தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் கட்சி செயலிழந்து கவலைக்கிடமாக இருப்பதாக அந்தக் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள், இளைஞர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதுகுறித்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கவலைக்கிடமாக இருப்பதாகவும், அந்த கட்சி இந்த நிலைக்கு இருப்பதற்கு யார் காரணம் என்று சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது. அந்தப் பதிவை காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் நமது வாசகர்களுக்கும் அப்படியே வழங்குகிறோம்.உண்மையான காங்கிரஸ்காரனாக நான் இந்த பதிவை பதிவிடுகிறேன் !!தமிழ்நாட்டில் உள்ள இன்றைய காங்கிரஸ் நிலைமைக்கு யார் காரணம்?
அகில இந்திய காங்கிரஸ் புதுச்சேரி & தமிழ்நாடு பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. நிவேதித் ஆல்வா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். செல்வப் பெருந்தகை அவர்களுக்கு இந்த தோல்வி சமர்ப்பணம் !!!
காங்கிரஸ் + தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைய வேண்டும் என்று விரும்பிய ராகுல் காந்தி அவர்களுக்கு துணையாக நின்ற KC வேணுகோபால் , பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் மற்றும் அருள் பெத்தையா அவர்களுடைய அரசியல் யூகத்திற்கு சல்யூட்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டதற்கு பலரின் சுயநலமே காரணம். தொண்டர்களின் கருத்துக்கு கொஞ்சம் கூட செவிசாய்க்காத தலைவர்களே காரணம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி விலக வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி மேலிட பொறுப்பாளர்கள் நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருந்தும் அதை சரியான முறையில் பயன்படுத்தாமல், சரியான வேட்பாளர் தேர்வு இல்லாமல், பணம் படைத்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தந்ததின் விளைவாக புதுச்சேரியில் காங்கிரஸ் மண்ணை கவ்வியது.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை நீக்கி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் டெல்லி தலைமை அங்கு புதிய தலைவரை நியமனம் செய்ய வேண்டும்.
மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வயதான நபர்கள் சற்று வழி விட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் . காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை மட்டும் சிந்திக்கும் நபர்களை புதிய மாநில தலைவரை நியமிக்க வேண்டும்
அகில இந்திய தலைமை தமிழகத்தில் வேட்பாளர்கள் தேர்வு எப்படி நடைபெற்றது என்று விசாரணை செய்ய வேண்டும். மேலும் மாவட்டத் தலைவர் நியமனத்திலும் பல முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது. மாவட்ட தலைவர்களை நீக்கிவிட்டு புதிய மாவட்ட தலைவர்களை தமிழ்நாடு அளவில் நியமிக்க வேண்டும்.
பணம் படைத்தவர்களும் அதிகாரம் படைத்தவர்களும் மூத்த தலைவர்களின் அரசியல் வாரிசுகளை மட்டும் பிரதனம் படுத்தாமல் கட்சிக்காக நீண்ட வருடங்களாக உழைக்கும் நபர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
பென்னாகரம் தொகுதியில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத வேட்பாளர் தமிழ் குமரன் இன்று மூன்றாம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார். இவருக்கு யார் சீட் கொடுத்தது ? ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நின்ற அத்தனை முறையிலும் வெற்றி பெற்றது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத கோபி என்பவரை யார் வேட்பாளராக நியமித்தது.
இதே போல சிங்காநல்லூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி தொகுதிக்கு புதியவர் அது மட்டுமல்லாமல் கட்சிக்கும் புதியவர் . அவர் ஏற்கனவே மக்கள் நீதி மையத்தில் உடுமலைப்பேட்டை தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 
இவர் கட்சிக்குள் எப்படி வந்தார்? யாரைப் பிடித்தார்? தற்போது அவர் கட்சியில் ஐந்து பதிவிகளுக்கு மேல் வைத்துள்ளார். அந்தப் பகுதியில் பலர் கட்சியின் மூத்தவர்களாகவும் கட்சிகாக உழைத்தவர்கள் இருந்தும் கூட இவருக்கு எப்படி கட்சி தலைமை சீட்டு வழங்கியது?. கிரிஷ் ஜோடாங்கிர், செல்வப் பெருந்தகை ஆகியோருக்கு பணம் கொடுத்து தான் சீட்டு வழங்கினார் என்று நமது கட்சியினரே வெளிப்படையாக பேசி வருகின்றனர் என்று குற்றம் சொல்கிறார்கள். இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்.
இனி வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியில் அந்தந்த பகுதியில் சேர்ந்தவர்களை மட்டுமே வேட்பாளராக அறிவிக்க வேண்டும். த.வெ.க வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணங்கள் சாமானியர்களை வேட்பாளராக அறிவித்தது தான் வெற்றிக்கு முக்கிய காரணம்.மேலும்
இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு தரப்பட்டது. தமிழ்நாடு வாக்காளர்கள் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல ஆகிவிடும் ஆனால், இன்றே விழித்துக்கொள்ளாவிட்டால் 140 வருட கட்சி மறைந்துவிடும் ஏன் அழிந்தே போய்விடும்.
தலைவர் ராகுல் காந்தி அவர்களை ஏமாற்றிய அனைவரும் உண்மையிலேயே வருத்தப்பட்டு பதவி விலக வேண்டும். மாற்றத்திற்கான அரசியலை நோக்கி நாமும் பயணிப்போம். என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்தி:
பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியடைந்ததற்கு காரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கிரே என்கின்றனர் கட்சியின் மூத்த முக்கிய நிர்வாகிகள்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் பல முக்கிய நபர்களிடம் கிரீஸ் ஜோடங்கிர் பல லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்று பதவிகளை வழங்கியுள்ளார் என்று தெரிகிறது. இதுகுறித்து ராகுல் காந்தி தனி விசாரணை கமிட்டி அமைத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பழைய கதர் சட்டையினர்.
