கோவை மாவட்டத்தில் ஃபிராடுத்தனம் செய்து போலி பத்திரிகை நடத்தி தற்போது பொள்ளாச்சி கிளை சிறையில் மகனுடன் கலி தின்னும் டுபாக்கூர் ரிப்போர்ட்டர் நந்தகுமார் மற்றும் அவரது மகன் அபிஷேக்குடன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. டுபாக்கூர் ஒநந்தகுமாருடன் தொடர்பில் இருக்கும் ஃபிராடு பத்திரிகையாளர்கள், டுபாக்கூர்கள் மற்றும் சில காவல்துறையின் கருப்பாடுகளையும் கமிஷனர் சரவண சுந்தர் அவர்களை மொத்தமாக களையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் துடியலூரில் பகுதியில் ஒரு பெண்ணை மிரட்டி பணம் கேட்ட போலி நிருபர் மற்றும் அவரது மகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை துடியலூர் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவர் தனது கணவரை பிரிந்து இட்லிக்கு தோசை மாவு அரைத்து கொடுக்கும் வியாபாரம் செய்து வருகிறார்.
டுபாக்கூர் ரிப்போர்டர் ஃபிராடு நந்தகுமார்.
கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு மாவு விற்பனை செய்துவிட்டு வந்தார். அப்போது சிவப்பு நிற புல்லட்டில் வந்த நந்தகுமார் என்பவரின் மகன் அபிஷேக் மற்றும் அவருடன் வந்த மற்றொரு இளைஞர் ஆகிய இருவரும் ஒரு மொபைல் போனை கொடுத்து அதில் உள்ள ஒருவரிடம் பேச வலியுறுத்தினர்.
மறுமுனையில் பேசியவர் தனது பெயர் நந்தகுமார் என்றும் நீ ரேஷன் அரிசியில் மாவு அரைத்து விற்கும் பெண் தானே அது குறித்து செய்தி போடாமல் இருக்க எனக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சப்பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதற்கு அந்தப் பெண் என்னை விற்றாலும் கூட அவ்வளவு பணம் வராது நான் ஒரு ஏழை கூலி தொழிலாளி என்று சொல்லி உள்ளார்.
ஆனால் அதற்குபணம் தர மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணை நந்தகுமார் அசிங்கமான ஆபாசமான வார்த்தைகளில் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இந்த நிலையில் அபிஷேக் மற்றும் அவருடன் வந்த இளைஞர் இருவரும் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து மன பங்கம் செய்துள்ளனர். மேலம் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததால் அங்கிருந்து இருவரும் தப்பி சென்றனர். நடந்த சம்பவங்களை பெண்ணின் உறவினர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவரையும் இந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து அந்த பெண் துடியலூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.அமைச்சர் தரப்பை மிரட்ட பொய் செய்தி வெளியிட்டு பணம் கேட்டு மிரட்டி போடப்பட்ட செய்தி.
அந்த புகாரின் பேரில் பெண்ணை ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது, மிரட்டியது , பெண் வன்கொடுமை சட்டம் என ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 420 போலி ரிப்போர்டர் நந்தகுமார் மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகிய இருவரையும் பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த செய்தி குறித்து நாம் விசாரணை நடத்திய போது பல புதிய திடுக்கிடும் தகவல்கள் நமக்கு கிடைத்தது.
டுபாக்கூர் ஃபிராடு ரிப்போர்டர் நந்தகுமார்.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஃபிராடு, டுபாக்கூர் ரிப்போர்ட்டர் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல அரசியல்வாதிகள் அதிகாரிகள் என பலரையும் மிரட்டி 20 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக சொல்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள்.
அது தவிர தனி ஒருவன் என்கிற என்ற ஒரு வாரப்பத்திரிகை சென்னையிலிருந்து வெளியாகி வருகிறது. இதனுடைய ஆசிரியர்.
சென்னை சேர்ந்த செந்தில்குமார் என்பவர். இவர் தான் இந்த பத்திரிகையின் வெளியிட்டாளர், உரிமையாளர், ஆசிரியர். ஆனால் ஆள் மாறாட்டம் செய்து நந்தகுமார் எடிட்டர் என்கிற காலத்தில் தன்னுடைய பெயரை போட்டுக் கொண்டு போலியாக தனி ஒருவன் பத்திரிகையை அதன் உரிமையாளருக்கு தெரியாமல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அச்சடித்து அதிகாரிகளை மிரட்டி பணம் சம்பாதித்து இருக்கிறார்.
இது குறித்து சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளருக்கு ஒரு புகார் கடிதம் அளித்துள்ளார். அந்த புகார் கடிதத்தில் அவர் தனி ஒருவன் வார இதழை ஆள் மாறாட்டம் செய்து போலியாக வெளியிடும் நபரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அதில் நான் செந்தில்குமார் தனி ஒருவன் என்கிற வார இதழின் வெளியிட்டாளர் மற்றும் ஆசிரியராக இருந்து பத்திரிகை நடத்தி வருகிறேன். கடந்த ஆறு மாத காலமாக பொருளாதார மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனி ஒருவன் வார இதழை வெளியிட முடியாமல் போனது. இந்த இடைப்பட்ட காலத்தில் நந்தகுமார் கோவை சேர்ந்த முரளி இவரும் தனி ஒருவன் வார இதழை நடத்தச் சொல்லி போலியாக நான் ஒரு ஒப்பந்தம் போட்டதைப்போல ஒரு பத்திரத்தை தயார் செய்து எனது கையெழுத்து இல்லாமல் தவறாக பயன்படுத்தி தனி ஒருவன் வார இதழை நடத்தி வந்துள்ளனர்,
இதனை கோயம்புத்தூரில் இருக்கும் நிருபர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். மேலும் முரளி மற்றும் நந்தகுமார் ஆகிய இருவர்கள் மீது தனி ஒருவன் இதழை தவறாக பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த புகாரில் கூறியுள்ளார்.
தமிழ் நாட்டில் குறிப்பாக கோயம்புத்தூர், திருப்பூர், நாகர்கோயில், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் ஃபிராடு பத்திரிகையாளர்கள் நிறைய பேர் உருவாகிவிட்டனர். சம்பந்தமே இல்லாத ஒரு பெயரில் ஒரு பத்திரிகையை தொடங்கி தான் பெரிய பத்திரிகை ஜாம்பவான் என்று சொல்லி டாஸ்மாக் கடைகள், ரேஷன் கடைகள் விபச்சார விடுதிகளில் பணம் பெற்று கொள்ளையடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு பத்திரிகையின் உரிமையாளருக்கு தெரியாமல் அவருடைய பத்திரிகையை சம்பந்தமே இல்லாத ஒரு ஃபிராடு தன் பெயரை எடிட்டர் என்று போட்டுக் கொண்டு பத்திரிகை நடத்தி அதிகாரிகளை மிரட்டி கொள்ளையடித்து இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் பல விபச்சார விடுதிகள் நடத்தும் உரிமையாளர்களிடம் நேரில் சென்று இந்த நந்தகுமார் பல லட்சம் ரூபாய் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
எனவே திருப்பூர் கோயம்புத்தூர் பகுதிகளில் ஆர்.என்.ஐ பதிவு இல்லாமல் பத்திரிகை நடத்தும் ஃபிராடுகள் மீதும் கையில் செல்போன் வைத்துக் கொண்டு நான் பெரிய யூடியூபர் என்று மிரட்டி பணம் சம்பாதிக்கும் எல்லா பிராடுகளையும் கைது செய்து களி தின்ன வைத்தால் தான் ஃபிராடு நாய்களுக்கு புத்தி வரும் என்கின்றனர் கோயம்புத்தூரை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் சிலர்.
ஃபிராடு பத்திரிகையாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு சில போலீஸ அதிகாரிகள் விபச்சார விடுதிகளை ஊக்கப்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதையும் கமிஷனர் கண்டறிந்து களை எடுக்க வேண்டும் என்கின்றனர் சில நேர்மையான போலீஸ் அதிகாரிகள்.
ஏற்கனவே கோயம்புத்தூர் கமிஷனராக இருந்த பாலகிருஷ்ணன் எந்த வித நடவடிக்கைகள் எடுக்காமல் ஸ்பா மையங்கள் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தும் விடுதிகளல் விபச்சாரம் நடைபெற்று வந்தது. அதன் மூலம் பல போலீஸ் அதிகாரிகள் பல லட்ச ரூபாய் ஒவ்வொரு மாதம் லஞ்சமாக பெற்று வந்தனர்.
இது குறித்து நாம் நமது சென்னை ரிப்போர்ட்டர்.காம் இணையதளத்தில் ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக சொன்ன கமிஷனர் பாலகிருஷ்ணன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பணி மாறுதல் பெற்று சென்னை சென்று விட்டார்.
டுபாக்கூர் ஃபிராடு ரிப்போட்டர் நந்தகுமாரின் மகன் அபிஷேக்.
தற்போதும் விபச்சார விடுதிகள் நடத்தும் புரோக்கர்களிடமிருந்து பல டுபாக்கூர் பத்திரிகையாளர்களும், பல போலீஸ் அதிகாரிகளும் google payவில் பணம் பெற்று வருகின்றனர்.
கோவை மாநகர கமிஷனர் சரவண சுந்தர்.
எனவே தற்போதைய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தனி படைகளை அமைத்து காக்கி சட்டையில் உலா வரும் களவாணிகளையும், கருப்பு ஆடுகளையும் , ஃபிராடு ரிப்போர்ட்டர்களையும் ஜெயிலுக்கு அனுப்பினால் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஃபிராடுகள் மோசடிப் பேர்வழிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
செய்வாரா கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷ்னர் சரவண சுந்தர் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.