chennireporters.com

தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் வேண்டுகோள்.

Chennai_High_Court

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்று வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒருநாளைக்கு இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தினந்தோறும் இறப்பு 4 ஆயிரத்தை கடந்து செல்கிறது. தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இதனால், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆஸ்பத்திரியில், சிகிச்சைக்கு இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறிவிட்ட சூழல் காணப்படுகிறது.

குறிப்பாக வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனால், உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடிதான் உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்திய பின்னரும், நோய் பரவல் வேகம் மட்டுப்படவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால், கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் தற்காலிக மருத்துவமனைகளாகவும், தனிமைப்படுத்தும் முகாம்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.maduri high court

கொரோனா பரவல் காரணமாக அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால், விடுமுறைகால கோர்ட்டுகளும் மட்டும் செயல்படுகின்றன. இந்த கோர்ட்டுகள் அனைத்தும் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கோர்ட்டுகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாரபட்சம் இல்லாமல் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு வழக்கறிஞர்கள் சமுதாயமும் தப்பவில்லை. ஏராளமான வழக்கறிஞர்கள், அவர்தம் குடும்பத்தினர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் இடம் கிடைப்பதும், ஆக்சிஜன் படுக்கை கிடைப்பதும் மிகவும் சிரமமாக இருந்து வருகிறது.

இந்த சூழலை கருத்தில் கொண்டு, அனைத்து கோர்ட் வளாகங்களையும் தற்காலிக மருத்துவமனை மையமாக மாற்றுவதற்கு உரிய உத்தரவுகளை பிறப்ப்க்கும்படி, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிக்கு, தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” சிகிச்சைக்கான படுக்கைகள் கிடைக்காமல் நீதித்துறை மற்றும் வழக்கறிஞர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால்,
நீதிமன்ற வளாகங்களை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றினால், அரசுக்கு உள்ள இக்காட்டான நிலையில் உதவும் வகையில் இருக்கும். தனிமை மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள், மருந்து, வெண்டிலேட்டர் ஆகியவை வழக்கறிஞர் மற்றும் நீதித்துறை சார்ந்தவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமுள்ள மாவட்ட மற்றும் தாலுக்கா வாரியாக குழுக்களையோ, நோடல் அதிகாரிகளையோ நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதையும் படிங்க.!