chennireporters.com

#Annamalai ஒத்த ஓட்டு ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஓடிப்போனான் மூட்டை கட்டி.

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக போட்டியிட்ட 19இடங்களிலும் தோல்வியை தழுவின குறிப்பாக கோவை மக்களை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வாக்குச்சாவடியில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்றுள்ளார். அது குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.  அவரின் பேச்சு குறித்தும் அவரின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஒரே வாக்குச்சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டும் பதிவாகி இருந்தது. அப்பகுதி பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது நடைபெற்றது.

இதில் கோவை மக்களவைத் தொகுதிக்கான எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள ஜி சி டி கல்லூரி வளாகத்தில் நடந்து வந்தது. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களான திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 9371 வாக்குகள் பதிவாகி இருந்தது. அதில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் 5127 வாக்குகளும், பாஜகவின் வேட்பாளர் அண்ணாமலை 1852 வாக்குகளும், அதிமுகவின் வேட்பாளர் ராமச்சந்திரன் 1541 வாக்குகளும் கிடைத்து இருந்தது. இதில் ஒரு வாக்குச்சாவடியில் அண்ணாமலைக்கு ஒரே ஒரு வாக்கு மட்டும் பதிவாகி இருந்தது. அப்பகுதி பாஜகவினருக்கு மட்டுமல்ல அண்ணாமலைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இது குறித்து வாக்கு விபர பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தேர்தலுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை திமுக வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரண்டாவது ரவுண்டில் திமுக டெபாசிட் இழந்துவிடும் என்று பேசி இருந்தார். ஏற்கனவே தான் என்ன பேசுகிறோம் என்று பல விஷயங்களை தெரியாமலே பேசுவது தான் அண்ணாமலியின்  வாடிக்கை. அண்ணாமலை தோல்வியை தழுவியதற்குப் பிறகு சமூக வலைதளங்களில் அண்ணாமலையை காணவில்லை என்றும் ஆட்டுக்குட்டியை பலி கடா கொடுப்பதைப் போலவும், பிரியாணி போடுவதைப் போலவும் மோட்டார் பைக் சக்கரத்தில் தலையை சிக்கி ஆட்டுக்குட்டி தவிப்பதைப் போலவும் ஆட்டுக்குட்டிக்கு காய அடிப்பதை போல பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் அரசியலில் முதிர்ச்சி இல்லாத, பக்குவப்படாத தமிழகத்தின் அரசியல் வரலாறு தெரியாத அண்ணாமலைக்கு வாய்சவடால் அதிகம் தான் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

நன்றி சன் டிவி.

அண்ணாமலையின் பேச்சும் போக்கும் அரசியலில் முதிர்ச்சியின்மையுமே தோல்விக்கு காரணம் என்கின்றனர் கோயம்புத்தூர் வாக்காளர்கள்.

கடல் நீர் ஆவியானாலும் ஆகும் ஆனால் தமிழ்நாடு மட்டும் காவி ஆகாது என்கின்றனர் திமுக கூட்டணியினர்.

இதையும் படிங்க.!