அருப்புகோட்டை கல்லூரி பேராசிரியர் நிர்மாலதேவி கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் சிபிசிஐடி போலிசார் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.உதவி பேராசிரியை நிர்மலாதேவி மீதான கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்சென்ற வழக்கில் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் விடுதலையானதை எதிர்த்து சிபிசிஐடி போலீசார் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு, பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழகமெங்கும் அதிர்ச்சியையும், சலசலப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்திய வழக்கு இதுவாகும். தனியார் கல்லூரியின் பேராசிரியரான நிர்மலாதேவி, தன்னிடம் பயின்ற கல்லூரி மாணவிகளை, தவறான பாதைக்கு அழைத்து சென்றதுதான், இவர்மீது வைக்கப்பட்ட முதன்மையான குற்றச்சாட்டாகும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த முயன்றபோதுதான், அவரது தனிப்பட்ட விவகாரங்கள் பூதாகரமாக வெடித்து கிளம்பியது. கடந்த 2011ம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவருடன் தான் உல்லாசம் அனுபவித்ததாகவும், 2016-ல் தேவாங்கர் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் உல்லாசம் அனுபவித்ததாகவும், பிறகு கணவரின் நண்பர்கள் 2 பேருடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடனும் நெருக்கமாக இருந்ததாகவும் நிர்மலாதேவி போலீஸ் விசாரணையில் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, மற்றொரு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி, நகைக்கடை அதிபர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக அலுவலக அதிகாரி, எஸ்பிகே கல்லூரி உதவி பேராசிரியர், உதவி பேராசிரியர் முருகன் போன்றோருடன் நெருக்கமாக இருந்த்தாகவும் கருப்பசாமியுடன் காரில் அருப்புக்கோட்டை சென்றபோது, காரை ஓரமாக நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே உல்லாசம் அனுபவித்ததாகவும் நிர்மலா தேவி, சிபிசிஐடி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருந்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதெல்லாம் நிர்மலா தேவியின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும், கல்வி பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்திருந்ததுதான் பகீர் குற்றச்சாட்டாக கிளம்பியது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியாகியிருந்த ஆடியோ ஒன்றில், மாணவிகளிடம் பாலியல் பேரம் குறித்தும், அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் குறித்தும் நிர்மலா தேவி, பேசியிருந்தார்.
பேராசிரியர் நிர்மலா தேவி.
இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. விஐபிக்களுக்கு மாணவிகளை சப்ளை செய்வது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, நிர்மலாதேவி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சமூக வலைதளங்களில் வைரலானது. இறுதியில் 3 பேருமே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும்,, ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும் பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்மலாதேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தொடர்பாக 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
ஆனால், சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை. மாறாக வழக்கு முழுவதுமே வீடியோ விசாரணையாக இருந்தது. சாட்சிகள் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. இதைக் கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. எனவே, தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும்” என கூறியிருந்தார்.
நிர்மலாதேவியின் இந்த மனுவானது நீதிபதி பி.புகழேந்தி முன்பு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது அரசு தரப்பில், “இந்த வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த மேல்முறையீட்டு மனுவுடன் நிர்மலாதேவியின் மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு, இந்த விசாரணையை வரும் பிப்ரவரி 25-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். நிர்மலாதேவியின் இந்த வழக்கை மீண்டும் போலீசார் தீவிர புலண் விசாரணை நடத்தி நிறைய ஆதாரங்களை திரட்டி அவருக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று சமூக வலைதளத்தில் நிட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் தரும் தண்டனை இந்த நாட்டில் இனிமேல் மாணவிகளை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் வரும் அளவிற்கான தண்டனையாகாது இருக்க வேண்டும் என்று பல பெண்களின் பெற்றோர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.