ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் மிரட்டி பணம் கேட்ட புகார் தொடர்பாக திருப்போரூர் விசிக சிட்டிங் எம்எல் ஏ எஸ் எஸ் பாலாஜி மீது பல அதிர்ச்சி தரும் புகார்கள் வெளியாகி உள்ளது.

ஹெலிகாப்டர் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பத்திரிகையாளர்களை சந்தித்து மிரட்டுவதையே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாலாஜி மீது நாங்கள் என்ன சொல்ல முடியும் இதே தொகுதியில் பிறந்து வளர்ந்த என்னையே இந்த பாடு படுத்துகிறார் பொதுமக்களை என்ன பாடுபடுத்துவார் இந்த தொகுதியில் யார் தொழில் செய்ய வருவார்கள் என்று பத்திரிகையாளர்களிடம் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். நாங்கள் அனைத்தையும் சட்டரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.


திண்டிவனம் அருகே உள்ள மயிலம் தான் எஸ் எஸ் பாலாஜிக்கு சொந்த ஊர் அவரது அப்பா ரோடு கான்ட்ராக்டர் இவர்கள் குடிபெயர்ந்து சைதாப்பேட்டையில் தஞ்சம் அடைந்தனர் இவர்களது குடும்பமே திமுக குடும்பம்.


இவர் விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் வன்னி அரசுவின் காலை பிடித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்து திருமாவளவனுக்கு நெருக்கமானார். பின்னர் ஒரு டேப்பை தனது வலது கை அக்களத்தில் வைத்துக் கொண்டு இணையதளமே என் கையில் தான் திருமாவளவனே என் கையில்தான் என்று சொல்லிக்கொண்டே கட்சியினரையும் தமிழகம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்களையும் ஏமாற்றி வந்தார். திருமாவளவனுக்கு நெருக்கமாக இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்கிக்கொண்டார்.
அதன் பிறகு சில கைப்பிடி கால் பிடி வேலைகளை செய்து தலைவருக்கு நெருக்கமானார் திருப்போரூர் தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதாக திருமாவளவன் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி சீட்டும் பெற்று எம்எல்ஏவானார் கடந்த ஆண்டு நீலாங்கரையில் தன்னுடைய மகனுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் தலைமையில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பேரில் திமுக தலைமை தனக்கு மிகவும் நெருக்கம் என்ற போர்வையை பல பிசினஸ்மேன்களுக்கு தெரிவிக்கும் வகையில் தனது வீட்டு திருமண வீடியோவை சமூக வலைதளத்தில் பரவைச் செய்தார்.
முதல்வரும் முதல்வரின் மகன் உதயநிதியும் தனக்கு மிகவும் நெருக்கம் என்று சொல்லி பல்வேறு பிசினஸ் டீலிங்குகளை முடித்தாராம். அதில் பல கோடிக்கணக்கான பணத்தை லாபமாக பெற்றார். அதன் அடிப்படையில் போரூர் பைபாஸில் வலது பக்கத்தில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று வீடுகளை வாங்கியுள்ளாராம் அதன் மதிப்பு இரண்டு கோடியை தாண்டும் என்கிறார்கள். மகாபலிபுரம் திருப்போரூர் ஆகிய பகுதிகளில் சில கோடிகளில் வீடுகளை கட்டியுள்ளார். தனது சொந்த ஊரில் பல ஏக்கரில் நிலம் வாங்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இவருடைய சொத்து மதிப்பு சுமார் 500 கோடியை தாண்டும் என்கின்றனர் விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
அது மட்டுமல்லாமல் (MLPA) எனப்படும் மகாபலிபுரம் உள்ளூர் வளர்ச்சி திட்ட குழுமத்தின் உறுப்பினராக உள்ளார். இந்த குழுமத்தில் ரியல் எஸ்டேட் பிரமுகர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பல ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அதில் பல லட்சம் ரூபாயை ஏன் கோடிகளை தனது பர்சன்டேஜ் ஆக பெற்று சம்பாதித்துள்ளார் என்கின்றனர் முக்கிய நிர்வாகிகள் சிலர்.
இதில் அனைத்தும் 50 சதவீதம் தலைவர் திருமாவளவனுக்கு கொடுத்திருப்பதாகவும் அதனால் தலைவர் என்னை எதுவும் செய்ய மாட்டார் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றும் மார்தட்டி சொல்லி வருகிறாராம் எஸ் எஸ் பாலாஜி.
கட்சியின் மொத்த நிர்வாகிகள் சிலர் குறைந்தபட்சம் ss பாலாஜியை இரண்டு ஆண்டுகளாவது கட்சியிலிருந்து நீக்கி வைக்க வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜுனாவை நீக்கியது போல உடனடியாக கட்சியில் இருந்து பாலாஜியை நீக்க வேண்டும் என்று போர் கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவனின் சமூக வலைதளங்களை அட்மினாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் செய்தியாளர் ஒவருக்கும் தலைவருக்கும் பெரிய நெருக்கம் இருந்ததாக இவரே பல இடங்களில் போதையை போட்டுவிட்டு சொல்லியிருக்கிறார். அந்த பெண் செய்தியாளர் பற்றி பல்வேறு புகார்கள் எழுந்ததும் திருமாவளவன் தனது அட்மின் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி வெளியேற்றி விட்டார்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் தமிழ்நாடு மாநில பொறுப்பில் இருக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த அரி என்பவரை ஆள் வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்.தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்தும் எஸ் எஸ் பாலாஜி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல பின் ஒருவர் தன் சாதி பெயர் சொல்லி திட்டியதாக எஸ்சி எஸ்டி ஆணையத்தில் எஸ்எஸ் பாலாஜி மீது புகார் அளித்துள்ளார் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருப்போரூர் தாலுகாவில் தாசில்தார் ஆக பணியாற்றிய தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நேரில் சந்தித்த எஸ் எஸ் பாலாஜி நீ எல்லாம் என்ன பெரிய மயிரா உனக்கு ஒரு போலி பட்டா கூட போட தெரியாதா நாயே என்று சாதியின் பெயர் சொல்லி அவரை திட்டினாராம் அது மட்டுமலுலாமல் அவரை பணி மாற்றமே செய்து விட்டாராம். 
இது தொடர்பான செய்தி புகார் தலைவர் திருமாவளவனுக்கு அனுப்பியும் திருமாவளவன் எஸ் எஸ் பாலாஜி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி எஸ் எஸ் பாலாஜி மீது தோண்டத் தோண்ட பல புதிய பூகம்பம் வெடிக்கும் வகையில் பல புகார்கள் எழுந்து வருகிறது ஆனால் திருமாவளவன் அவர் மீது இதுவரை ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருக்கிறார் என்ற காரணம் தெரியவில்லை என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.
கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு பங்களாவில் உட்கார்ந்து கொண்டு உல்லாசமாக இருக்கும் பொழுது ஜாலி மூடில் எஸ்எஸ் பாலாஜி பேசிய ஆடியோ மற்றும் வீடியோக்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அதை நீங்கள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நமது அலுவலகத்திற்கு பலர் தொலைபேசி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர்.
தலைவர் திருமாவளவன் மீது பழி சொல்லும் வகையில் எஸ் எஸ் பாலாஜி நடந்து கொள்வது ஏன் தலைவரை மிரட்டி தனது பதவியை தக்க வைத்துக் கொள்ளவா அல்லது தலைவரைப் பற்றி அவதூறு பழி சொல்லி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு மீண்டும் திருப்போரூர் தொகுதியில் நின்று எம்எல்ஏ ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் செய்கிறாரா? என்கின்றனர் திருப்போரூர் விடுதலை சிறுத்தைகளும் வாக்காள பெருமக்களும் இப்போதாவாது வாய் திறப்பாரா திருமாவளவன்.
இந்த செய்தி குறித்து எஸ்.எஸ். பாலாஜி அவர் தரப்பு விளக்கம் அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.