Chennai Reporters

பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு குவியும் பாராட்டு…

உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை தோலில் தூக்கிக்கொண்டு ஓடி காப்பாற்றி பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி……

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார்.

தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார்.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு விரைந்து வந்து பார்த்த போது அவர் உடலில் அசைவு இருந்து உள்ளது.

சிறிதும் தாமதிக்காமல் யாரையும் எதிர்பார்க்காமல் உதயாவை தனது தோலில் தூக்கிக் கொண்டு வந்து பிறகு ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.

அங்கு உதயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை நெகிழச்சிய ஏற்படுத்தியுள்ளது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!