சிறப்பு செய்தி# சிறப்பு செய்தி#
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கார் விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக காயங்கள் இல்லாமல் உயிர்த்தப்பினார். ஆனால் அவருடன் காரில் சென்ற அவரது பாதுகாப்பு போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கமிஷனர் சங்கர்.
என்ன நடந்தது என்பது குறித்து நாம் விசாரணை நடத்தினோம் அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
காவல் துறையில் பொதுவாக ஒரு ஐபிஎஸ் அதிகாரி தனது வீட்டில் இருந்து அவரது அலுவலகத்திற்கு புறப்படுவதற்கு முன் மைக்கில் ஐயா கிளம்பிவிட்டார். இன்னும் சில நிமிடங்களில் ஆபீஸ் வந்து விடுவோம் என்று கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் தகவல் தெரிவிப்பார்கள். அது மட்டும்மல்லாமல் கார் ஓட்டுனருகளும் தனது அலுவலகத்திற்கு தகவல் சொல்லுவார்கள். இது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை அது மட்டும் இல்லாமல் தற்போது அந்த ஐபிஎஸ் அதிகாரி வாகனம் எங்கு சென்று கொண்டிருக்கிறது இன்னும் எவ்வளவு நேரத்தில் அலுவலகத்திற்கு வருவார் என்பதையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரது அலுவலக போலீசாரும் உளவுத்துறை அதிகாரிகளும் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் ஆவடியில் உள்ள உளவுத்துறை உப்புக் கல்லுக்கு கூட உதவாமல் கல்லா கட்டுவதிலும் தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கி காலத்தை கழிப்பதிலேயே இருந்து வருகிறார்கள் என்கின்றனர் சக போலீசார்.
அது மட்டுமல்லாமல் ஆவடி கமிஷனர் ஆபீஸ் காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் பொறுப்பில்லாமல் அஜாக்கிரதையாக செயல்பட்டதனாலேயே இந்த கார் விபத்து ஏற்பட்டது என்கிறார்கள் உளவுத்துறையில் உள்ள சில அதிகாரிகள்.
தமிழக முதல்வர் பொன்னேரிக்கு அரசு விழா தொடர்பாக வர இருக்கிறார் அது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது பற்றி ஆவடி மாநகர போலீஸ் கமிஷன் சங்கர் அந்த இடத்திற்கு போக திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் சம்பந்தப்பட்ட தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கமிஷனர் கிளம்பிவிட்டார் என்று செங்குன்றம் துணை ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் மாதவரம் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் மற்றும் பொன்னேரி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் எந்தவித தகவலையும் அளித்ததாக தெரியவில்லை என்கின்றனர்.அப்படி அவர்கள் சொல்லியிருந்தால் ஆவடியில் இருந்து அம்பத்தூர் செங்குன்றம் வழியாக பொன்னேரி செல்லும் கமிஷனரின் வருகையை ஏன் ஹைவே பேட்ரோல் போலீசார் கவனிக்கவில்லை அவர்கள் பணியில் இல்லாமல் எங்கே சென்றார்கள் என்ற கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.
சென்னையில் இருந்து கல்கத்தா நெடுஞ்சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள், மூட்டை ஏற்றி செல்லும் லாரிகள், காய்கறிகள் ஏற்றி செல்லும் லாரிகள், டெம்போ வண்டிகள் என ஒரு லாரிகளை விடாமல் போலீசார் வழி மடக்கி லஞ்சம் வாங்கி வருகின்றனர். மன்னிக்கும் அதிகார பிச்சை எடுத்து வருகின்றனர். இதுபோல லாரிகளில் பிச்சை எடுப்பதால் முக்கிய சாலைகளில் கமிஷனர் வருகிறாரா அல்லது அரசு உயர் அதிகாரிகள் யாராவது வருகிறார்களா என்று அவர்கள் கவனிப்பதில்லை. காரணம் பிச்சை எடுத்த பணத்தை கல்லா கட்டுவதற்கும் அதை பிரித்துக் கொள்வதற்குமே ஆவடி மாநகர ரோந்து போலீசாருக்கு நேரம் போதவில்லை என்கின்றார்கள் போலீஸ் அதிகாரிகள். உளவுத்துறை அதிகாரிகள் ஆவடி மாநகரத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக ஒரு ஃபைலை கூட அல்லது ஒரு தகவலை கூட கமிஷனருக்கு அளித்ததாக ஒரு செய்தி கூட இல்லை என்கின்றனர் சில போலீசார்.
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் சென்ற கார் விபத்தில் சிக்கியதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? அது திட்டமிட்ட சதியா இல்லை நடந்த கார் விபத்தா என்ற கோணத்தில் போலீசார் இதுவரை விசாரிக்கவே இல்லை.
எனவே கமிஷனர் பொன்னேரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் கவனக்குறைவாகவும் பணியில் ஒடுங்கினமாக செயல்பட்டதால் ஒட்டுமொத்த ஹைவே பேட்ரோல் வண்டியில் பணி செய்த அனைத்து காவலர்களுக்கும் 17 B, சார்ஜ் வழங்கி அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்கின்றனர் சில போலீஸ் அதிகாரிகள் அப்போது தான் அவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள்.
கமிஷனர் சங்கர் அவர்களின் கார் விபத்து ஏற்பட்டு ஏறக்குறைய 20 நிமிடங்கள் கழித்து தான் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாக சொல்லுகிறார்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள்.
லாரிகளை வழிமறித்து லஞ்சம் வாங்கி மன்னிக்கவும் பிச்சை எடுப்பதில் ஆர்வம் காட்டும் போலீசார் கமிஷ்னர் இந்த வழியாக செல்லுகிறார் என்று தெரிந்தும் கவனக்குறைவாக இருந்ததற்கு பொறுப்பு யார் மாநகர தலைமை அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் செய்த தவறா? அல்லது உளவுத்துறை அதிகாரிகள் செய்த தவறா? அல்லது செங்குன்றம் மற்றும் பொன்னேரி காவல் கோட்டத்தில் உள்ள அதிகாரிகள் செய்த தவறா என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.
எனவே சம்பந்தப்பட்ட அனைவரையும் சஸ்பெண்ட் செய்தால் மட்டும் தான் இனிமேல் ஒழுங்காக பணியாற்றுவார்கள் என்கின்றனர் சில லஞ்சம் வாங்காத உளவுத்துறையில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள்.
ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் உள்ள ரோந்து போலீசார் சாலை ஓரத்தில் உள்ள எல்லா கடைகளிலும் காய்கறி கடைகள், மீன் கடை ,காளான் கடை, பழக்கடை, பானி பூரி கடை எல்லா கடைகளிலும் பிச்சை எடுத்து வருகின்றனர் பிச்சை எடுப்பது மட்டுமில்லாமல் கௌரவமாக அவர்களே பையை எடுத்து காய்கறி அள்ளிப் போட்டுக் கொண்டு ஜம்பமாக செல்கிறார்கள் இப்படி பிச்சை எடுத்து வாழ்வதற்கு காக்கி சட்டையை கழட்டி விட்டு வேறு ஏதாவது வேலை செய்யலாம் என்கிறார்கள். ரோட்டோர கடையில் பணியாற்றும் இந்தி பேசும் ஊழியர்கள்.கமிஷனர் இதையெல்லாம் கவனித்து ஆராய்ந்து உளவுத்துறையை தட்டி ஒழுங்கினமாக பணியாற்றும் அதிகாரிகள்,காவலர்கள் குறித்து அறிக்கை வாங்கி சஸ்பெண்ட் செய்தால் ஆவடி காவல் மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும். இல்லையென்றால் சந்தி சிரிக்கும். காக்கி சட்டை போட்டுக் கொண்டே களவாணித்தனம் செய்யும் அதிகாரிகள் மீது கமிஷனர் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரசும் வி.ஐ.பி.களுக்கு வழங்கும் பாதுகப்பு போலீசார் அடங்கிய வாகனம் வழங்க அனுமதிக்கவேண்டும் என்கின்றனர் காவல் அதிகாரிகள்.