சென்னை, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர், போன்ற மாவட்டங்களில் ஏன் தமிழ்நாடு முழுவதும் காக்கி சட்டையே போடாமல் சிபிசிஐடி துறையில் கடந்த 30 வருடமாக குப்பை கொட்டி கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு பணி மாற்றம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ரேங்கில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 20 வருடத்தில் இருந்து 30 வருடம் வரை ஒரே மாவட்டத்தில் ஒரே துறையில் பணியாற்றி வருகின்றனர் இதனால் பல்வேறு குழப்பங்களும் மோசடிகளும் நடைபெற்று வருகிறது என்ற புதிய புகார் ஒன்று நமது அலுவலகத்திற்கு வந்தது.
சென்னையில் தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்படும் புகார் அந்தந்த மாவட்டத்திற்கு விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவு சென்றால் சம்பந்தப்பட்ட புகார் தெரிவித்த நபரிடம் மழுப்பலாக பேசி புகார் கூறப்பட்டவரிடம் பல லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீரஜ்குமார் ஐஏஎஸ்.
சிபிசிஐடி யில் லாங் ஸ்டாண்டிங் என்று சொல்லப்படும் நீண்ட காலமாக பணியில் உள்ளவர்களை அனைவரையும் பணியிட மாற்றம் செய்யப்படவேண்டும் என்று உத்தரவு இருந்தும் அதை அதிகாரிகள் செயல் படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தலைமை காவல,ர் சிறப்பு உதவி ஆய்வாளர், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் என 300 க்கும் மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டு முதல் 30 ஆண்டு வரை ஒரே துறையில் பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே டிஜிபி லாங் ஸ்டாண்டில் உள்ளவர் அதிகாரிகளை பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டும் இதுவரை துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிபிசிஐடி ஐஜி அன்பு.
கோவை மாவட்டத்தில் டிஎஸ்பி அர்ஜுனன் என்பவர் 33 வருட காலமாக ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல ராதா என்கிற பெண் இன்ஸ்பெக்டர் 25 ஆண்டு காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார். அது மட்டும் இல்லாமல் தன் கீழ் உள்ள அதிகாரிகளை மிரட்டுவதும் ஒருமையில் பேசுவதும் தனது வாடிக்கையாக கொண்டுள்ளார். தலைமை அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட செக்ஷன் அதிகாரியிடம் அதாவது கிளார்க்கிடம் இவர்கள் பணம் கொடுத்து ஒரே இடத்தில் நீண்ட காலமாய் இருப்பதற்கு தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் வேலைக்கு வராமல் ஒப்பி அடித்து விட்டு தனது சொந்த வேலையை செய்து வருகின்றனர் வெளியே போனால் யூனிபார்ம் போட வேண்டும் கஷ்டப்பட வேண்டும் என்பதால் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டுகிறார்கள் என புலம்புகிறார்கள் சில இளைய அதிகாரிகள்.
அப்படியே ஏதாவது பிரச்சினை இருந்தாலும் திருப்பூரில் உள்ளவர்கள் கோயம்புத்தூருக்கும் கோயம்புத்தூரில் உள்ளவர்கள் திருப்பூருக்கும் ஈரோட்டில் உள்ளவர்கள் நாமக்கல்லுக்கும், நாமக்கல்லில் உள்ளவர்கள் ஈரோட்டிற்கும் பக்கத்து பக்கத்து மாவட்டத்திலேயே பணி மாற்றம் செய்து கொள்கிறார்கள்.
ஒரு மூன்று மாதம் பணி செய்துவிட்டு மீண்டும் தனது சொந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட செக்ஷன் கிளார்க்கு பணம் கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள். எனவே நேர்மையின் சிகரமாக விளங்கும் சிபிசிஐடியின் ஐஜி அன்பு அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக பணி மாறுதல் வழங்கி திறமையானவர்களை மூன்று வருடத்திற்கு ஒரு முறை பணி மாற்றம் செய்ய வேண்டும் என்று கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட சிபிசிஐடியில் பணியாற்றும் சில இளைய அதிகாரிகள்.
தாய் தந்தை மற்றும் மனைவி என தனது குடும்பத்தினரை ஒரு மாவட்டத்தில் விட்டு விட்டு இன்னொரு மாவட்டத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் மாவட்டத்திற்கு மாறுதல் வேண்டி சம்பந்தப்பட்ட துறை கிளார்க்கிடம் சென்றால் அவர் பணி வழங்க மறுக்கிறார். எனவே அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு குடும்பத்தை பிரிந்து வாழும் காக்கி சட்டைகளுக்கு கருணை உள்ளத்தோடு அன்பு ஐஜி உடனடியாக பணி மாறுதல் வழங்க வேண்டும் என்று பலத்த குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
அதிரடியான நடவடிக்கை எடுத்து அன்பு உள்ளத்தோடுஐஜி அன்பு கருணை காட்டுவாரா? என காத்து கொண்டிருக்கின்றனர்.
