குறிப்பிட்ட சில சமூக மக்கள் அல்லது பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தொழில்களை செய்து வருவதையே விரும்புகின்றனர். அதை மிகச் சிறப்பாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
ஆனால் முதலாளித்துவம் என்பது உலகம் தொடங்கிய காலத்தில் இருந்து இருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது இந்த படம். அதே சமயம் கூலி உயர்வை உயர்த்தி கேட்கும் போது முதலாளிகளின் அடியாட்களாக குரலை உயர்த்தி பேசுகிறவர்களும் அந்த அடித்தட்டு மக்கள் பிரதிநிதியாகத்தான் ஒருவர்இருக்கிறார்.
தொடர்ச்சியாக சில காட்சிகள் திரும்பத் திரும்ப திரைப்படத்தில் பிரதிபலிக்கிறது. படத்தின் கடைசி பாடலாக சித்தன் ஜெயமூர்த்தி பாடிய பாடல் தான் படத்திற்கு இன்னும் மெருகேற்றுகிறது. மீதி பாடல் மக்கள் மனதில் இடம் பெறவில்லை. அதேசமயம் வாழை தோட்டத்தின் முதலாளி லாரி விபத்தில் இறந்து போனவர்களின் துக்க நிகழ்ச்சிக்கு மாலை அணிவித்து அணிவிக்க வரும் பொழுது அவர்களை தடுக்கும் காட்சிகளையும் வலுப்படுத்தி இருக்கலாம்.
ஏற்கனவே சிவனைந்தான் மற்றும் வேம்பு குடும்பத்தில் தந்தை கம்யூனிச தொழிலாளியாக இருந்து அந்த மக்களுக்கு பணியாற்றிய நினைவு கூறும் வகையில் காட்சியை அமைத்திருக்கலாம். ஏன் அந்த முதலாளி வருகிற பொழுது சிவனைந்தான் சாப்பிடுவதற்கு முன்பாக பறந்து மேல் ஒரு கட்டை அல்லது கம்யூனிஸ்ட் கொடி கட்டி வைத்திருக்கும் கம்பு ஒன்றை எடுத்து வந்து முதலாளியை தாக்கும் காட்சியை கூட வைத்திருக்கலாம். கூலியை ஒசத்தி கேட்கும் போது மனித உயிர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா இறந்தபோது தான் மனிதன் கண்ணுக்கு தெரிகிறானா என்று அடிக்கும் காட்சியை வைத்து இருக்கலாம்.
குழந்தை தொழிலாளர்கள் நசுக்கப்படும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் வலிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தங்கள் வாழ்க்கையில் எப்படி வரவேண்டும் என்பதை வாழை சுமந்து வரும் போது பேசும் ஒரு காட்சி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை பேசும் படமான வாழை எந்நேரமும் கூலி உயர்வு, உழைப்பு, பொருளாதார மேம்பாடு பற்றி பேசும் கதாபாத்திரமான சிவநைந்தனின் தந்தையை நினைவுபடுத்தும் இயக்குனர் ஒரு இடத்தில் கூட தொழிலாளர்களின் உயிரைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் பேசும் அதாவது நெஞ்சை உருக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெறாமல் போனது துரதிஷ்டமானது.
லாரி விபத்தில் உயிரிழந்த 19 தொழிலாளர்களின் இறுதி அஞ்சலி செலுத்த வரும் முதலாளிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு கம்யூனிஸ்ட் போர்டு வைத்திருக்கலாம் அதில் முதலாளி வர்க்கம் ஒழிக! ரத்த வெறிபிடித்த மனித மிருகமே! இறுதி அஞ்சலி செலுத்த வராதே என்று ஒரு வாசகம் எழுதி வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
வாழை கூலி தொழிலாளர்களின் வலிகளை சுமந்த படம்.