.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்அவருக்கு தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் செல்போன் மூலம் சீமானை தொடர்பு கொண்டு அவரது தந்தை இறந்து விட்டதற்கு இரங்கல் தெரிவித்தார்.
பின்னர் அவருக்கு ஆறுதலும் கூறினார்.இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கருதி தனக்கு எதிராக சீமான் எந்த விதமான கருத்துக்களை தேர்தலில் தெரிவித்திருந்தாலும் அதையெல்லாம் சிறிதளவும் கருத்தில் கொள்ளாமல் அவரது தந்தை இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறியது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் தந்தை செந்தமிழன் உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.