chennireporters.com

#Avadi Corporation; சந்தி சிரிக்கும் ஆவடி மாநகராட்சி; காரி துப்பும் பொதுமக்கள்.

ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. ஆவடியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சா.மு நாசர் அமைச்சராகவும் இருப்பதினால் தொகுதி சிறப்பாக இருக்கும் என்று கட்சி தலைமை கருதுகிறது. ஆனால் நிலைமை வேறு; துணை மேயர் சூரியக்குமார் வார்டில் நாசர் ரோடு, தென்றல் தெரு,கேசவலு நாயுடு தெரு, அதனை ஒட்டி உள்ள சில சாலைகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை  அமைப்பதற்காக  பள்ளங்கள் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால் சாலைகள் சீரமைக்கப்படவில்லை.Sundaresan Thirumaran on X: "Why hasn't #TamilNadu Govt Formed Judicial Courts & RTO in #Avadi Corporation which is 8th largest in Population after Expansion 1 #Chennai 2 #Coimbatore 3 #Madurai 4 #Tiruppurஇதுவரை பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டு மண் மூடி விட்டனர். புதிய சாலையை போடவில்லை இதனால் தெரு நாய்கள் கூட சாலையில் நடக்க முடியாத சூழல் உள்ளது. அரசின் நிலையையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் பொதுமக்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.சூர்யா குமார் துணை மேயர் ஆவடி மாநகராட்சி.

இரவில் குடிபோதையில் செல்லும் தமிழக குடிமகன்களும், வாகன ஓட்டிகளும் சாலையில் பைக்கில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் சொல்ல முடியாத வார்த்தைகளில் திட்டி தீர்க்கின்றனர்.அமைச்சர் தரப்பு மருத்துவமனை... ஆட்சேபிக்கும் அதிமுக! | Hot leaks minister nasar - kamadenu tamilநாய்கள் கூட நடக்க முடியாத சாலைகள் ஆவடியில் இருக்கிறது என்பதை அமைச்சர் நாசர் அறிவாரா? அல்லது தனது பெயரில் உள்ள சாலையே மிக மோசமாக சீரழிந்து கிடக்கிறது அதை இன்னும் சரிசெய்ய முடியாமல்  துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள் என்கிற தகவலாக அவருக்கு தெரியுமா என்பது இதுவரை கேள்விக்குறியாக உள்ளது.கட்டற்ற நாய் - விக்கிபீடியாஇந்தப் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள்  தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த புகாரின் பேரிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு மூன்று நாட்களாக பெய்த மழையால் சாலை முழுவதும் மழை நீர் தேங்கி சாக்கடைகளும், சேரும், சகதியும் சாலையில் கொட்டி கிடப்பதால் நடக்க முடியாமலேயும் வண்டி ஓட்ட முடியாமலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சேறும் , சகதியுமாக காணப்படும் செங்காட்டு தோட்ட சாலை. சேறு , சகதி சாலையால் பொது மக்கள் அவதிகுறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வார்டின் துணை மேயராக உள்ள சூரியகுமார் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததில் ஒன்றைக் கூட நிறைவேற்ற வில்லை என்கின்றனர் இந்த பகுதி பொதுமக்கள். எனவே எதிர்க்கட்சியினர் கூட ஆவடியில் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதா என்கிற கேள்வி எழுகிற வகையில் அவர்களின் செயல்பாடுகளும் அமைந்திருக்கிறது.

ஆவடி மாநகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து இதுவரை அதிமுக சார்பிலோ அல்லது எந்த கட்சி சார்பிலும் கண்டனமோ அல்லது கூட்டமோ எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் இருப்பதே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் கட்சி நிர்வாகிகள் பங்கு பிரித்து கொடுத்து விடுவதாக சொல்கின்றனர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர்..More workers brought to Chennai from other districts, says K.N. Nehru - The Hinduஅமைச்சர் பெயரில் உள்ள  சாலையை சரி செய்ய முடியாத ஒரு அமைச்சர் இந்த தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகளை எந்த அளவுக்கு செய்திருப்பார் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள்.சரண்யா ஆவடி மாநகராட்சி ஆணையர்.

வரயிருக்கும் சட்டமன்ற தேர்தலில்  ஆவடியில் உதிய சூரியன் உதிக்குமா? என்பதை அதிகாரிகளும் ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகளுமே உறுதிப்படுத்த வேண்டும் என்கின்றனர். ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் பற்றி உளவுத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டிய உளவுத்துறை அதிகாரிகள் டாஸ்மாக், கஞ்சா விற்பவர்கள், சாலையோர கடைகளில் காய்கறி விற்பவர்கள் என சட்டத்திற்கு புறம்பாக நடத்தும் எல்லா வகையான வியாபாரம் செய்பவர்களிடத்தில் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாய் இருப்பதினால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விஷயத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு செல்லும் வகையில் உளவுத்துறை அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும் ஆனால் ஆவடி பொருத்தவரை இது போன்ற எந்த தகவலையும் உளவுத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பவே இல்லை என்கின்றனர் சில நேர்மையான அதிகாரிகள்,CM Stalin calls for an all-party meet on March 5 to discuss impact of delimitation on T.N. - The Hinduசென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் பள்ளமும் பல இடங்களில் மண்ணும் ஜல்லிக்கற்களும் கொட்டி கிடக்கின்றன. சைக்கிளில் செல்லும் மாணவர்கள் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் அல்லது இரண்டு சக்கர வாகனங்கள் சாலை விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.Avadi residents flag delay in construction of underground sewer lines - The Hinduநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால் பொதுமக்கள் திமுக அரசை சபிக்கும் அளவிற்கு நிலமை மாறியுள்ளது. எனவே அமைச்சர் தனது தொகுதி மக்களுக்கான வளர்ச்சிப் பணியில் அக்கறை செலுத்தி தனது பெயரில் உள்ள தெருவை மிக விரைவில் செயல்படுத்த சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் நாசர் தெரு பொதுமக்கள்.

இதையும் படிங்க.!