chennireporters.com

#An inspector who works; அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் எடுபிடியாக வேலை செய்யும் இன்ஸ்பெக்டர்.

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: பைஹகீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 10769

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஹில்முதின். இவரும் இவரது நண்பர்கள் இருவரும், ஆக மொத்தம் மூவரும் அதிமுகவை சேர்ந்த கோவை பேரூர் சரோஜினி என்கின்ற பெண்மனிக்கு உதவி செய்யப் போய்….! தற்போது பேரூர் காவல்துறை ஆய்வாளர் நஸீர்உசேன் அச்சுறுத்தலில் அவதிப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சம்பவம் என்னவென்றால்  “உழைத்த கூலிக்கு பணம் கேட்டதால், அட்வான்ஸ் பணத்தையும் சேர்த்துக் கொடு, இல்லையென்றால் F.I.R. போட்டு உங்கள் மூவரையும் ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டுகிறாராம் பேரூர் இன்ஸ்பெக்டர் நஸீர் உசேன்.

சமீப காலமாக பணம் கொடுக்கல் வாங்கல் நிலப்பிரச்சனைகளை காவல் நிலையத்தில் விசாரிக்க கூடாது என்று உயர் நீதிமன்றமும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உத்தரவு போட்ட பின்பு கூட, உயரதிகாரிகளின் உத்தரவை  மதிக்காமல், காவல்துறையில் உள்ள சிலர் கருப்பு ஆடுகள் அட்டகாசம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தான் ஆய்வாளர் நஸீர் உசேன் இவர்களை மிரட்டி வருகிறார்.
இது குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளிடம் புகார் கொடுத்துள்ளனர் பாதிக்கப்பட்ட நபர்கள். ஹில்முதின் இந்த புகாருக்கு எந்த மாதிரியான நடவடிக்கை வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதில் கொடுமை என்னவென்றால் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் அவரது PA சந்தோஷ் பெயரும் இந்த சம்பவத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

கோவை மாவட்டத்தில் நடப்பது திமுக ஆட்சியா இல்லை ஆதிமுகவை சேர்ந்த வேலுமணி ஆட்சியா என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் தான் சொல்லவேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கை போலீசார் விசாரிக்க்கூடாது என்று உத்தரவு இருந்தும் புகார்தார்கள் கொடுக்கும்  சில ஆயிரங்கள் லஞ்சப்பணத்திற்கு ஆசைப்பட்டு மனசாட்சிக்கு எதிராக வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் நசீர் உசேசன் போன்றவர்களுக்கு அல்லா நிச்சயம் கடும் தண்டனை தருவார்கள் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்.

இதையும் படிங்க.!