chennireporters.com

#Bribery லஞ்சப் பணத்தில் புரளும் கனகம்மாசத்திரம் காவல் நிலைய ஏட்டு ருக்கு! ருக்குமனி, துட்டு மனி, மனி, மனி ருக்குமனி..

எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் இழவு வீட்டிலும் பிடுங்கித் தின்னும் ஏட்டு பற்றி டிஐஜிக்கு புகார் அனுப்பியுள்ள செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மா சத்திரத்தில் உள்ள D3- காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றுபவர் தலைமை காவலர் ”ருக்கு” என்கிற ருக்மாங்கதன். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இதே காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

 கனகம்மாசத்திரம் காவல் நிலைய ஏட்டு ருக்மாங்கதன்.

இவர் வெறும் கையுடன் வீட்டிலிருந்து கிளம்பி  காவல் நிலையம் வந்து கல்லா கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போகும்போது லஞ்சப் பணத்துடன் செல்வதுதான் வழக்கம் இட்லி கடையில் தொடங்கி காய்கறி கடை, மளிகை கடை, டீக்கடை வரை எல்லாம் ஓசி தான் ஏட்டு ருக்குக்கு பணம் கொடுத்து அவர் எதையும் வாங்கி சாப்பிட்டதாக வரலாறு இல்லை என்கின்றனர் அவருடன் பணியாற்றும் சில காக்கிகள்.

காவல் நிலையத்தில் நடக்கும் சில கட்டிங் பஞ்சாயத்துகளை இன்ஸ்பெக்டரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் இவரே கட்டிங் வாங்கிக் கொள்வார். ஆனால் இன்ஸ்பெக்டரிடம் மற்ற போலீஸ்காரர்களை போட்டுக் கொடுப்பார். போட்டுக் கொடுப்பதில் தமிழ்நாட்டிலே இவர் தான் திறமை வாய்ந்தவர் என்கின்றனர் திருத்தணி சப் டிவிஷனில் பணியாற்றும் சில உளவுத்துறை அதிகாரிகள்.

இவர் இப்படி சேர்த்த லஞ்சப் பணத்தில் சொந்த ஊரில் நிறைய விவசாய நிலங்களும் வீட்டு மனைகளும் வாங்கி வைத்திருப்பதாக சொல்லுகிறார்கள் அவருடன் பணியாற்றும் காவலர்கள்.

சில தினங்களுக்கு முன்பு திருத்தணி நெடுஞ்சாலையில் காவல் நிலையத்தின் அருகில் உள்ள செக் போஸ்ட் அமைந்துள்ள இடத்தை போதையில்  பைக் ஓட்டி வந்த lதிருப்பதியை சேர்ந்த வாலிபர் பானு பிரகாஷ் என்பவர் போலீஸ் பூத்தின் மீது  அந்த தகரம் போட்டு வைத்துள்ள அறையின் மீது மோதி தகடுகள் எல்லாம் சிதறி ஓடியது. இதில் சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று விட்டு காவல் நிலையத்திற்கு வந்த பானு கிரகாஷிடம் தலைமை காவலர் ருக்கு 50,000-ம் பணம் வாங்கிக் கொண்டு வழக்கு போடாமல் வண்டியை குடிகார இளைஞனிடம் கொடுத்து அனுப்பிவிட்டார்.

இழவு வீட்டிலும் கூட பணம் வாங்காமல் இருக்க மாட்டார் எங்கள் ஏட்டு இருக்கு என்று காமெடியாய் சொல்லிக் கலாய்கின்றனர் கனகம்மாசத்திரம் காவல் நிலைய காவலர்கள்.

காவல் நிலையத்தில் உள்ள சில பெண் காவலர்களை பார்த்தால் ஏட்டு ருக்கு ஹீரோ என்று நினைப்பு வந்து ரொமான்டிக் மூடில் டபுள் மீனிங் பேசுவாராம். இது குறித்து டிஐஜி பொன்னிக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் சில காவலர்கள். காக்கி சட்டை போட்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஏட்டு ருக்கு காக்கி சட்டையின் அவமானத்தின் சின்னம் என்கின்றனர் கனகம்மாசத்திரம் காவலர்கள்.

Ponni becomes the 100th DIG in Madurai Sarakam | டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு

டிஐஜி பொன்னி,

கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் அண்ணன் தம்பி சண்டை என்று அடித்துக் கொண்டு வந்தாலும், மாமன் மச்சான் சண்டை என்று அடித்துக் கொண்டு வந்தாலும் பணத்தை பிடுங்கிக் கொண்டு குடும்பத்துக்குள்ளேயே குழப்பத்தை உண்டாக்குவது தான் ஏட்டு ருக்குவின் சிறப்பு அம்சம் என்கின்றனர்.

குற்ற வழக்கில் ஒருவர்  பெயில் வாங்கிக்கொண்டு தினமும் கையெழுத்து போட வரும் நபர்களிடம் காசு கொடு கையெழுத்து எல்லாம் போடத் தேவையில்லை. நான் பார்த்துக் கொள்ளுகிறேன் வாரத்துக்கு ஒரு முறை வந்து கையெழுத்து போட்டால் போதும் என்று என்று கட்டிங் வாங்குவாராம். இப்படி இவர் வாங்கிய கட்டிங் பல லட்சங்களை தாண்டும் என்கின்றனர். ஏட்டு ருக்கு இதே காவல் நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றினால் பல கிராமங்களில் வெட்டுக்குத்தும் சாதி கலவரங்களும் ஏற்படும் அபாயம் நிலை உள்ளது.

ஏட்டு ருக்மாங்கதன்.

எனவே அவரை அதிக வருமானம் உள்ள கேட்க ஆளில்லாத நல்ல காவல் நிலையத்தில் அவருக்கு பணி வழங்கினால் இன்னும் சிறப்பாக மிஷின் வைத்து காசு எண்ணிக்கொண்டே சந்தோஷமாய் காலத்தை கழிப்பார். உயர் அதிகாரிகள் அவருக்கு உதவி செய்து நல்ல காவல் நிலையத்திற்கு  அதாவது வருமானம் உள்ள காவல் நிலையத்திற்கு அவரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என்கின்றனர் அவரால் பாதிக்கப்பட்ட பல கிராமத்தினர்.

 

தான் எப்படி லஞ்சம் வாங்குகிறேன் மற்ற போலீஸ்காரர்களை இன்ஃபெக்டரிடம்  எப்படி போட்டுக் கொடுப்பது, காட்டிக் கொடுப்பது, போன்ற தில்லாலங்கடி வேலை செய்வது குறித்து தலைமை காவலர் ருக்கு அவர் தரப்பு விளக்கத்தை நமக்கு  தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!