chennireporters.com

#Casteism is rampant; திருவள்ளூர் திமுகவில் தலை விரித்தாடும் சாதிவெறி. சரி செய்வாரா தலைவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னால் திருவள்ளூர் பி.டி.ஓ அலுவலகத்தின் எதிரில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்ததது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட  ஒன்றிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். அந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளும் கட்சியின் விதிப்படி பேசினார்கள்.இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட ஈக்காட்டில் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை பேரும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் எம்பி கிருஷ்ணசாமியின் பெயரை சொல்லி பேசினார்கள்.

ஆனால் கட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆன புதிய வரவான திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் மாவட்ட செயலாளர் அமைச்சர் நாசர் ஆகியவர்களின்  பெயர்களை சொல்லி குறிப்பிட்டு பேசிய சுரேஷ்குமார் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமியின் பெயரை சொல்லமலேயே பேசினார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார்.

இது குறித்து கூட்டத்தில் இருந்த பல உடன்பிறப்புகள்ஏன் எம்.மல்.ஏ பெயரை சொல்லாமல் பேசுனார் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் இவர் அமைச்சரின் ஆதரவாளர் என்பதாலும் பணம் படைத்தவர் என்பதாலும் யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை.ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட திமுகவில் பல உட்கட்சி பூசல்கள் நிலவி வருகிறது. அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார் என்றும் அதேபோல திருத்தணி , கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் பல்வேறு உக்கட்சி பூசல்கள் நிலவி வருகிறது.

அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 

இந்த நிலையில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பதாலேயே மாற்று சமூகத்தை சார்ந்த மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் அவரது பெயரை சொல்லவில்லை சாதி வெறியினால் குறிப்பிடவில்லை என்று சொல்கிறார்கள் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் மூத்த நிர்வாகிகள்.

 

பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி.

இந்த நிலையில்  திமுக சமத்துவ கட்சி இங்கு சாதி பாகுபாடு பார்பதில்லை என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கட்சியின் செயல்பாடுகளை நினைத்து கடும் மூடு அப்சட்டில் இருப்பதாக சொல்கின்றனர் சில மூத்த நிர்வாகிகள். இந்த செய்தி குறித்து திமுக நிர்வாகிகள் நங்களது தரப்பு கருத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!