#TN assembly election 2026#
2026 சட்டப்பேரவைத் தேர்தல்
சிபிஐ(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (30.03.2026) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், கே. பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
share.chennai reporters/web.com
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் கீழ்க்கண்ட ஐந்து வேட்பாளர்களையும் கட்சியின் மாநிலக்குழு தேர்வு செய்துள்ளது.
வ சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெயர்
1. பழனி என் பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர்
2. கந்தர்வக்கோட்டை எம். சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர்
3. பத்மநாபபுரம் ஆர். செல்லசுவாமி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர்
4. திருவொற்றியூர் எல். சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர்
5. கீழ்வேளூர் டி. லதா, நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்
வேட்பாளர்களை மாநில செயலாளர் பெ சண்முகம் அறிவித்தார்.
