விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என்று கூறியதை நம்பி, கோவை Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று கோவை மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

MyV3Ads நிறுவனம் மீது புகார்
செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் பணம் என்ற MyV3Ads நிறுவனம் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பேசுபொருளாகியுள்ளது. MyV3Ads நிறுவனம் ஆசைக்காட்டி மோசடி செய்ததாகவும், மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும் கோவை போலீஸ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

MyV3Ads நிறுவன உறுப்பினர்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் பல ஆயிரக்கணக்கானோர், கடந்த வாரம் நீலாம்பூர் பகுதியில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அந்த நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
இதே நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு V3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, பாதிக்கப்படட்வர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து ஸ்டாலின் என்பவர் கூறுகையில், ” 5 ஆண்டுகளுக்கு முன்பு V3ஆன்லைன் டிவி என்ற நிறுவனத்தை விஜயராகவன், குமாரி, சிவசங்கர் ஆகியோர் இணைந்து தொடங்கினர். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வந்தது.
MyV3Ads நிறுவனம் மீது புகார்
ரூ.600 ரூபாய் செலுத்தி, ஒரு தயாரிப்பை வாங்கிய பின்னர், விளம்பரம் பார்த்தால் வருமானம் வரும் என கூறினர். இப்படி ரூ. 18,000 கட்டி 6 நபர்களை சேர்த்து விட்டால் மாதம் ரூ.12,000 வருமானம் வரும். ரூ.1,26,000 செலுத்தி உறுப்பினரானால் மாதம்தோறும் வருமானம் வரும் என்றெல்லாம் கூறினர்.
இதை நம்பி பல ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்தனர்.
அவர்களும் இரண்டு ஆண்டுகள் முறையாக பணம் அளித்து வந்தனர். திடீரென ஒரேநாளில் நிறுவனம் மூடப்பட்டது. அப்போது அந்நிறுவனத்தில் மார்கெட்டிங் இயக்குநராக இருந்த சக்தி ஆனந்தன் என்பவரை வைத்து தற்போது MyV3Ads என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி அதே பாணியில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தையும் விரைவில் மூடும் திட்டம் அவர்களுக்கு உள்ளது. பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
“காவல்துறை போலியான வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுவரை எங்களுக்கு சம்மன் கூட அனுப்பவில்லை.” என்று MyV3Ads நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன் கூறி வந்தார்.
சக்தி ஆனந்தன்
இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்தி ஆனந்தன் ஆஜராகியுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் Myv3ads நிறுவனம் 19 கிளை நிறுவனங்களுடன் செயல்பட்டு வந்தது. இது தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இயங்கி வந்தது. மோசடி புகாரை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில், முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் Myv3ads நிறுவனம் 19 கிளை நிறுவனங்களுடன் செயல்பட்டு வந்தது. இது தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இயங்கி வந்தது. மோசடி புகாரை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில், முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.