம்மா வள்ளியிடம் மேற்கண்ட இளம் பெண் பேசியுள்ளார் அதற்கு அம்மா பெண்ணின் குணத்தை தவறாக பேசியுள்ளார்.  இதற்கிடையில் அவரது அக்கா பிரியா என்கிற ரமாவும் என் தம்பி உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டான்.  உன்னுடைய குணம் சரியில்லை என்று மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டி பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட அம்பேத் என்கிற வல்லரசு சம்பந்தப்பட்ட இளம் பெண்ணின் வாட்ஸ் அப் காலில் வந்து அந்தப் பெண்ணின் மனம் புண்படும்படி மிக கேவலமாக பேசி நீ தூக்கு மாட்டிக் கொண்டு செத்துவிடு என்று தற்கொலைக்கு தூண்டும் வகையிலும், அந்த பெண்ணை இழிவு செய்யும் வகையிலும் பேசியுள்ளார்.  இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மாலை சம்பந்தப்பட்ட இளம் பெண் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது தொடர்பாக அந்த இளம் பெண் தன் கைப்பட மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் எழுதியுள்ளார்.  அந்த புகாரில் மேற்கண்ட போலி வக்கீல், அவரது அம்மா வள்ளி, அவரது அக்கா ரமா ஆகியோர் மீது  (BNS Sec 69 ) பி.என்.எஸ். செக்சன் 69 இன் படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

அம்பேத் என்கிற வல்லரசு போலி வக்கீல்.

மேலும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களின் செல்போன் நபர்களையும் குறிப்பிட்டு எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 21 நாட்கள் ஆன பின்பும் இதுவரை போலீசார் மேற்கண்ட போலி வக்கீலை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அம்பேத் என்கிற வல்லரசு போலி வக்கீல்.

கனகம்மாசத்திரத்திற்கு அடுத்த ராமாபுரம் என்கிற பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் என்பவரிடம் மேற்கண்ட போலி வக்கீல் அம்பேத்கர் வல்லரசு ஜூனியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அவர் மேற்படி திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டருக்கு சம்பந்தப்பட்ட போலி வக்கீலை கைது செய்யக்கூடாது என்று சில ஆயிரங்களை லஞ்சமாக கொடுத்ததாக கூறப்படுகிறது.திருவள்ளூர் எஸ்பி இடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.  அது மட்டும் இல்லாமல் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் கூடுதலாக சம்பந்தப்பட்ட போலி வக்கீல் அம்பேத்கர் வல்லரசின் அம்மா வள்ளி, அவரது அக்கா ரமா ஆகியோரை வழக்கில் இணைக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால் இறந்து போன பெண்ணின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வடக்கு மண்டல ஐஜிக்கு புகார் அனுப்பியுள்ளனர். இனிமேலாவது போலீசார் கைது நடவடிக்கை எடுப்பார்களா அல்லது வாங்கிய காசுக்கு கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குறிப்பு:

திருவள்ளூர் நகரத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள டிஎஸ்பி சம்பந்தப்பட்ட இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.  இன்னும் இரண்டு நாட்களில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறையில் அடைப்பதாக உறுதியளித்துள்ளார்.  ஆனால் அவர் அளித்த உறுதியில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்று இறந்து போன பெண்ணின் தாய் மாமா சம்பந்தப்பட்ட டிஎஸ்பிஐ நேரில் சென்று கேட்டதற்கு நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று மழுப்பலாக பதில் சொல்லி இருக்கிறார்.  இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

போலீசார் திட்டமிட்டு தேவையில்லாமல் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சிறையில் அடைக்க முயற்சி செய்வதாக குற்றம் சொல்கிறார்கள் அவரது வழக்கறிஞர்கள்.

இதையும் படிங்க.!