chennireporters.com

# bjp leadership that ignores; சிறுபான்மையினரை புறக்கணிக்கும் பாஜக தலைமை.

நடந்து முடிந்த பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் முதலியார் பேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற சிறுபான்மை இனத்தை சார்ந்த ஜான் குமார் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.சிறுபான்மையினத்தை சார்ந்த ஜான் குமார் எம்எல்ஏ.

இவர் பாண்டிச்சேரி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருபவர் இருப்பினும் என் ஆர் காங்கிரஸ் அமைச்சரவையில் கடந்த ஆட்சி காலத்தில் அவருக்கு அமைச்சர் பதவி பிரமாணம் மட்டும் செய்து வைத்துவிட்டு, துறையை ஒதுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.  இருப்பினும் கூட்டணி தர்மத்திற்காக போர்க்கொடி தூக்காமல் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் பாஜக, என் ஆர் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்க உள்ளது.  இந்த நிலையில் என் ஆர் காங்கிரஸின் அமைச்சரவை பட்டியல் டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  அதில் ஜான் குமார் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.  சிறுபான்மையினத்தை சார்ந்த ஜான் குமார் எம்எல்ஏ.

சிறுபான்மை மக்களின் வாக்கு மட்டும் பாஜகவுக்கு தேவைப்படுகிறது.  அமைச்சர் பதவி வழங்குவதற்கு பாஜக தலைமைக்கு மனம் இல்லையா என்கிற கேள்வி எழுப்பி வருகின்றனர். புதுச்சேரியில் பா.ஜ., அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. பதவி விலகும் அமைச்சர்  நமச்சிவாயம்! | puducherry minister namassivayam to be resign likely to join  bjp - Tamil Oneindiaநமச்சிவாயம்.

பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த சிறுபான்மை இன மக்கள்.   பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நமச்சிவாயம் உள்துறை அமைச்சராக ஏற்கனவே பதவி வகித்து வந்த காலகட்டத்தில் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா.

உதாரணத்திற்கு காவல்துறையில் பணி நியமனத்தில் முறைகேடு, உள்துறையில் முறைகேடு என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.  போலி மாத்திரை தயாரிப்பு நிறுவனத்திற்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பாண்டிச்சேரி உளவுத்துறை அதிகாரிகள் வெளிப்படையாகவே டெல்லி தலைமைக்கு புகார் அனுப்பி இருந்தனர். அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் - தமிழ் விக்கிப்பீடியா

இருப்பினும் அவர் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்கசாமியின் அண்ணன் மகளை திருமணம் செய்திருக்கிற மருமகன் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.  அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாண்டிச்சேரி அமைச்சர் அவையையே அவர் ஆட்டிப்படைத்து வருகிறார் என குற்றம்சாட்டுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.  Campaign for our congress candidate from Indira nagar Shri Rajkumar at #puducherry @inc_puducherryரங்கசாமி.

எனவே ஒரே குடும்பத்தில் மாமனார் முதலமைச்சராகவும்,  மருமகன் உள்துறை அமைச்சராகவும் இருப்பதை எந்த கட்சியினரும் பாண்டிச்சேரி அரசியலில் விரும்பவில்லை.  எனவே பாஜக கட்சித் தலைமை யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்கின்றனர். 

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாண்டிச்சேரியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக பணியாற்றி வரும் ஜான் குமாருக்கு  கடந்த கால ஆட்சியில் இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்ததை தவிர்த்துவிட்டு புதிய அமைச்சரவையில் அவருக்கு சிறுபான்மை நலத்துறை அல்லது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என ஏதாவது ஒரு நல்ல துறையை அவருக்கு வழங்கி பாரதிய ஜனதா கட்சியின் மேல் ஏற்பட்டு இருக்கிற கரையை அழுக்கை டெல்லி தலைமை நீக்கி அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்கின்றனர் பாண்டிச்சேரி அரசியலின் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள்.BJP பற்றி – BJP | பாஜக குஜராத் | பாரதிய ஜனதா கட்சி

தமிழ்நாட்டு அரசியலைப் போலவே பாண்டிச்சேரி அரசியலிலும் குடும்ப அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அது மட்டுமல்ல பணம் கொடுப்பவர்களுக்கு அமைச்சர் பதவி என பல அதிகாரங்களை வழங்கி வருவதாகவும் ரங்கசாமி மீது குற்றச்சாட்டு இருந்துள்ளது.  குறிப்பாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.  ஆனால் அவருக்கு ரங்கசாமி அரசு நியமன எம்எல்ஏ பதவி வழங்கி கொண்டாடியது.  இதற்காக சில கோடி ரூபாய்கள் கைமாறப்பட்டது என்கின்றனர் காரைக்கால் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள்.  ராஜசேகர்.

தற்போது சாராய ஆலை அதிபராக உள்ள ராஜசேகர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க ரங்கசாமி அரசு முடிவு செய்துள்ளது.  எனவே மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் திறமையான நபருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்கின்றனர் சிறுபான்மையின மக்கள்.  எனவே பாண்டிச்சேரி மாநிலத்தில் பிஜேபியை பலமாக வளர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வரும் ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்.  பாஜக தலைமை என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கின்றனர் பாஜகவின் முக்கிய அரசியல் தலைவர்கள்.

இதையும் படிங்க.!