chennireporters.com

#CM Stalin’s action; முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி. துரைமுருகனிடம் இருந்த நீர்வளத்துறை பறிப்பு. தமிழக அரசியலில் பரபரப்பு…

தமிழக அமைச்சரவையில் அதிரடி.. துரைமுருகன் இலாகா மாற்றம்..ரகுபதிக்கு கனிமவள துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகனின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்களான துரைமுருகன் மற்றும் ரகுபதியின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நீர்வளம் மற்றும் கனிவளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனிடன் இருந்து கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

portfolio-change-in-tamil-nadu-cabinet-durai-murugan-raghupathis-responsibilities-changed
இதேபோல் அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கும், ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்கள் இலாகா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சொத்து குவிப்பு.. துரைமுருகனை விடுவித்தது செல்லாது.. 6 மாதத்தில் விசாரித்து  முடிக்கணும் - ஹைகோர்ட் | Chennai high court will give verdict on  disappropriate asset against ...

* ஏற்கனவே 2009 – 2011 ஆம் ஆண்டுகளில் துரைமுருகன் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
* நீர்வளத்துறையுடன் சேர்த்து இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் கவனிப்பார்.
* கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த நிலையில், தற்போது அவரது இலாகா மாற்றப்பட்டுள்ளது. இனி கனிமவளத்துறை அமைச்சராக ரகுபதி நீடிப்பார்.

துரைமுருகன் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. இலாகா பறிப்புக்கு பின்னணி என்ன?  சீனியர்களுக்கு மெசேஜ்! | Stalin Unhappy with Duraimurugan, Mineral Sector  Complaints Prompt ...

தமிழக அமைச்சரவையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பை அடுத்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்துவிலகினார். அதெபோல பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக மனோ தங்கராஜ் புதிதாக சேர்க்கப்பட்டார்.

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?- கவர்னரை சந்திக்கிறார் அமைச்சர்  துரைமுருகன் | minister duraimurugan will meet TN governor

செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் அதிரடியாக இலாகா மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!