chennireporters.com

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு குறைவான பக்தர்களை அனுமதிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பக்தர்கள்.

மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.

கிரிவலத்திற்கு இன்றும், நாளையும் 5,000 உள்ளூர் பக்தர்களையும் 15,000 வெளியூர் பக்தர்களையும் அனுமதிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது.

கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இதையும் படிங்க.!