chennireporters.com

#Congress; ஃபோட்டோ அரசியல் செய்து ஈரோட்டில் தோற்றுப்போன காங்கிரஸ் பிரமுகர்.

#tn election26; #congress special story; #big story; 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோற்றதற்கு காரணம் என்ன என்று கதர் சட்டைக்காரர்களே சமூக வலைதளங்களில் பல காரணங்களை சுட்டிக்காட்டி பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Indian National Congress - Wikipediaஅது குறித்து நமது அலுவலகத்திற்கும் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு புகாரும் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் கூறியிருப்பதை காங்கிரஸ் கட்சியினருக்கும் நமது வாசகர்களுக்கும் அப்படியே வழங்குகிறோம்.

கோபிநாத் பழனியப்பனின் போட்டோ அரசியல்;

கோபிநாத் பழனியப்பன் அவர்கள் பல வருடங்களாக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக இருந்தும் கட்சியை ஒரு சிறிதளவும் வளர்க்கவில்லை என்பதுதான் உண்மை. போட்டோ அரசியல் மட்டுமே செய்து கொண்டு இருந்திருந்தார். திடீரென்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக பதவி பெற்றார். எதன் அடிப்படையில் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக ஆனார் என்று சற்று உற்று நோக்கி பார்த்தோமேயானால் தனது கட்சியை வளர்ப்பதற்காக ஒரு சிறிதும் செலவு செய்யாத இவர் அடுத்தவர்களிடம் வசதி  படைத்தவர்களிடம் நீங்கள் அதை செய்யுங்கள் இதை செய்யுங்கள் என்று தனது கட்டளையை இட்டு அனைவரையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி அசியல் செய்து வருகிறார்.Gopinath Palaniyappan (@gopi.congress) • Facebookகோபிநாத் பழனியப்பன்.

அப்படி பாதிக்கப்பட்டவர் தான் காரை புதூர் முருகேசன்.  இவரை மீறி அங்கு ஒருவரும் செயல்படக் கூடாது என்ற ஆணவம் இவரிடத்தில் அதிகமாக இருந்தது. இன்றளவும் அங்கு காங்கிரஸ் ஒரு சுமாரான வளர்ச்சி கூட அடையவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தனது பதவியை வைத்துக்கொண்டு அவர் மட்டும் தான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி போகிறாராரே தவிர கட்சியை வளர்க்க அவர் எந்த விதத்திலும் பாடுபடவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படிப்பட்டவர்களுக்கு தான் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை சீட் வழங்கி வெற்றி பெறக்கூடிய தொகுதியை இன்று இழந்து  நிற்க்கிறது. கோபிநாத் பழனியப்பன் தொடர்ந்து மூன்று முறை தோல்வியை தழுவியிருக்கிறார். அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பது உண்மை தான் போலும் இவரைப் போன்ற ஆட்கள் இனி கட்சிக்கு தேவையில்லை . திருப்பூர் மாவட்ட தலைவராக செயல்பட்டதிலிருந்து அவர் புகைப்பட அரசியல் மட்டுமே செய்வாரே தவிர அவருக்கு  கள அரசியல்  செய்யவே தெரியாது. அதை செய்ததும் கிடையாது கிடையாது.

தற்பொழுது கே.சி. வேணுகோபாலிடம் பணத்தை கொடுத்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக நான் பொறுப்பேற்று இருக்கிறேன். அதற்கு பிறகு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் நான் சொல்வதை கேட்பார் எனக்கு அவர் பக்கபலமாக இருக்கிறார். நான் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றதற்கு அவர் தான் முக்கிய காரணம் என தனது கட்சிக்கார ர்களிடம் மார் தட்டி சொல்லி வருகிறார் கோபிநாத் பழனியப்பன்.

தமிழ்நாடு அளவில் தனக்கான ஒரு ஆதரவாளர் கூட்டத்தை ஏற்படுத்தி கோஷ்டி அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் எந்த வித முன்னேற்றம் இல்லாமல் போனதற்கான காரணம் இவரையே  சாரும் என்கிறார்கள் திருப்பூர் மாவட்ட கதர் சட்டைகாரர்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களிடம் வெளியூரை சேர்ந்தவர் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வேட்பாளர் என்று மக்கள் மனதில் பதியும் அளவிற்கு எதிர்க்கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். சமூக வலைதளத்தில் பதிவிட்ட திருப்பூர் மாவட்டத்தை சார்ந்தவர்களின் பதிவுகளை வாட்ஸ் அப் குழுவில் அதிகம் பகிர்ந்தார்கள் ஈரோடு பகுதியில் இதை வைரலாக்கினார்கள்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இவரை யார் என்று தெரியாது.  நிர்வாகிகளின் பெயரும், பொறுப்பும் கூட இவருக்கு தெரியாது. அவர்கள் எந்த பகுதியை சார்ந்தவர் என்றும் தெரியாது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒரு தெருவின் பெயர் கூட இவருக்குத் தெரியாது. இவரைப் போன்ற நபர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராகவும் அறிவித்தது காங்கிரஸ் கட்சி தலைமை செய்த மிகப்பெரிய தவறு என்கிறார்கள்.

தனது மாவட்டத்தில் இதுவரை ஒரு மகளிர் காங்கிரஸ் நிர்வாகியை கூட  வளர விடவில்லை என்பது உண்மை. இதே போன்று தான் திருப்பூர் தெற்கு மாவட்டத்திலும் மரியாதைக்குரிய தென்னரசு அவர்கள் மகளிர் காங்கிரஸின். மாவட்ட தலைவராக எவரையும் அனுமதிப்பதே இல்லை.

இந்த மாதிரி சூழல் இருந்தால் காங்கிரஸ் கட்சி எப்படி வளர முடியும். மகளிருக்கும் மரியாதை கொடுக்கிறேன் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை  மரியாதையுடன் தான் நடத்துகிறேன் என்றெல்லாம் போட்டோ அரசியலில் மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் கோபிநாத் பழனி அப்பன் அவர்கள் இன்று ஈரோடு கிழக்கில் நின்று தோல்வியை தழுவி இருப்பது ஆச்சரியம் ஒன்றுமில்லை.

எப்பொழுது அவர் ஈரோடு கிழக்கு பகுதியை கேட்டுப் பெற்றாரோ அப்பொழுதே அவர் தோல்வியடைவார் என்பது உறுதியாகிவிட்டது. காரணம் தனது கட்சியை சார்ந்தவர்களுக்கும் தனது மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கும் ஒரு சிறுதேனும் ஏன்? எள்ளலவேனும் உதவிக்கரம் நீட்டாத கூமுட்டை பழனியப்பன் எம்எல்ஏவாக வந்து என்ன கிழிக்க போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

காங்கிரஸ்காரர்கள் யாரும் இவருக்கு  அடிமைகள் இல்லை.  ஆனால் இவர்  தனது கட்சி நிர்வாகிகளை அடிமைகள் போல் தான் இவர் நடத்தி வருகிறார்.  அவருடன் இருப்பவர்களை வயது வித்தியாசம்  பார்காமல் மிரட்டி கொண்டு இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியாக  காங்கிரஸ் இணைந்த பிறகு எந்த வித மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. காரணம் திமுகவின் ஆதரவு மன நிலையிலேயே தற்போது வரை இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. இவரை போன்று இருக்கும் மாவட்ட தலைவர்களை முதலில் நீக்கினால் மட்டுமே காங்கிரஸ் கட்சி உருப்படும்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பிறகு 20 வருடங்களுக்கு மேலாக ஜாபர் சாதிக் என்பவர் அந்த பகுதியில் தொடர்ந்து கவுன்சிலராக வெற்றி பெற்று வருகிறார். நான்காவது மண்டல தலைவராகவும் ஜாபர் சாதிக் செயல்பட்டார். எந்தவித மதிப்பும் மரியாதையும் அவருக்கு தரவில்லை. கட்சியில்  முக்கியத்துவம் தரவில்லை அதனால் இவர் கட்சியிலிருந்து பிரிந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். ஈரோடு மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராக பதவி வகித்த காங்கிரஸ் கட்சியின் சார்ந்த பாபு என்கிற வெங்கடாசலமும் கட்சியை விட்டு விலகினார்.

ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர்   பொறுப்பேற்ற பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறி கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இவரை போன்ற திமுகவின் ஆதரவு மனநிலையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி கூட சிந்திக்காத நபர்களை மாவட்ட தலைவராக இருந்து நீக்க வேண்டும் என்பது மூத்த நிர்வாகிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கோபிநாத் பழனியப்பன் கே.சி வேணுகோபாலிடம் நேரடி தொடர்பில் இருக்கிறேன் அதனால் என்னை யாரும்  ஒன்னும் செய்ய முடியாது ஏன் ராகுல் காந்தியே என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற மிதப்பில்  ஆணவத்துடன் பேசி வருகிறார் என்கிறார்கள் ஈரோடு மாவட்ட கதர் சட்டைக்காரர்கள். இந்த விஷயம் கே.சி வேணுகோபாலுக்கு தெரியுமா என்பதை ராகுல்காந்தி தான் முடிவெடுக்கவேண்டும். 

இந்த செய்தி குறித்து கோபிநாத் பழனியப்பனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த செய்தி குறித்து அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதையும் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

@RahulGandhi @kcvenugopal @sudha @jothimani @gopinath pazhaniyappan @tvk @Jaffer Sadiq

இதையும் படிங்க.!