chennireporters.com

மகளை அரை நிர்வாணம் செய்து கொடுமை படுத்திய தாய் மீது போலீசில் புகார்.

சிறுமி

15-வயதுள்ள சிறுமிக்கும் 40 வயதுள்ள இளைஞனுக்கும் நடை பெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது தணிகை போளூர் கிராமம் 15 வயது தனது மகளை 40 வயது நபருக்கு திருமணம் செய்ய வற்புறுத்தி தாய் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தணிகை போளூர் கிராமத்தில் வசிப்பவர் புஷ்பா இவரது கணவர் பெயர் வெங்கடேசன் இருவருக்கும் திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

வெங்கடேசன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார் புஷ்பா தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

தற்போது மகளுக்கு 15 வயது ஆகும் நிலையில் அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

நாற்பது வயது மதிக்கத்தக்க நபரை திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் புஷ்பா.இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள மகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி தாய் புஷ்பா மகளை கட்டாயப்படுத்தியும் அடிக்கடி கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது அதற்கு சிறுமி ஒத்து வராததால் அவர் முகத்தில் தீக்காயத்தை ஏற்படுத்தி பல்வேறு கொடுமைகளை செய்து வந்ததாக தெரிகிறது.

சிறுமியிடம் விசாரணை நடத்தும் அதிகாரி

இதுகுறித்துராணிப்பேட்டைமாவட்டசமூகநலதுறையினருக்குபுகார்அளிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட சமூக நல அலுவலர் விஜயா மற்றும்அதிகாரிகள்பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.இருப்பினும் அந்த சிறுமியின் தாய் மகளின் மேலாடையை கழற்றி அரை நிர்வாண கோலத்தில் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாகவும் இதனால் பயந்துபோன சிறுமி போர்வை போர்த்திக் கொண்டு தன்னுடைய அத்தை வீட்டுக்குச் சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியின் அத்தை மற்றும் உறவினர்கள் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஒரு தாய் தான் பெற்ற மகளையே கொடுமை படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தவிர மைனர் பெண்ணை திருமணம் செய்து வைக்க கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தியது தொடர்பாக சமூகநலத் துறை யினரும் தாய் புஷ்பா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க.!